search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று 4-வது போட்டி- மிடில்ஆர்டர் வரிசையில் இந்தியா எழுச்சி பெறுமா?
    X

    இன்று 4-வது போட்டி- மிடில்ஆர்டர் வரிசையில் இந்தியா எழுச்சி பெறுமா?

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடக்கிறது. #INDvWI #ViratKohli #MSDhoni #KedarJadhav
    மும்பை:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    கவுகாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விசாகப்பட்டனத்தில் நடந்த 2-வது ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. புனேயில் நடந்த 3-வது போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 1-1 என்ற சமநிலை உள்ளது.

    இன்றைய 4-வது போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடுவதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.

    கடந்த போட்டியில் ஏற்பட்ட வெற்றியால் வெஸ்ட்இண்டீஸ் நம்பிக்கையுடன் இருக்கிறது. அந்த அணி இந்தியாவை வீழ்த்தி முன்னிலை பெறும் வேட்கையில் இருக்கிறது.

    இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசை மிகவும் மோசமாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்திலாவது மிடில் ஆர்டர் வரிசை எழுச்சி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் 4 வரிசையில் இந்திய அணி நன்றாக இருக்கிறது. தொடக்க வீரர்களான ரோகித்சர்மா, தவான், விராட்கோலி, அம்பதி ராயுடு ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் 5 முதல் 7-வது வரிசை தான் மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த வரிசையின் சராசரி 28.68 ஆக இருக்கிறது.

    கடைசி 2 போட்டிக்கான இந்திய அணியில் கேதர்ஜாதவ் இடம் பெற்றுள்ளார். அவரது வருகையால் மிடில் ஆர்டர் வரிசை பலம் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    ரிசப்பண்ட் இடத்தில் கேதர்ஜாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    மோசமான நிலையில் இருக்கும் டோனி சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளார். அவர் நேற்று 45 நிமிடம் பயிற்சியில் ஈடுபட்டார். #INDvWI #ViratKohli #MSDhoni #KedarJadhav
    Next Story
    ×