search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural Educational Institutions"

    • இயற்கை விவசாயம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளில் தமிழ்நாடு வேளாண் பல்கலை ஈடுபட்டுள்ளது.
    • புதிய பாடத்திட்டத்தை கையாளும் வகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    உடுமலை :

    தேசிய அளவில் வேளாண் கல்வி நிறுவனங்களில் பி.எஸ்சி., இயற்கை விவசாயம் படிப்பை வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்த இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ஐ.சி.ஏ.ஆர்.,) திட்டமிட்டுள்ளது. இயற்கை விவசாயம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளில் தமிழ்நாடு வேளாண் பல்கலை ஈடுபட்டுள்ளது. எதிர்காலத்தில் இயற்கை விவசாயம் சார்ந்த உற்பத்திகளின் தேவை அதிகரிக்கும் என்பதால், பி.எஸ்சி., இயற்கை விவசாயம் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, ஐ.சி.ஏ.ஆர்.,திட்டமிட்டுள்ளது.

    புதிய பாடத்திட்டத்தை கையாளும் வகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அதற்கான ஓர் மையமாக கோவை வேளாண் பல்கலையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து வேளாண் பல்கலை நம்மாழ்வார் ஆர்கானிக் மைய துறைத்தலைவர் கிருஷ்ணன் கூறுகையில், தேசிய அளவில் இயற்கை விவசாயம் சார்ந்த, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் நான்கு பல்கலைக்கழங்களில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் ஒன்று. புதிதாக துவங்க திட்டமிட்டுள்ள பி.எஸ்சி., இயற்கை விவசாயம் படிப்புக்கு ஆசிரியர்களை தயார் செய்ய வேண்டியுள்ளது.

    வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வரும் கல்வியாண்டிலேயே, முதல்கட்டமாக மத்திய வேளாண் பல்கலைகழகங்களில் இப்பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படலாம் என்றார்.

    ×