என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
புதிய கார் வாங்கிய டோனி: ருதுராஜ், கேதர் ஜாதவுடன் இரவு நேர பயணம்
- ருதுராஜ் ஐபிஎல் 2020ல் தனது ஐபிஎல் அறிமுகத்தை தொடங்கினார்.
- இருவரும் அடுத்ததாக நவம்பர் 19-ம் தேதி விஜய் ஹசாரே டிராபியின் எலைட் குரூப் போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா அணிக்காக களமிறங்குவார்கள்.
சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் டோனி தான் வாங்கிய புதிய எஸ்யூவி காரில் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் இரவு நேரத்தில் பயணம் மேற்கொண்டார்.
ஐபிஎல் 2022 முடிவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி விளையாட்டில் இருந்து விலகி தனது குடும்பத்துடன் சில இடங்களுக்குச் சென்றார். சமீபத்தில் ராஞ்சியில் நடந்த டென்னிஸ் போட்டியில் பங்கேற்று இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்றார் டோனி.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2023) அடுத்த சீசனுக்கு அவர் தயாராகிக்கொண்டிருக்கும்போது, சிஎஸ்கே கேப்டன் சமீபத்தில் சிஎஸ்கே அணி வீரர்களுடன் புதிதாக வாங்கிய எஸ்யூவியில் பயணம் மேற்கொண்டுள்ளார். டோனி சமீபத்தில் KIA SV6 என்ற காரை வாங்கியுள்ளார். இது முழுக்க மின்சார கார் ஆகும்.
ஆன்லைனில் வைரலான அந்த வீடியோவில், ராஞ்சியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முன்னாள் அணி வீரர் கேதர் ஜாதவ் ஆகியோருடன் எம்எஸ் டோனி காணப்பட்டார். சிஎஸ்கே வீரர்கள் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவதற்காக வந்திருந்தனர். இருவரும் டோனியை சந்தித்தது மட்டுமல்லாமல், அவரது புதிய எஸ்யூவியில் பயணம் செய்யும் வாய்ப்பையும் பெற்றனர்.
இருவரும் அடுத்ததாக நவம்பர் 19-ம் தேதி விஜய் ஹசாரே டிராபியின் எலைட் குரூப் போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா அணிக்காக களமிறங்குவார்கள். மகாராஷ்டிரா தற்போது போட்டியில் தோல்வியடையாமல் உள்ளது மற்றும் சர்வீசஸ் அணியை வீழ்த்தினால் குழுவில் முதலிடத்தை பிடிக்க முடியும். ருதுராஜ் ஐபிஎல் 2020ல் தனது ஐபிஎல் அறிமுகத்தை தொடங்கினார். 2021ல் சிஎஸ்கேயில் நிரந்தர உறுப்பினரானார். மறுபுறம் ஜாதவ் சென்னை அணிக்காக மூன்று ஆண்டுகள் விளையாடினார்.