search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளி ஆசிரியர்"

    • பள்ளி மாணவ-மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைக்கும் சில ஆசிரியர்களுக்கு மத்தியில், கிருஷ்ணா ரெட்டியின் இந்த செயல் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
    • ஆசிரியர் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகா சேலூரு கிராமத்தில் அரசு பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால், மர்மநபர்கள் அந்த பள்ளி கழிவறையின் கதவை உடைத்து நாசப்படுத்தியிருந்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகள் மீண்டும் தொடங்கியது. ஆனால் மாணவ-மாணவிகளால், பள்ளியின் கழிவறையை பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்தமாக கிடந்தது. அத்துடன் பயங்கர துர்நாற்றமும் வீசியது. இதனால் மாணவ-மாணவிகள் அந்த கழிவறைகளை பயன்படுத்தாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் அந்த பள்ளியின் ஆசிரியர் கிருஷ்ணா ரெட்டி, பள்ளிக்கூட கழிவறைகளை சுத்தம் செய்ய முன்வந்தார். அதன்படி அவர் குழாய் மூலம் தண்ணீர் அடித்து துடைப்பானை கையில் பிடித்து கழிவறைகளை சுத்தம் செய்தார்.

    பள்ளி மாணவ-மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைக்கும் சில ஆசிரியர்களுக்கு மத்தியில், கிருஷ்ணா ரெட்டியின் இந்த செயல் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் அவர் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • அரசு பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்துள்ளது.
    • அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் தலைமுடியை வித்தியாசமாக வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இயங்கவில்லை.

    இதனால் மாணவர்கள் தங்களது முடியை பல விதமாக அலங்காரம் செய்து கொண்டு சுற்றி திரிந்தனர்.

    தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்துள்ளது. ஆனால் அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் தலைமுடியை வித்தியாசமாக வைத்துள்ளனர்.

    இவர்களை பெற்றோர் கண்டித்தும் வெட்ட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் தன்ராஜ் தனது சொந்த செலவில் 2 முடித்திருத்தும் தொழிலாளர்களை அழைத்து வந்து மாணவர்களை வரிசையாக உட்கார வைத்து முடியை சீராக்கினார்.

    தொடர்ந்து இதே போல் வெட்ட வேண்டும் இல்லை என்றால் மீண்டும் பள்ளியில் மாணவர்களுக்கு முடி வெட்டப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த வீடியோ புதுவையில் வைரலாக பரவி வருகிறது.

    பல கஷ்டங்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவரான ஒருவர், வேலை நேரம் போக மீதிநேரத்தில் தாம் படித்த அரசு பள்ளிக்கு சென்று இலவசமாக வகுப்புகள் எடுக்கிறார்.
    ஓசூர்:

    உத்தனப்பள்ளி அடுத்த கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி கலையரசன். சிறுவயதில் பெற்றோரை இழந்த இவர், தந்தை வழி பாட்டி அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். அரசு பள்ளி சத்துணவை சாப்பிட்டு, கஷ்டத்திலும் இஷ்டப்பட்டு படித்து, மருத்துவராகி சாதனை படைத்துள்ளார். 

    நம்பிக்கை நட்சத்திரமான ரஜினி கலையரசன் எம்.டி படிப்பதற்காக தற்போது உத்தனப்பள்ளியில் கிளினீக் நடத்தி வருகிறார். கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தாம் படித்த அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, அறிவியல் மற்றும் தமிழ் பாடங்களை நடத்தி வருகிறார் இளம் மருத்துவர்.  

    தன்னம்பிக்கை கதைகளையும், தாம் மருத்துவரான பின்புலங்களையும் எடுத்துரை மாணவ- மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். அயராத உழைப்பால், மனதை தளரவிடாமல் விடாமுயற்சியுடன் வீர நடைபோடும் மருத்துவர் ரஜினி கலையரசனின், சுயநலமில்லாத தொண்டை பாராட்டி மனம் நெகிழ்கிறார்கள் உத்தனப்பள்ளி வாசிகள்.
    ×