என் மலர்

  புதுச்சேரி

  அரசு பள்ளி மாணவர்களுக்கு முடிவெட்ட ஏற்பாடு செய்த ஆசிரியர்- வைரலாக பரவும் வீடியோ
  X
  அபிஷேகப்பாக்கம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு முடி திருத்தும் தொழிலாளர்கள்.

  அரசு பள்ளி மாணவர்களுக்கு முடிவெட்ட ஏற்பாடு செய்த ஆசிரியர்- வைரலாக பரவும் வீடியோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரசு பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்துள்ளது.
  • அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் தலைமுடியை வித்தியாசமாக வைத்துள்ளனர்.

  புதுச்சேரி:

  கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இயங்கவில்லை.

  இதனால் மாணவர்கள் தங்களது முடியை பல விதமாக அலங்காரம் செய்து கொண்டு சுற்றி திரிந்தனர்.

  தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்துள்ளது. ஆனால் அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் தலைமுடியை வித்தியாசமாக வைத்துள்ளனர்.

  இவர்களை பெற்றோர் கண்டித்தும் வெட்ட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

  இந்த நிலையில் அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் தன்ராஜ் தனது சொந்த செலவில் 2 முடித்திருத்தும் தொழிலாளர்களை அழைத்து வந்து மாணவர்களை வரிசையாக உட்கார வைத்து முடியை சீராக்கினார்.

  தொடர்ந்து இதே போல் வெட்ட வேண்டும் இல்லை என்றால் மீண்டும் பள்ளியில் மாணவர்களுக்கு முடி வெட்டப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த வீடியோ புதுவையில் வைரலாக பரவி வருகிறது.

  Next Story
  ×