search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேதர் ஜாதவ்"

    • இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது.
    • இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 1,166 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

    மும்பை:

    இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு கடந்த மாதம் 26-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்பித்தன.

    இதனையடுத்து இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 1,166 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் 830 இந்திய வீரர்கள் மற்றும் 336 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கேதர் ஜாதவ் மற்றும் ஹர்சல் படேல் ஆகியோர் தங்களது அடிப்படை விலையை ரூ. 2 கோடியாக நிர்ணயம் செய்துள்ளனர். கேதர் ஜாதவ் ஐபிஎல் தொடரில் 95 போட்டிகளில் விளையாடி 1208 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 அரை சதம் அடங்கும். இதேபோல ஹர்சல் படேல் 92 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

    • இந்த சீசனில் ஆர்சிபி அணியில் இடம் வகித்த ஆல் ரவுண்டர் டேவிட் வில்லி காயம் காரணமாக விலகி உள்ளார்.
    • பெங்களூரு அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

    பெங்களூரு:

    16வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தொடர் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், குஜராத் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இது வரை 42 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

    இதில் குஜராத் அணி முதல் இடத்திலும், லக்னோ, ராஜஸ்தான், சென்னை அணிகள் 2 முதல் 4 இடங்களில் உள்ளன. மிகவும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் தொடரை தொடங்கிய பெங்களூரு அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணியில் பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த சீசனில் ஆர்சிபி அணியில் இடம் வகித்த ஆல் ரவுண்டர் டேவிட் வில்லி காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு மாற்று வீரராக ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவை அந்த அணி சேர்த்துள்ளது.

    • ருதுராஜ் ஐபிஎல் 2020ல் தனது ஐபிஎல் அறிமுகத்தை தொடங்கினார்.
    • இருவரும் அடுத்ததாக நவம்பர் 19-ம் தேதி விஜய் ஹசாரே டிராபியின் எலைட் குரூப் போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா அணிக்காக களமிறங்குவார்கள்.

    சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் டோனி தான் வாங்கிய புதிய எஸ்யூவி காரில் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் இரவு நேரத்தில் பயணம் மேற்கொண்டார்.

    ஐபிஎல் 2022 முடிவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி விளையாட்டில் இருந்து விலகி தனது குடும்பத்துடன் சில இடங்களுக்குச் சென்றார். சமீபத்தில் ராஞ்சியில் நடந்த டென்னிஸ் போட்டியில் பங்கேற்று இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்றார் டோனி.

    இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2023) அடுத்த சீசனுக்கு அவர் தயாராகிக்கொண்டிருக்கும்போது, ​​சிஎஸ்கே கேப்டன் சமீபத்தில் சிஎஸ்கே அணி வீரர்களுடன் புதிதாக வாங்கிய எஸ்யூவியில் பயணம் மேற்கொண்டுள்ளார். டோனி சமீபத்தில் KIA SV6 என்ற காரை வாங்கியுள்ளார். இது முழுக்க மின்சார கார் ஆகும்.

    ஆன்லைனில் வைரலான அந்த வீடியோவில், ராஞ்சியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முன்னாள் அணி வீரர் கேதர் ஜாதவ் ஆகியோருடன் எம்எஸ் டோனி காணப்பட்டார். சிஎஸ்கே வீரர்கள் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவதற்காக வந்திருந்தனர். இருவரும் டோனியை சந்தித்தது மட்டுமல்லாமல், அவரது புதிய எஸ்யூவியில் பயணம் செய்யும் வாய்ப்பையும் பெற்றனர்.

    இருவரும் அடுத்ததாக நவம்பர் 19-ம் தேதி விஜய் ஹசாரே டிராபியின் எலைட் குரூப் போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா அணிக்காக களமிறங்குவார்கள். மகாராஷ்டிரா தற்போது போட்டியில் தோல்வியடையாமல் உள்ளது மற்றும் சர்வீசஸ் அணியை வீழ்த்தினால் குழுவில் முதலிடத்தை பிடிக்க முடியும். ருதுராஜ் ஐபிஎல் 2020ல் தனது ஐபிஎல் அறிமுகத்தை தொடங்கினார். 2021ல் சிஎஸ்கேயில் நிரந்தர உறுப்பினரானார். மறுபுறம் ஜாதவ் சென்னை அணிக்காக மூன்று ஆண்டுகள் விளையாடினார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் பந்து வீச்சை வைத்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி ட்வீட் போட, பாஜக பாகிஸ்தான் அணியை குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளது. #INDvPAK #KedarJadhav
    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. வெற்றிக்கு முக்கிய காரணமான சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தானை 162 ரன்களுக்குள் இந்திய பந்துவீச்சாளர்கள் சுருட்டியதன் காரணமாக இந்தியாவின் வெற்றி எளிதாகியது.

    இந்நிலையில், போட்டி முடிந்ததற்கு பின் ட்வீட் செய்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. திவ்யா ஸ்பந்தனா, “கேதர் ஜாதவின் பந்துவீச்சு வேகம் குறைந்துள்ளது. ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பின் அளவுக்கு குறைந்துவிடவில்லை” என மத்திய அரசை கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார்.



    இதற்கு பதிலடி கொடுத்த அம்மாநில பாஜக, “கேதர் ஜாதவ் பந்து வீச்சை பற்றி எந்த கருத்தும் இல்லை. ஆனால், உங்கள் (திவ்யா ஸ்பந்தனா) அறிவுத்திறன் ஒட்டு மொத்த பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டை விட குறைவுதான்” என ட்வீட் செய்துள்ளது. 
    ×