Cooking Gas | சிலிண்டர் தட்டுப்பாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

வீட்டு உபயோக சிலிண்டர்கள் 3 வாரங்களுக்கு இருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளது. இளையான்குடி, மதுரை, நெல்லை ஆகிய 3 நிலையங்களில் வணிய சிலிண்டர்கள் இருப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
Cooking Gas | சிலிண்டர் தட்டுப்பாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
Published on

போர் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

வணிக பயன்பாடு சிலிண்டர் விநியோகம் பல நகரங்களில் நிறுத்தப்பட்ட நிலையில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை கோரிய நிலையில் தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் 3 வாரங்களுக்கு இருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோல் புதுச்சேரியில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இளையான்குடி, மதுரை, நெல்லை ஆகிய 3 நிலையங்களில் வணிய சிலிண்டர்கள் இருப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com