என் மலர்

  நீங்கள் தேடியது "environment"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீரமரசன்பேட்டை கிராமத்தில் மாதிரி கிராம சுற்றுச் சூழல் மற்றும் சமுதாய விழிப்புணர்வு நடந்தது.
  • மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

  பூதலூர்:

  பூதலூர் அருகே உள்ள வீரமரசன்பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 2022-23 மாதிரி கிராம சுற்றுச் சூழல் மற்றும் சமுதாய விழிப்புணர்வு பயிற்சி பூதலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ராதா தலைமையில் நடைபெற்றது.

  வேளாண் அலுவலர் சுரேஷ் வரவேற்றார்.

  தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோமதி தங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீர்வள நில வள திட்ட கையேயட்டினை வழங்கி நீர்வள நில வள திட்ட முக்கியத்துவங்களை எடுத்து கூறினார்.

  வேளாண்கல்லூரி நோயியல் பேராசிரியர் ராமலிங்கம், பூச்சியல் துறை பேராசிரியர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண்மை தொழில்–நுட்பங்களை விளக்கி பேசினார்கள்.

  வீரமரசன்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மாணவர்கள் விவசாயிகளுக்கு மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

  தமிழ்நாடு நீர்வள நிலவளம் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு தகவல்கல்வி பரிமாற்ற திட்டத்தின் கீழ் தொலைக்காட்சி வழங்கப்பட்டது.

  இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி, மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

  துணை வேளாண்மை அலுவலர் ஜெயராமன் நன்றி கூறினார்.

  நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் எழிலமுது மற்றும் அட்மா திட்டத்தின் பாலமுருகன் மற்றும் பலர் செய்து இருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அருகிலிருந்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிற்கு நடைபெற உள்ளது.
  • வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும் மற்றும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

  தஞ்சாவூா்:

  தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ) கும்பகோணம் மண்டலம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும்.

  பொது போக்குவரத்தை பலப்படுத்திட, விபத்தை தடுத்திட, பொதுத் துறையை பாதுகாத்திட வலியுறுத்தி வருகிற 12-ம் தேதி காலை 6 மணி அளவில் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அருகிலிருந்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிற்கு நடைபெற உள்ளது. நுழைவு கட்டணம் ரூ. 200 மட்டும். முன் பதிவிற்கு நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். நாளை மாலை 6 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

  போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும் மற்றும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

  மாரத்தானில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் மற்றும் ஆண்கள், பெண்கள் 9894377805, 7010411396 ஆகிய செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 4 ஆயிரம் ஏக்கர் உளுந்து மற்றும் பச்சை பயறு பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • பயறு வகை பயிர்களை பயிரிடுவதன் மூலம் மண்வளம்மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

  வேதாரண்யம்:

  தலைஞாயிறு பகுதியில் நெல் அறுவடைக்குப்பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

  5 ஆயிரம் ஏக்கர் இலக்கு தலைஞாயிறு வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் 4 ஆயிரம் ஏக்கர் உளுந்து மற்றும் பச்சை பயறு பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  உளுந்து மற்றும் பச்சைபயறு பயிரிடுவதற்கு தேவைப்படும் உயர் விளைச்சல் தரும் சான்று விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை ஆகியவை மானிய விலையில் கொத்தங்குடி, நீர்முளை, பனங்காடி, தலைஞாயிறு ஆகிய வேளாண்மை கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

  குறைந்த நாட்களில் அதிக மகசூல் விவசாயிகள் நெல் அறுவடைக்கு பின் பயறு வகை பயிர்களை பயிரிடுவதன் மூலம் மண்வளம்மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

  இதை சாகுபடி செய்வதால் குறைந்த நாட்களில் விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கிறது. தலைஞாயிறு பகுதியில் தற்போது நெல் அறுவடை பணிகள் நிறைவு பெறும் நிலையில், உளுந்து, பயறு சாகுபடி செய்து பயன்பெறலாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய நாட்டில் முதன்முறையாக சுற்றுச்சூழலுடன் சேர்ந்து காலநிலை மாற்றத்திற்கும் ஒரு அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை நமது ஆட்சியையும் சேரும்.
  • மரங்களை எல்லாம் வெட்டுவதற்கு நீர்வளத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக பல்வேறு தரப்புகளில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

  காங்கயம்:

  கீழ்பவானி வாய்க்கால் கரையில் உள்ள மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு தி.மு.க. சுற்றுச்சூழல் அணி கடிதம்‌ எழுதியுள்ளது.

  இது குறித்து தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேயசிவசேனாபதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

  ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லக்கூடிய கீழ்பவானி வாய்க்காலின் இரு கரைகளிலும் இலட்சக்கணக்கான 50 ஆண்டுகளாக வளர்ந்த பெரிய மரங்கள் இருப்பது அறிந்ததே. பல வருடங்களுக்கு முன்பு ஆய்வு செய்தபோது கூட அம்மரங்களைக் கண்டு ரசித்ததாக கோவையிலே விவசாயிகளிடம் பேசும் போது நீங்கள் கூறினீர்கள். இப்பொழுது இந்த மரங்களை எல்லாம் வெட்டுவதற்கு நீர்வளத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக பல்வேறு தரப்புகளில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. அப்படி வெட்டுவதற்கு உறுதியாக அனுமதிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் தங்கள் கவனத்திற்கு இச்செய்தியை கொண்டு வருகிறோம்.

  ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சூழலியலாளர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாக நேரிலும் அலைபேசியிலும் மின்னஞ்சல் மூலமும் செய்திகளை அனுப்பி வருகிறார்கள். காலநிலை மாற்றம் என்ற மிகப்பெரிய ஆபத்து மனித குலத்திற்கு இன்று அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டு இந்திய நாட்டிலேயே தி.மு.க.வின் 18 வது அணியாக கழக சுற்றுச்சூழல் அணியை உருவாக்கியவர் தலைவர் மு.க.ஸ்டாலின்.

  அதேபோல 2021ம் வருடம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய நாட்டில் முதன்முறையாக சுற்றுச்சூழலுடன் சேர்ந்து காலநிலை மாற்றத்திற்கும் ஒரு அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை நமது ஆட்சியையும் சேரும். அதுபோக தமிழ்நாட்டின் பரப்பிலே 33 சதவிகிதம் வனப்பரப்பாக மாற்றியே ஆக வேண்டும் என்ற ஐக்கிய நாட்டின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முதல்வர் அயராது பாடுபட்டு வருகின்றார். இச்சூழலிலே வளர்ந்த 60 மற்றும் 70 வருடங்களாக இருக்கக்கூடிய மிகப் பெரிய மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கும். பல்லுயிர் தன்மை அழியும்.

  ஆதலால் அப்படி ஏதாவது ஒரு திட்டத்தை ஈரோடு பொதுப் பணித்துறை அதிகாரிகள் முன் வைத்தால் அதனை அமைச்சர் நிராகரித்து, இங்கே இருக்கக்கூடிய மரங்களையும், வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட வேண்டும். ஈரோடு, கரூர், திருப்பூர் பகுதி விவசாயிகளின் சார்பாகவும் பல லட்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்கின்றேன் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விநாயகா் கோவில் அருகில் ஊா்வலமாக கொண்டு வரப்படும் சிலைகளைக் கரைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
  • குமாரபாளையம் அக்ரஹாரம் கிராமம், பழையபாலம் அண்ணாநகா்.

  நாமக்கல்:

  நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  திருச்செங்கோடு வட்டம் எஸ். இறையமங்கலம் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள விநாயகா் கோவில் அருகில் ஊா்வலமாக கொண்டு வரப்படும் சிலைகளைக் கரைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

  குமாரபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதிக்கு ஓங்காளியம்மன் கோவில் படித்துறை. பாப்பம்பா ளையம் முனியப்பன் கோவில், குமாரபாளையம் அக்ரஹாரம் கிராமம், பழையபாலம் அண்ணாநகா். குமாரபாளையம் அமானி கலைமகள் வீதி, பரமத்திவேலூா் காசி விஸ்வநாதா் கோவில் அருகில், சோழசிராமணி அணை கீழ் பகுதியில் ஈஸ்வரன் கோவில் பின்புறம் மோகனூா் அசலதீபேஸ்வரா் கோவில் அருகில் உள்ள காவிரி ஆற்றங்கரை படித்துறை ஆகிய இடங்களிலும் விநாயகர் சிலைகளை கரைக்கலாம்.மேலும் தகவல்களுக்கு, மாவட்ட ஆட்சியா், காவல் துறை கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரைத் தொடா்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும்.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த மக்கக்கூடிய நச்சுகலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

  நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

  அதன்படி தஞ்சை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள நீர்நிலைகளான வடவாறு, கல்லணை கால்வாய், காவிரி ஆறு, வீரசோழன் ஆறு மற்றும் கடல் ஆகிய இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

  இதில் களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரீஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோல் கலவைய ற்றதுமான சுற்று ச்சூழலை பாதிக்காத மூலப் பொரு ட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறை யில் கரைக்க அனுமதி க்கப்படும்.

  சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.

  மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்று வதற்கு மரங்களை இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

  ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.‌

  நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க, சிலைகள் அல்லது பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

  சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயான சாயம் அல்லது எண்ணெய் வண்ண பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

  சிலைகள் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது.

  மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த மக்கக்கூடிய நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

  சிலைகளை அழகுபடுத்த வண்ண பூச்சுகள் அல்லது மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

  விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும்தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வட்டமலைக்கரை ஓடை வழியாக தடுப்பணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
  • பாம்புகள் சூழலுக்கு ஏற்ப இடம் மாறுவது நடக்கும்.

  வெள்ளகோவில்:

  திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உத்தமபாளையத்தில் 650 ஏக்கர் பரப்பளவில் வட்டமலைக்கரை ஓடை தடுப்பணை அமைந்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டு இரு முறை மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 25 ஆண்டுகளாக அணைக்கு நீர்வரத்து இன்றி வறண்டு கிடந்தது. மேலும் தண்ணீர் தேக்கி பாசனத்துக்கு திறக்கப்படாததால் பொதுப்பணித் துறையும் இவ்வணை பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதனால் அணையின் நீர்தேங்கும் பகுதியில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து நின்றன.

  முட்புதர்கள் ஆண்டு கணக்கில் இருந்ததால் மான்கள், முயல்கள், கீரிகள், குள்ளநரிகள் மற்றும் ஏராளமான மயில்களின் வசிப்பிடமாக மாறிப்போனது. சீமை கருவேல மரங்கள் இல்லாத பகுதிகளில் வளரும் புற்களை அருகில் உள்ள விவசாயிகள் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வந்தனர். கால் நூற்றாண்டாக நீரின்றி காய்ந்து கிடக்கும் அணைக்கு பிஏபி. பிரதான வாய்க்காலில் உள்ள கள்ளிபாளையம் மதகில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் பொது மக்கள் கோரிக்கை விடுத்து பல்வேறு கட்ட கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

  விவசாயிகளின் பல ஆண்டு கால கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு நவம்பரில் கள்ளிபாளையம் மதகில் இருந்து வட்டமலைக்கரை ஓடை வழியாக தடுப்பணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை அடுத்து அணை ஒரு வாரத்தில் அதன் முழு கொள்ளளவான 24 அடியில் 22 அடிக்கு நிரம்பியது. 25 ஆண்டுகள் கடந்து அணை நிரம்பியதால் விவசாயிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதனை தொடர்ந்து 4 மாதங்கள் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நின்றதால் அணையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது.

  அதோடு ஏற்கனவே வறண்டு கிடந்த அணைப் பகுதியில் வசித்து வந்த மான், முயல், காடை, கௌதாரி, கீரி உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கையிலும், பறவையினங்களிலும் மாற்றம் ஏற்பட்டு சுற்றுச்சூழலில் நல்ல பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை ஆவணப்படுத்தி வரும் உத்தமபாளையத்தை சேர்ந்த லோகநாதன் எனும் புகைப்படக்காரர், அணை வறண்டு கிடந்தது முதல் தற்போது அணையில் கடந்த 8 மாதங்களாக தண்ணீர் தேங்கிய பின் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் வரை பதிவு செய்துள்ளார்.

  அதன்படி தற்போது மூன்று முறை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்ட பின் அணையில் சுமார் 2 அடிக்கு தண்ணீர் உள்ளது. தற்போது அணையில் மான்கள் ,முயல்கள் ,கீரிகள், பறவைகள் எண்ணிக்கையும், பாம்புகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது. தண்ணீர் தேங்கியதால் வட்டமலைக்கரை அணையில் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றம் பற்றி அவர் எடுத்த படங்களில், சுமார் 8 அடிக்கு மேலாக நீளமுள்ள இரு சாரைப் பாம்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து, பின்னிப் பிணைந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடனமாடியதை பதிவு செய்துள்ளார்.

  25 ஆண்டுகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த அணைப்பகுதியில் இந்த 8 மாதங்களாக தண்ணீர் தேங்கியதால் 78 வகை பறவைகள் இருப்பதும், இதன் மூலம் சுற்றுச்சூழலிலும், உயிரினங்களின் எண்ணிக்கையிலும் ஏற்பட்ட நல்ல பல மாற்றத்தை எடுத்துக் கூறுவதாக இப்படங்கள் அமைந்துள்ளன. சாரைப் பாம்புகளின் இந்த செயல் பற்றி திருப்பூர் இயற்கை கழகத்தின் ரவீந்திரன் கூறுகையில், இயற்கை அதன் பருவங்களுக்கு ஏற்ப சமநிலையில் இருக்கும்போது உயிரினங்கள் பல்கி பெருகுவது நடைபெறும்.

  இதில் பாம்புகள் சூழலுக்கு ஏற்ப இடம் மாறுவது நடக்கும். பாம்புகள் பொதுவாக இணை சேரும்போது இப்படி பின்னிப்பிணைந்து நடனமாடுவது போல் செயல்படும். அதே நேரத்தில் எல்லைப் பிரச்சனை வரும் போதும் இப்படி நடைபெறும். இதில் எது என்பதை கண்டுபிடிப்பது சிரமம் என்றார். எது எப்படியோ இரு சாரைப் பாம்புகள் புகைப்படத்தில் சிக்கியிருப்பது வட்டமலைக்கரை அணைப்பகுதியில் சுற்றுச்சூழல் மேம்பட்டு வருவதை காட்டுவதாக உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சார்பில், அனைத்து நிலை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அலுவலர்களுக்கு, ஆண்டுதோறும் புத்தாக்கப்பயிற்சி வழங்கப்படுகிறது.
  • 12-ந்தேதி முதல், 14ந் தேதி வரை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செல்வதற்கான முயற்சி என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது.

  திருப்பூர் :

  சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது பெரும் சவாலாக மாறிவரும் நிலையில், உள்ளாட்சி நிர்வாகங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்ள அரசு ஊக்குவித்து வருகிறது.

  சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சார்பில், அனைத்து நிலை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அலுவலர்களுக்கு, ஆண்டுதோறும் புத்தாக்கப்பயிற்சி வழங்கப்படுகிறது.அதன்படி பேரூராட்சி அலுவலர்களுக்கு நாளை , 12-ந்தேதி முதல், 14ந் தேதி வரை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செல்வதற்கான முயற்சி என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறிப்பிட்ட அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இப்பயிற்சியில் உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட இருக்கிறது.

  உள்ளாட்சிகளில் மாசுபாடு குறைத்தல் தொடர்பான திட்டங்களை வகுப்பது, இயற்கை வளங்கள், காடுகளை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பது தொடர்பான திட்டங்களை வகுப்பது, அனைத்து உயிரினங்களும் அவற்றின் இயற்கையான வழித்தடங்களில் பயணிக்கவும், வாழவும் வழிகாட்டும் வகையிலான திட்டங்களை தீட்டுவது ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது.தவிர இயற்கை உரம் தயாரிப்பு, மாடித்தோட்டம், இயற்கை முறையில் சோப்பு தயாரிப்பது, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணி சார்ந்தும் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக திருப்பூர் மாவட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாசுகட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்பட்ட தொழில்நுட்பத்தில் தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலைகள் இயங்கி வருகின்றன.
  • சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும்.

  திருப்பூர் :

  தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், திருப்பூர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-உடுமலையில் பெரியபட்டி கிராமம், தாராபுரத்தில் சின்னமருதூர்,குருணைக்கல் பட்டி கிழக்கு வலசு ஆகிய பகுதிகளில் மாசுகட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்பட்ட தொழில்நுட்பத்தில் தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலைகள் இயங்கி வருகின்றன. அப்பகுதியில் காற்றும் நீரும் மாசுபடுகிறது. அருகிலுள்ள விவசாய நிலங்களில் வேலை செய்ய முடிவதில்லை.நீர்நிலைகளில் கரித்துகள்கள் படர்ந்துள்ளதால், பொதுமக்களும், கால்நடை வளர்ப்பாளர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

  விவசாய நிலங்களில் இயங்கிவரும் இந்த ஆலைகளுக்கு, திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகம் வாயிலாக 3முறை சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சீல் உடைத்து சட்டவிரோதமாக ஆலையை இயக்குகின்றனர்.மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் இயக்க அனுமதி பெறாமலும், ஊராட்சி கட்டட விதிப்படி உரிய கட்டுமான அனுமதி பெறாமல் விவசாய நிலத்தில் தடை செய்யப்பட்ட தொட்டி கரி சுடும் ஆலை இயக்குகின்றனர்.

  8 ஆலைகளை அப்புறப்படுத்த கலெக்டர் உத்தரவுக்குப் பின்னரும், 3 ஆலைகள் மட்டுமே இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் 5 ஆலைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

  சட்டவிரோதமாக இயங்கிவரும் தேங்காய் தொட்டி கரி ஆலைகளை உடனடியாக இடித்து அகற்ற மாசுகட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிடவேண்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ×