search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக நிர்வாகிகள்"

    • காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
    • உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில், மதுரை, தேனி நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    எ.வ.வேலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

    காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், இன்று மதுரை, தேனி நிர்வாகிகளுடன் நடைபெற்றது.

    • பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
    • தி.மு.க.வில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நாமக்கல், ஈரோடு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

    கூட்டத்தில் நாமக்கல் மற்றும் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொறுப்பு அமைச்சர், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களிடம் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    மேலும் தொகுதியின் தற்போதைய கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார், தொகுதியில் கூட்டணிக் கட்சியினரின் பலம், தி.மு.க.வில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்கப்பட்டது.

    முன்னதாக, நேற்று கோவை, சேலம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. மருத்துவ அணி இணைச் செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் அ.சுபேர்கானை (ராயப்பேட்டை) அப்பொறுப்பில் இருந்து விடுவிப்பு.
    • ஜாகிர் உசேன் (திருச்சி). தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அணி துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    சென்னை:

    தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆ.அங்கையற்கண்ணி. முன்னாள் எம்.எல்.ஏ. தேவ பாண்டலம் அஞ்சல், (சங்கராபுரம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்), தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    எம்.ராஜகாந்தன், (சென்னை), ஆர்.வரதன், (சென்னை). நா. தமிழ்செல்வன். (சென்னை). பி.விஜயகுமார் (கடம்பன் குறிச்சி. மண்மங்கலம், கரூர்). சி.காசி. (வளையம்பாளையம், ஜலகண்டபுரம், சேலம்) ஆகியோர் தி.மு.க. தொழிலாளர் அணி துணை செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    த. சித்தார்த்தன் (கள்ளக்குறிச்சி), சூடப்பட்டி சுப்பிரமணியன் ஆகியோர் தி.மு.க. விவசாய அணி துணை செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    கணேஷ் குமார் ஆதித்தன் (திருநெல்வேலி) தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    கே.பி.சங்கர் எம்.எல்.ஏ., (திருவொற்றியூர், சென்னை). தி.மு.க. மீனவர் அணி துணை தலைவராக மனோகரன் (நாகப்பட்டினம்), ஆர்.பத்மநாபன் (திருவொற்றியூர், சென்னை) ஆகியோர் தி.மு.க. மீனவர் அணி துணைச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்,

    ஜாகிர் உசேன் (திருச்சி). தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அணி துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    இரா. தாமரைச்செல்வன், (முன்னாள் எம்.எல்.ஏ. தருமபுரி). தி.மு.க. சட்டத்துறை இணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    எஸ்.ஏ. ரமேஷ், (மருந்தாளுநர் தேனாம்பேட்டை, சென்னை) ஆர்.திலகவதி ஜெயராஜ், (செவிலியர் மதுரை). ராஜேஷ்பாபு, துணை மருத்துவ பணியாளர் ராசிபுரம்), மன்சூர் அலிகான், (மருத்துவ தொழில்நுட்பஉதவியாளர், தாத்தப்பன் குளம் கம்பம்).

    செண்பகவிநாயகம், (சித்தமருத்துவர், சிவகிரி) ஆகியோர் தி.மு.க. மருத்துவ அணி துணை செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    கோவை செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. செய்தித்தொடர்பு துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    தி.மு.க. மருத்துவ அணி இணைச் செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் அ.சுபேர்கானை (ராயப்பேட்டை) அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, அதற்கு பதிலாக தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப்பிரிவு செயலாளராகவும், ரபிஅஹமது (அண்ணாநகர், சென்னை). மு.சாகுல்அமீது (நாகை) ஆகியோர் தி.மு.க. சிறுபான்மை நலஉரிமைப் பிரிவு துணைச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    எஸ்.ஆர்.எஸ். உமரி சங்கர், (உமரிக்காடு தூத்துக்குடி). தி.மு.க. வர்த்தகர் அணி இணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    ஏ.பாபு (கன்னியாகுமரி) தி.மு.க. அயலக அணி துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    ஏ.கே.பூபதி (மேலூர், மதுரை), எஸ்.ராம் குமார், (என்.ஜி.ஓ. காலனி, சூளை மேடு, சென்னை). சி.செல்ல துரை (ஓமலூர், சேலம்) ஆகியோர் தி.மு.க. அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    ஆர்.கோபால்ராம். (நொளம்பூர், சென்னை), எஸ்.கார்த்திக் (மூலனூர், திருப்பூர்), மு.வாசிம் ராஜா, (குன்னூர்), சுரேஷ் ஜே.மனோகரன் (மதுரை), நிவேதாஜேசிகா (வேளச்சேரி, சென்னை), வே.கவுதமன் (கலைஞர் நகர், சென்னை) ஆகியோர் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர்களாக தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.

    ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர்கள் இணைந்து பணியாற்றுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் தசரதபுரத்தில் நடைபெற்றது.
    • அங்கிருந்த பெண் காவலரிடம் 2 இளைஞர்கள் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    சென்னை:

    விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி. மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

    கூட்டத்தில் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு கலந்து கொண்டிருந்த நிர்வாகிகள் சிலர் மது போதையில் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தலைவர்கள் பேசும்போதே பின்னாலிருந்து கூச்சல் எழுப்பி கூட்டத்தில் பிரச்சனை செய்த அவர்களை அங்கிருந்த நிர்வாகிகள் கண்டித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களை தொடர்ந்து அவர்கள் ஆபாசமாக பேசி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, நிகழ்ச்சி முடிந்ததும் பாதுகாப்புப் பணியில் இருந்த 22 வயதான பெண் காவலரிடம் அக்கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறவே அந்த பெண் காவலர் கதறி அழுதுள்ளார். இதையடுத்து அருகே இருந்த போலீசார் ஒருவரை பிடித்த நிலையில், மற்றொருவர் தப்பியோடியுள்ளார். இதையடுத்து விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் (24), என்பதும் இவர்கள் இருவரும் தி.மு.க. நிர்வாகிகள் என்பதும் தெரியவந்துள்ளது.

    பெண் காவலரிடம் அத்துமீறி நடந்து கொண்ட தி.மு.க. நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இந்நிலையில், பெண் போலீசாரிடம் அத்துமீறி நடந்து கொண்ட தி.மு.க. நிர்வாகிகளை தற்காலிகமாக கட்சியை விட்டு நீக்கி பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

    பணியில் இருந்த பெண் காவலரிடம் திமுகவினர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    ×