search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயற்கை விவசாயம்"

    • நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மையும் அதனை சார்ந்த தொழில்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • மக்கள் தொகையில் 65 முதல் 75 சதவீதம் பேர் விவ சாயத்தை தங்கள் வாழ்வா தாரமாக கொண்டுள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மையும் அதனை சார்ந்த தொழில்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் தொகையில் 65 முதல் 75 சதவீதம் பேர் விவ சாயத்தை தங்கள் வாழ்வா தாரமாக கொண்டுள்ளனர்.

    மேலும் வளர்ந்து வரும் மக்கள் தெகைக்கு தேவை யான உணவு மற்றும் உணவுப் பொருட்களின் பாதுகாப்பினை உறுதிப் படுத்திட இயற்கை விவசா யம் செய்து, நஞ்சில்லா உணவு பொருட்களை உற்பத்தி செய்வதில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மிக முக்கிய அங்கமாக விளங்கு கிறது.

    வேதியியல் பொருட் களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் மண்ணும் நீரும் நச்சுத் தன்மை அடைந்து மனித வாழ்வு நலிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்ப தால், இதனை தவிர்க்கும் விதமாக இயற்கையான எருவைப் பயன்படுத்தி ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இல்லாமல் வேளாண்மை செய்யும் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு அங்கக வேளாண்மை கொள்கை அண்மையில் வெளியிட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், பண்ணை மகளிர், மாணவர்களி டையே போதிய விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அங்க வேளாண் மையை ஊக்குவிக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் விவசாயிகளுடன் கூடிய குழுக்கள் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அங்கக வேளாண்மையை ஊக்கு விக்கும் வகையில், பாரம் பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல் படுத்த திட்டமிடப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்திற்கு 15 வட்டா ரங்களில் 400 எக்டர் பரப்பளவில் 20 தொகுப்பு கள் உருவாக்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், சான்று கட்டணமான ெஹக்டருக்கு ரூ. 2,000 வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் 1 எக்டருக்கு குறைவாக உள்ள விவசாயிகளும் இணைந்து பயன்பெறலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் விளைவிக்கப்படும் உணவு பொருள்கள் மனித உடலுக்கு ஊறு விளை விக்காத காரணத்தினால் அதிக அளவில் மக்களிடம் வரவேற்பையும் அதிக லாபத்தையும் ஈட்டித் தரும் திட்டமாகும்.

    இத்திட்டம் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவல கத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கூறியுள்ளார்.

    • கண்காட்சி இயற்கை முறையில் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழவகைகளை விற்பனை செய்தனர்.
    • இங்கிருந்த இளவட்டக் கல்லை இளைஞர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர்.

    கண்ணமங்கலம்:

    தமிழ் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு இயற்கை விவசாயம் முக்கிய பங்கு வகித்தது.

    அனைத்து தொழில்களை விட மக்கள் விவசாயத்தை கவுரவ தொழிலக செய்து வந்தார்கள்.

    விவசாயம் செய்பவர்களை இந்த சமூகம் சுய மரியாதையுடன் வாழவைத்தது. தமிழர்கள் பல விதமான பயிர் வகைகள், மண்வகைகள், நீர்ப்பாசன முறைகளை அறிந்திருந்தனர். அதனால் விவசாயம் பெரும் வளர்ச்சி அடைந்தது.

    தற்போது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவே இயற்கை விவசாயத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என விவசாய ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஆட்கள் பற்றாக்குறையால் பழைய விவசாய கருவிகள் எல்லாம் தற்போது காணாமல் போய்விட்டன.

    இயற்கை விவசாயம் பழங்கால விவசாய கருவிகளை தற்போது உள்ளவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் கண்காட்சி நடந்தது.

    கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இயற்கை விவசாயிகள் ஊர்தோறும் உணவுத் திருவிழா நடைபெற்றது.

    கண்ணமங்கலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் தானியங்கள், உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.

    நாட்டு வகை மாடுகள், இளவட்டக்கல், விவசாய பயன்பாட்டுக்கு உண்டான பழைய கருவிகள், ஏர் கலப்பைகள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள், மூலிகைகள் கண்காட்சியில் வைத்திருந்தனர்.

    இங்கிருந்த இளவட்டக் கல்லை இளைஞர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர்.

    இந்த கண்காட்சி இயற்கை முறையில் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழவகைகளை விற்பனை செய்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் உண்டு மகிழ்ந்தனர். மேலும் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர். 

    • இயற்கை விவசாயம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளில் தமிழ்நாடு வேளாண் பல்கலை ஈடுபட்டுள்ளது.
    • புதிய பாடத்திட்டத்தை கையாளும் வகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    உடுமலை :

    தேசிய அளவில் வேளாண் கல்வி நிறுவனங்களில் பி.எஸ்சி., இயற்கை விவசாயம் படிப்பை வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்த இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ஐ.சி.ஏ.ஆர்.,) திட்டமிட்டுள்ளது. இயற்கை விவசாயம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளில் தமிழ்நாடு வேளாண் பல்கலை ஈடுபட்டுள்ளது. எதிர்காலத்தில் இயற்கை விவசாயம் சார்ந்த உற்பத்திகளின் தேவை அதிகரிக்கும் என்பதால், பி.எஸ்சி., இயற்கை விவசாயம் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, ஐ.சி.ஏ.ஆர்.,திட்டமிட்டுள்ளது.

    புதிய பாடத்திட்டத்தை கையாளும் வகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அதற்கான ஓர் மையமாக கோவை வேளாண் பல்கலையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து வேளாண் பல்கலை நம்மாழ்வார் ஆர்கானிக் மைய துறைத்தலைவர் கிருஷ்ணன் கூறுகையில், தேசிய அளவில் இயற்கை விவசாயம் சார்ந்த, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் நான்கு பல்கலைக்கழங்களில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் ஒன்று. புதிதாக துவங்க திட்டமிட்டுள்ள பி.எஸ்சி., இயற்கை விவசாயம் படிப்புக்கு ஆசிரியர்களை தயார் செய்ய வேண்டியுள்ளது.

    வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வரும் கல்வியாண்டிலேயே, முதல்கட்டமாக மத்திய வேளாண் பல்கலைகழகங்களில் இப்பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படலாம் என்றார்.

    • கிருஷ்ணன், தோட்டத்தில் இயற்கை முறையில் பருத்தி விவசாயம் செய்து வருகிறார்.
    • இங்கிலாந்து நாட்டிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த விக்கி, கிலோமினா, ஆகியோர் பார்வையிட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே இயற்கை விவசாயம் செய்து வருபவர் பால கிருஷ்ணன்(வயது 41).இந்நிலையில் இவரது தோட்டத்தில்,இயற்கை முறையில் பருத்தி விவசாயம் செய்து வருகிறார்.

    இதனை நேற்று இங்கிலாந்து நாட்டிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த விக்கி, கிலோமினா, ஆகியோர் பார்வையிட்டனர். அங்குள்ள பருத்தி தோட்ட த்தை பார்வையிட்டு விவசாய பணிகள் குறித்த விவரங்களை கேட்ட றிந்தனர்.தமிழர்களின் கலாசாரம், விருந்தோம்பல் தங்களை மிகவும் கவர்ந்ததாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • தேயிலை தொழிற்சாலையில் 800-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
    • விவசாயம் இதுவரை மேற்கொள்ளாதவர்களுக்கு ரூ.12 வழங்கப்பட்டுள்ளது

    ஊட்டி

    தமிழக கேரள எல்லையையொட்டி கிண்ணக்கொரை கிராமம் உள்ளது. இங்குள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் 800-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கிண்ணக்கொரை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களை இயற்கை முறையில் மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததை அடுத்து, தோட்டக்கலை துறைமூலம் அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதில், விவசாயிகள் படிப்படியாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இத்தொழிற்சாலையில் உறுப்பினர்கள் கடந்த மாதம் வினியோகித்த தேயிலைக்கு சராசரி விலையாக கிலோவுக்கு, ரூ.10 வழங்க முடிந்தது. ஆனால், இயற்கை விவசாயம் முழுமையாக மேற்கொண்டவர்களுக்கு, கிலோவுக்கு, ரூ.18 விலை வழங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் ரவிசந்திரன் கூறுகையில், இயற்கை விவசாயம் மேற்கொண்ட விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.18, இயற்கை மேற்கொள்வதாக எழுதி கொடுத்தவர்களுக்கு கிலோவுக்கு ரூ.14, இயற்கை விவசாயம் இதுவரை மேற்கொள்ளாதவர்களுக்கு ரூ.12 வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    • வேளாண்மைக் கல்லூரி இறுதிஆண்டு மாணவிகளுக்கு கிராம அளவிலான ஊரக வேளாண்மை பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் மணிவாசகம் முன்னிலையில் பூலாம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
    • இதில் வேளாண் தொழில்நுட்ப அலுவலர் மோகன்ராஜ் மற்றும் பூலாம்பட்டி பகுதி உதவி வேளாண்மை அலுவலர் சாந்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சேலம்:

    எடப்பாடி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி இறுதிஆண்டு மாணவிகளுக்கு கிராம அளவிலான ஊரக வேளாண்மை பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் மணிவாசகம் முன்னிலையில் பூலாம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

    அந்த பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமியின் வயலில் இயற்கை விவசாயம் குறித்த இடுப்பொருட்கள் தயாரித்தல் பஞ்சகவ்யம், தேர்மோர் கரைசல், இயற்கை பூச்சி விரட்டி, வேஸ்ட் டீ கம்போஸ்ட், ஜீவாமிர்த கரைசல் தயாரித்தல் மற்றும் வெட்டி சீலியம் தயாரித்தல் பற்றிய செயல் விளக்கம் நேரில் அளிக்கப்பட்டது.

    இதில் வேளாண் தொழில்நுட்ப அலுவலர் மோகன்ராஜ் மற்றும் பூலாம்பட்டி பகுதி உதவி வேளாண்மை அலுவலர் சாந்திலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் நோக்கங்கள், அதன் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    • இயற்கை விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு நெல் திருவிழா நடத்தி அதன் மூலம் விலை இல்லா விதைகள் வழங்கி வருகிறார்.
    • 5 ஏக்கரில் அரிய வகை நெற்பயிரான ராஜமுடி நெல், சின்னார் 20 நெல் மற்றும் செங்கல்பட்டு சிறுமனி, சம்பா நெல் ரகத்தை சிவலிங்கம் மற்றும் இந்தியா வரைபடம் வடிவத்தில் பயிரிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்.

    விவசாயியான பாஸ்கர் வரிச்சிகுடி கிராமத்தில் தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாய முறையில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, ராஜமுடி சின்னார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறார்.

    மேலும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு நெல் திருவிழா நடத்தி அதன் மூலம் விலை இல்லா விதைகள் வழங்கி வருகிறார்.

    இந்த நிலையில் அனைவரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வயலின் நடுவே 5 ஏக்கரில் அரிய வகை நெற்பயிரான ராஜமுடி நெல், சின்னார் 20 நெல் மற்றும் செங்கல்பட்டு சிறுமனி, சம்பா நெல் ரகத்தை சிவலிங்கம் மற்றும் இந்தியா வரைபடம் வடிவத்தில் பயிரிட்டுள்ளார்.

    அந்த நெற்பயிர்கள் அனைத்தும் தற்போது நன்றாக வளர்ந்துள்ளது. இது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    • பட்டதாரி வாலிபர் விவசாய நிலத்தை குத்த கைக்கு எடுத்து அதில் உருளைக்கிழங்கு, வெள்ளை ப்பூண்டு உள்ளிட்ட மலைக் காய்கறிகளை பயிரிட்டு இயற்கை முறையில் விவ சாயம் செய்து வருகிறார்.
    • மேலும் பழமையை மறந்து வரும் இக்காலச் சூழலில் இந்த இளைஞர் நந்தகுமார் மண் வீடு, மண் சட்டியில் சமையல் செய்து பழமையை புதுமையாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கொண்ட பிரபல சுற்றுலாத்தலம். மலைவாசஸ்தலமாக இருக்கக்கூடிய கொடைக்கா னலுக்கு பல சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    மேலும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் மட்டும் அல்லாது இங்கு விளையக்கூடிய மலைக் காய்கறிகளும் பிரபலம்.குறிப்பாக மலைப்பகுதியில் விளையக்கூடிய உருளை க்கிழங்கு, வெள்ளை பூண்டு பீன்ஸ், கேரட், கோஸ், காளிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் இங்கு பயிரிட ப்பட்டு வருகிறது.கொடைக்கானலைச்சுற்றி இருக்கக்கூடிய 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுவே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் கொடை க்கானல் அருகில் இருக்கக்கூடிய வடகவுஞ்சி கிராமத்தில் குத்தகைக்கு விவசாய நிலத்தை எடுத்து அதில் இயற்கையாக விவசாயம் செய்து வருகிறார் நந்தகுமார் என்ற இளைஞர். 26 வயதே ஆன இவர் எம்.பி.ஏ பட்டதாரி ஆவார். விவசாயம் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக வடகவுஞ்சி கிராமத்தில் விவசாய நிலத்தை குத்த கைக்கு எடுத்து அதில் உருளைக்கிழங்கு, வெள்ளை ப்பூண்டு உள்ளிட்ட மலைக் காய்கறிகளை பயிரிட்டு இயற்கை முறையில் விவ சாயம் செய்து வருகிறார்.

    மேலும் அப்பகுதியில் இருக்கக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை இடை த்தரகர்கள் இன்றி விற்பனை செய்து வருகிறார். மேலும் தினமும் விவசாயம் குறித்து சமூக வலைத்தளங்களான முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் பதிவு செய்து வருவது இணையதள வாசிகள் இடையே பெரும் வர வேற்பை யும் பெற்றிருக்கிறது.இணையதளத்தையே முதலீடாக வைத்து வாட்ஸ் அப் குரூப் மூலம் வாடிக்கை யாளர்களுக்கு இடைத்த ரகர்கள் இன்றி இவர் நிலத்தில் விளையும் விளை பொருட்களை கூரியர் மூலமாக அனுப்பி வைக்கி றார்.

    மேலும் மலைத்தேன் உள்ளிட்டவை வாடிக்கை யாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிரு க்கிறது. நாடே விவசாயத்தை இழந்து வரும் இச்சூழலில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய இளம் விவசாயிகள் உருவாக வேண்டும் என்பதே ஒற்றைக் கருத்தாக உள்ளது.

    மேலும் பழமையை மறந்து வரும் இக்காலச் சூழலில் இந்த இளைஞர் நந்தகுமார் மண் வீடு, மண் சட்டியில் சமையல் செய்து பழமையை புதுமையாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்.

    • 50 கிலோ எடை கொண்ட பொட்டாஷ் உரம் ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
    • மணிச்சத்து கொடுக்கும் சூப்பர் பாஸ்பேட் விலையும் அதிகரித்துள்ளது.

    காங்கயம் :

    உரம் விலை உயர்வு, உரங்களின் மானியம் குறைந்துள்ளது ஆகியவற்றாலும் மத்திய அரசு அலட்சியத்தாலும் உணவுப்பொருள் உற்பத்தி குறையும் பேராபத்து உள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    பயிர்களுக்குத் தழைச்சத்து கொடுக்கும் யூரியாவைத் தவிர அனைத்து உரங்கள் விலையும் கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டுள்ளது. மானியமும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. 50 கிலோ எடை கொண்ட பொட்டாஷ் உரம் ரூ.1000-க்கு விற்கப்பட்டு வந்தது. இது ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மணிச்சத்து கொடுக்கும் சூப்பர் பாஸ்பேட் விலையும் அதிகரித்துள்ளது. நுண்ணூட்டுச் சத்துக்களைக் கொடுக்கும் உரங்களும் விலை உயர்வில் இருந்து தப்பிவிடவில்லை.இன்று காம்ப்ளக்ஸ் உரம் எங்கும் கிடைப்பதில்லை. நிலத்திற்கு தலைச்சத்து கொடுக்கும் யூரியாவைக் கூடுதலாகப் போட்டால் நோய் பெருமளவில் தாக்கும். விளைச்சல் வெகுவாகக் குறையும். சமையல் எண்ணெய் தேவையில் 70 சதவீதம் இறக்குமதி எண்ணையே பூர்த்தி செய்து வருகிறது. பருப்பு நுகர்வில் இது 60 சதவீதமாக உள்ளது.

    இந்தச் சூழ்நிலையில் உரம் விலையைக் கூட்டினால் இறக்குமதி அதிகரிக்கும். நாட்டிற்கு அந்நிய செலவாணி இழப்புக்கூடும். உணவுப் பற்றாக்குறை கடுமையாக இருக்கும்.இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. 140 கோடி மக்கள் தொகை இருக்கும் நாட்டில் உடனடியாக இயற்கை விவசாயத்திற்கு மாறுவது என்பது பேராபத்து.

    இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது உரப் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தியதே ஆகும். இலங்கையிடமிருந்து இந்திய அரசு இந்த பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லாமல் போனால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். 1947-ல் இந்தியாவின் மக்கள் தொகை 27 கோடி. மக்கள் தொகைப் பெருக்கத்தை அரசு கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.

    இன்று நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் உணவு கொடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. இதைக் கருத்தில் கொண்டு உரம் விலை உயர்வை அரசு கைவிட வேண்டும்.மேலும் உரங்களின் மீதான சரக்கு - சேவை வரியை முற்றிலும் நீக்க வேண்டும். படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாறுவதே இந்தியாவை வல்லரசாக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இயற்கையாகவும் கலாச்சார ரீதியாகவும் இந்தியா விவசாயம் சார்ந்த நாடு.
    • அனைவரும் முயற்சிப்போம் என்ற உணர்வு, புதிய இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை வழி நடத்துகிறது.

    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற இயற்கை விவசாய முறை குறித்த மாநாட்டில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    75-வது சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு இலக்குகளை நோக்கி நாடு பணியாற்றத் தொடங்கியிருக்கிறது. இந்தப் பணிகள் வருங்காலத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் பெரும் மாற்றங்களுக்கு அடிப்படையாகத் திகழும். நாட்டின், வளர்ச்சி அனைவரும் முயற்சிப்போம் என்ற உணர்வின் அடிப்படையிலானது. இந்த உணர்வு, புதிய இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை வழி நடத்துகிறது.

    ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதில், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு முக்கியப் பங்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 75 விவசாயிகளை, இயற்கை விவசாயத்துடன் இணைத்து சூரத் பெற்றுள்ள வெற்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்மாதிரியாக திகழ்கிறது.

    கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது எளிதான காரியமல்ல என்று கூறுபவர்களுக்கு நாடு அளிக்கும் பதில், டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் அசாதாரண வெற்றிதான். மாற்றத்திற்கு வழிகாட்ட முடியும் என்பதை நமது கிராமங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

    இயற்கை விவசாயம் வருங்காலத்தில் மாபெரும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். ஏற்கனவே இந்த இயக்கத்தில் ஈடுபாடு உடையவர்கள், பெரும் பலனை அடைவார்கள். நமது வாழ்க்கை, நமது சுகாதாரம், நமது சமுதாயத்தின் அடிப்படை நமது விவசாய முறை தான்.

    இயற்கையாகவும் கலாச்சார ரீதியாகவும் இந்தியா, விவசாயம் சார்ந்த நாடு. எனவே, நமது விவசாயிகள் முன்னேற்றமடைந்தால், விவசாயமும் முன்னேறி, அதன் மூலம் நாடும் முன்னேறும்.நீங்கள் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டால், நீங்கள் பூமித் தாய்க்கு சேவையாற்றலாம், மண்ணின் வளத்தைப் பாதுகாக்கலாம். உற்பத்தித் திறனை மேம்படுத்தலாம்.

    பண்டைக்கால அறிவாற்றலை தற்காலத் தேவைகளுக்கேற்ப விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பது பற்றி வல்லுநர்கள், தொண்டு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். இயற்கை விவசாயப் பாதையில் மேலும் முன்னோக்கிச் செல்லவும், உலகளாவிய வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும் இதுவே சரியான தருணம்.

    ரசாயணக் கலப்பு இல்லாத இயற்கை விளைபொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இயற்கை விவசாயமும் பன்மடங்கு அதிகரிக்கும். இயற்கை விளைபொருட்களுக்கு தர சான்று உத்தரவாத முறை செயல்படுத்தப்படுகிறது. சான்றளிக்கப்பட்ட இயற்கை விளை பொருட்களை விவசாயிகள் ஏற்றுமதி செய்தால், அவற்றுக்கு நல்ல விலை கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சின்ன சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்து பேசினார்.

    கள்ளக்குறிச்சி:

    வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் சின்ன சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார். வேளாண்மை அலுவலர் அனுராதா முன்னிலை வகித்தார். அட்மா தொழில்நுட்ப மேலாளர் சாமுண்டீஸ்வரி வரவேற்றார்.

    இயற்கை விவசாயம் செய்யும் முறைகள், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்து ஆன்லைன் மூலம் திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் விளக்கம் அளித்து பேசினார். இதில் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×