Fuel Shortage | போர் பதற்றம், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு - எரிபொருட்களுக்கு எஸ்மா சட்டம் அமலுக்கு வந்தது!

உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பெட்ரோல், சிலிண்டர் ஆகியவை அனைவருக்கும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய முடியும்.
Fuel Shortage | போர் பதற்றம், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு - எரிபொருட்களுக்கு எஸ்மா சட்டம் அமலுக்கு வந்தது!
Published on

போர் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக்க நாடு முழுவதும் எஸ்மா சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்டவை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1951-ஐ மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதன் மூலம் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பெட்ரோல், சிலிண்டர் ஆகியவை அனைவருக்கும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய முடியும்.

உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டதை அடுத்து பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் எஸ்மா சட்டம் அமலானது.

எஸ்மா சட்டம் அமலானதையடுத்து மாநிலங்களுக்கு இடையிலான எரிபொருள் போக்குவரத்தை மத்திய அரசே நேரடியாக கண்காணிக்கும். மேலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருட்களின் அதிகபட்ச விலையை அரசே நிர்ணயிக்க எஸ்மா சட்டம் வழிவகுக்கும்.

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் பொருட்களை பதுக்கினால் எஸ்மா சட்டத்தின்படி அபராதம், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பதுக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் (ESMA) கீழ் அபராதம் விதிக்கப்படுவதோடு கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com