என் மலர்
நீங்கள் தேடியது "எரிபொருள் தட்டுப்பாடு"
- சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
- எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து , தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து,
தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
என்று தெரிவித்துள்ளார்.
- பெங்களூருவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தபட்டுள்ளன.
- ஹோட்டல்கள், உணவகங்கள், விடுதிகளுக்கு கியாஸ் விநியோகம் தடைபட்டுள்ளது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு, ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போர் சூழல் காரணமாக, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது.
இந்த நிலையில் வீடுகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் சமையல் கியாஸ் விநியோக்கும் வகையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விநியோகத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அதன்படி மும்பை, பெங்களூருவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன. இதன் காரணமாக பெங்களூருவில் நாளை முதல் உணவகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையிலும் ஓட்டல்களுக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவில் வணிக பயன்பாட்டுக்கான LPG கியாஸ் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுதுறை அமைச்சருக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "லட்சக்கணக்கான மக்களுக்காக தினமும் இயங்கும் ஹோட்டல்கள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு கியாஸ் விநியோகம் தடைபட்டுள்ளது. போதுமான வணிக சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
- மத்திய அரசு மக்களுக்கு தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்
- தமிழ்நாடு அரசு அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர்ச்சூழல் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு உணவகங்கள், டீக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை கோரியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மேலும் மாநில அரசும் இதில் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில் கூறியுள்ளதாவது,
"ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழ்நாட்டில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- அரசு அதிகாரிகளுக்கான பெட்ரோல், டீசல் ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானில் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவித்து உள்ளார்.
மேலும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளுக்கான பெட்ரோல், டீசல் ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மந்திரிகளின் பாதுகாப்பு வாகனங்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கியைத் தவிர அரசு அலுவலகங்கள் அனைத்தும் வாரத்தில் 4 நாட்கள் மட்டும், 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- போதிய அளவில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- மும்பை, பெங்களூருவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன.
சென்னை:
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு, ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போர் சூழல் காரணமாக, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது.
நாடு முழுவதும் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விற்கின்றன.
வீடுகளில் 2 சமையல் கியாஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை சிலிண்டர் முன்பதிவு செய்து வாங்கலாம். வணிக பயன்பாட்டிற்கு தேவைக்கு ஏற்ப சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வீடுகளுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளன.
ஒரு சிலிண்டரை வாங்கிய பிறகு மற்றொரு சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை மத்திய அரசு 25 நாட்களாக நீட்டித்து அறிவித்துள்ளது. மேலும் தட்டுப்பாட்டை குறைக்க வீட்டு உபயோக சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
போதிய அளவில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சமமான பெட்ரோலிய பொருட்கள் விநியோகத்தை சீரமைக்கும் வகையில், சமையல் எரிவாயு, சிலிண்டர் விநியோகத்தை ஒழுங்குபடுத்த அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு தீவிரமாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
கள்ளச்சந்தையில் பதுக்கி கியாஸ் சிலிண்டரை விற்றால் இந்த சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
இந்த நிலையில் வீடுகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் சமையல் கியாஸ் விநியோக்கும் வகையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விநியோகத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அதன்படி மும்பை, பெங்களூருவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன. இதன் காரணமாக பெங்களூருவில் நாளை முதல் உணவகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையிலும் ஓட்டல்களுக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையிலும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வீட்டு உபயோக சிலிண்டர்கள் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் உறுதியளித்து உள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உலகளாவிய அரசியல் சூழலால் சிலிண்டர் எரிவாயு விநியோகச் சங்கிலியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு எதிரொலியாக தொழில், வணிக வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே வணிக சிலிண்டர்கள் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. மின்சார அடுப்பு போன்ற வசதிகளை கொண்ட ஓட்டல்கள் ஓரளவுக்கு தாக்குப் பிடிக்கலாம் எனவும், கியாஸ் சிலிண்டரை மட்டுமே நம்பியிருக்கும் சிறிய ஓட்டல்கள் பாதிக்கப்படும் எனவும் ஓட்டல்கள் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது.
இது குறித்து கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தென் மண்டல செயலாளர் செந்தில் கூறுகையில், தென் மண்டலத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களிலும் தினசரி ஒரு கியாஸ் டேங்கர் லாரிக்கு 18 டன் கியாஸ் வீதம் 1500 கியாஸ் டேங்கர் லாரிகளில் கியாஸ் நிரப்பப்பட்டு வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு விநியோகம் நடைபெற்று வருகிறது.
தென் மண்டலத்திற்கு உட்பட்ட 6 மாநிலங்களிலும் வீடுகளுக்கு தேவையான கியாஸ் சிலிண்டர்கள் இருப்பு 3 வாரங்களுக்கு போதுமான அளவு உள்ளது. ஓட்டல்கள், வர்த்தக நிறு வனங்களின் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் இந்த வாரத்திற்கு தேவையான இருப்பு உள்ளது. அதற்குள் மத்திய அரசு மாற்று ஏற்பாடு செய்யும். இதனால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன்.
- உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
- வீட்டு உபயோக சிலிண்டர்கள் 3 வாரங்களுக்கு இருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளது.
- இளையான்குடி, மதுரை, நெல்லை ஆகிய 3 நிலையங்களில் வணிய சிலிண்டர்கள் இருப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
போர் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
வணிக பயன்பாடு சிலிண்டர் விநியோகம் பல நகரங்களில் நிறுத்தப்பட்ட நிலையில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை கோரிய நிலையில் தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் 3 வாரங்களுக்கு இருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோல் புதுச்சேரியில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இளையான்குடி, மதுரை, நெல்லை ஆகிய 3 நிலையங்களில் வணிய சிலிண்டர்கள் இருப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
- உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
- அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பெட்ரோல், சிலிண்டர் ஆகியவை அனைவருக்கும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய முடியும்.
போர் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக்க நாடு முழுவதும் எஸ்மா சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்டவை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1951-ஐ மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதன் மூலம் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பெட்ரோல், சிலிண்டர் ஆகியவை அனைவருக்கும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய முடியும்.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டதை அடுத்து பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் எஸ்மா சட்டம் அமலானது.
எஸ்மா சட்டம் அமலானதையடுத்து மாநிலங்களுக்கு இடையிலான எரிபொருள் போக்குவரத்தை மத்திய அரசே நேரடியாக கண்காணிக்கும். மேலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருட்களின் அதிகபட்ச விலையை அரசே நிர்ணயிக்க எஸ்மா சட்டம் வழிவகுக்கும்.
எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் பொருட்களை பதுக்கினால் எஸ்மா சட்டத்தின்படி அபராதம், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பதுக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் (ESMA) கீழ் அபராதம் விதிக்கப்படுவதோடு கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஒரு சிலிண்டர் பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்ய முடியும்.
- ஹோட்டல்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய குழு அமைப்பு.
அமெரிக்கா- ஈரான் இடையேயான போரால் இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு எல்பிஜி சிலிண்டர் வாங்கியபின் மற்றொரு சிலிண்டர் வாங்குவதற்கான கால இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியது.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் சிலிண்டர்களை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை.
ஒரு சிலிண்டர் பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்ய முடியும்.
ஹோட்டல்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய குழு அமைப்பு.
சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் நேரடியாக நம் வீட்டு அடுப்பங்கரையிலும், அன்றாட உணவிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன," என குறிப்பிட்டுள்ளார்.
- கச்சா எண்ணெய் உற்பத்தியை அந்நாடுகள் குறைத்து விட்டன.
- உலகின் பெரும்பாலான நாடுகளில் கச்சா எண்ணெய் வரத்து குறைது விட்டது.
ஈரான் மீது கடந்த 28-ந்தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கின. அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
சவுதி அரேபியா, ஈராக், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு, ஈரான் மற்றும் ஓமன் இடையிலான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களில் செல்கிறது. உலக கச்சா எண்ணெய் தேவையில் 20 சதவீதம் அந்த வழியாக செல்கிறது.
ஆனால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. அதனால் அந்த வழியாக கப்பல்கள் செல்வது இல்லை. அந்நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
மேலும், இந்த போர், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளையும் சூழ்ந்து விட்டதால், உற்பத்தி குறைந்து விட்டது.
ஈராக், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கச்சா எண் ணெய் ஏற்றுமதி செய்ய முடியாதநிலையில், சேமிப்பு கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. எனவே, கச்சா எண்ணெய் உற்பத்தியை அந்நாடுகள் குறைத்து விட்டன.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. அதனால் ஈரானில் இருந்து நாள்தோறும் 16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த காரணங்களால் உலகின் பெரும்பாலான நாடுகளில் கச்சா எண்ணெய் வரத்து குறைது விட்டது. அதனால் நேற்று கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் குறுஞ்செய்தி மூலமாக வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம். நாட்டில் தேவைக்கு அதிகமாக எரிபொருள் கையிருப்பில் உள்ளது. சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற செய்திகள் பரவி வருவதாக விளக்கம் அளித்துள்ளது.
- பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
- சில விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்ஸ், எரிபொருள் கிடைக்காததால் 48 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது.
தினசரி விமானங்களுக்கான குறைந்த எரிபொருள் விநியோகம் மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக விமானங்கள், ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், சில விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
- எரிபொருள் வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நிற்கும்போது பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கொழும்பு :
இலங்கையில் கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையின் காரணமாக நாட்டில் எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி தடைபட்டது. இதனல், அந்த நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. அத்துடன், அங்கு கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன. அங்கு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் கியாஸ் நிரப்பும் நிலையங்களில் போதிய அளவுக்கு இருப்பு இல்லாததால் மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.
எரிபொருள் வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நிற்கும்போது பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிபொருள் வாங்க வரிசையில் தொடர்ந்து பல நாட்கள் காத்துக்கிடந்ததால், கிட்டத்தட்ட 20 பேர் சோர்வு காரணமாக இறந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையின் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் டீசல் மற்றும் பெட்ரோல் சில்லறை விலைகளை தலா 20 ரூபாய் நேற்று குறைத்தது, கடந்த பிப்ரவரி முதல், ஐந்து முறை விலை உயர்வுக்கு பிறகு தற்போது விலை குறைந்துள்ளது.
அதன்படி குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நேற்று இரவு 10.00 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. கடைசியாக பெட்ரோல், டீசல் விலை மே மாத இறுதியில் ரூ.50 மற்றும் 60 ஆக உயர்த்தப்பட்டது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு .50 உயர்ந்துரூ.470க்கும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்குரூ.100 உயர்ந்து ரூ.550க்கும், சூப்பர் டீசல் ரூ.75 உயர்ந்து ரூ 520க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






