திட்டக்குடி அருகே பட்டதாரி வாலிபர் தற்கொலை

மனோஜ்குமார் பி.எஸ்.சி.,பட்டதாரியான இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது.சம்பவத்தன்று மனோஜ்குமாருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதைத்தாங்கமுடியாத அவர், மதுவில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்தார்.
திட்டக்குடி அருகே பட்டதாரி வாலிபர் தற்கொலை
Published on

கடலூர்:

திட்டக்குடி, அருகே ராமநத்தம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல்மகன் மனோஜ்குமார்(வயது 26) பி.எஸ்.சி.,பட்டதாரி. இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று மனோஜ்குமாருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதைத்தாங்கமுடியாத அவர், மதுவில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்தார். உறவினர்கள்அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மனோஜ்குமார், சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com