என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக் கூடாது - கேதர் ஜாதவ்
    X

    ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக் கூடாது - கேதர் ஜாதவ்

    • செப்டம்பர் 9-ம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.
    • ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் துபாயில் மோதுகிறது

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தச் சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28-ம்தேதி பைனலில் மோதும்.

    ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் துபாயில் மோதுகிறது

    இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடவே கூடாது என விரும்புகிறேன் என்று பாஜக உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

    ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்வது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கேதர் ஜாதவ், "இந்தியா எங்கு விளையாடினாலும் வெற்றி பெறும். ஆனால் இந்தப் (பாகிஸ்தான் உடனான) போட்டியை விளையாடவே கூடாது. விளையாடவும் மாட்டார்கள். நம்பிக்கையுடன் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×