என் மலர்
நீங்கள் தேடியது "பிரியங்கா காந்தி"
- சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும்
- சஞ்சார் சாத்தி செயலியால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த செயலி அனைத்து புதிய தொலைபேசிகளிலும் இருக்க வேண்டும் எனவும் பழைய மொபைல் போன்களிலும் சாப்டவேர் அப்டேட் மூலமாக இந்த செயலி இடம் பெற வேண்டும் எனவும் அடுத்த 120 நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மொபைல் போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த செயலி தொடங்கப்பட்டது.
தொலைந்துபோன அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுப் பிடிக்கவும், ஐஎம்இஐ மோசடி, ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சஞ்சார் சாத்தி செயலி மூலம் பெறலாம்.
அதே சமயம் சஞ்சார் சாத்தி செயலி நமது தொலைபேசியிலிருந்து நிறைய தரவை கோரக்கூடும். இதில் அழைப்பு பதிவுகள், மெசேஜ்கள், கேமரா மூலம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவு செய்வதற்கான அணுகல் ஆகியவை அடங்கும் என்பதால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க வாய்ப்புள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக்கும் முடிவிற்கு வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "அனைத்து போன்களிலும் சஞ்சார் சாத்தி ஆப்பை கட்டாயமாக்குவது தனிநபர் உரிமைக்கு விடுக்கும் நேரடி அச்சுறுத்தல். ஒட்டுமொத்தமாக, நமது நாட்டை ஒரு சர்வாதிகார நாடாக இந்த அரசு மாற்றி வருகிறது. சைபர் மோசடிகளை தடுக்கும் வசதி அவசியம்தான், ஆனால் இது அந்த வரம்பையும் தாண்டி தனியுரிமையை கடுமையாக மீறுகிறது" என்று தெரிவித்தார்.
- மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
- பொதுப் பிரச்சினைகள் குறித்த ஜனநாயக விவாதங்களை அனுமதிக்காதது தான் நாடகம்
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்திற்கு முன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி கூட்டத்தொடரை நாடகத்திற்கான மேடையாக மாற்றாதீர்கள் என்று எதிர்கட்சிகளை விமர்சித்தார்.
இந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி, கூட்டத்தொடரின் போது SIR மற்றும் டெல்லி மாசுபாடு போன்ற முக்கியமான பிரச்சினைகளை எழுப்புவது எப்படி நாடகமாகும்.
பொது நலன் சார்ந்த விஷயங்கள். இந்தப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைகள் குறித்து எந்த விவாதமும் இல்லாதபோது பாராளுமன்றத்தின் பயன் என்ன?
கடந்த 11 ஆண்டுகளாக பாராளுமன்ற அமைப்பையே மத்திய அரசு சீர்குலைத்துள்ளது.
கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் மட்டுமே குறைந்தது 12 மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டன.
சில மசோதாக்கள் வெறும் 15 நிமிடங்களிலும், சில மசோதாக்கள் எந்த விவாதமும் இல்லாமலும் நிறைவேற்றப்பட்டன.
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், ஜிஎஸ்டி போன்ற மசோதாக்களை பாராளுமன்றத்தில் புல்டோசர் மூலம் நீங்கள் எப்படி கொண்டு வந்தீர்கள் என்பதை முழு நாடும் பார்த்தது.
பணிச்சுமையால் SIR பணிகளில் ஈடுபடும் பிஎல்ஓக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.
அவையில் இவற்றை பற்றி பேசுவதையோ அல்லது பொதுப் பிரச்சினைகளை எழுப்புவதையோ நாடகம் என்று அழைப்பது சரியல்ல. பொதுப் பிரச்சினைகள் குறித்த ஜனநாயக விவாதங்களை அனுமதிக்காதது தான் நாடகம்" என்று தெரிவித்தார். இதற்கிடையே எதிர்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் இன்று 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
- எஸ்.எஸ்.சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் பெயர்களையும் மறந்து விடாதீர்கள்.
- இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் "சோர்-சோர்" என்று முழக்கமிட்டனர்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில் நவம்பர் 11 அன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்நிலையில் பீகாரின் ரேகா பகுதியில் இன்று நடந்த பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, "ஞானேஷ் குமார், தவறு செய்துவிட்டு நீங்கள் அமைதியாக ஓய்வு பெற்றுவிடலாம் என்று நினைத்தால், அது நடக்காது. ஞானேஷ் குமாரின் பெயரை ஒருபோதும் மறக்காதீர்கள் என்று பொதுமக்களிடம் நான் சொல்கிறேன்.
அதேபோல எஸ்.எஸ்.சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் பெயர்களையும் மறந்து விடாதீர்கள். அரியானாவில் வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டதை, மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் "சோர்-சோர்" (திருடன்-திருடன்) என்று முழக்கமிட்டனர்.
முன்னதாக 2024 அரியானா சட்டமன்றத் தேர்தலின் போது முடிவுகளைத் மாற்றுவதற்காக 25 லட்சம் போலி வாக்குகள் பயன்படுத்தப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.
இதில் ஞானேஷ் குமார், எஸ்.எஸ்.சந்து, விவேக் ஜோஷி ஆகிய மூன்று தேர்தல் ஆணையர்கள் குற்றவாளிகள் என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் தேவையற்ற பிரச்சினைகள் குறித்து பேசுகிறார்.
- ஊழல், பீகாரில் NDA அரசின் தவறான ஆட்சி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வடைகிறது. இதனால் தலைவர்கள் பீகாரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி சஹர்சாவில் நடைபெற தேர்தல் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அப்போது பிரியங்கா காந்தி கூறியதாவது:-
பீகார் தேர்தலுக்காக சலுகைகள் அறிவிப்பதற்கு முன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 20 ஆண்டுகளில் பீகார் மாநிலத்திற்கு NDA என்ன செய்தது என்பது குறித்து முதலில் பதில் அளிக்க வேண்டும்.
வேலையின்மை பெருகி வருவதாலும், வேலைவாய்ப்பு உருவாக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பாஜகவின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு வழங்கப்படுவதாலும் பீகாரின் இளைஞர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் தேவையற்ற பிரச்சினைகள் குறித்து பேசுகிறார். ஊழல், பீகாரில் NDA அரசின் தவறான ஆட்சி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
பீகாரை அவமதித்ததாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் பிரதமர் குற்றம் சாட்டுகிறார். அவர் புதிய அமைச்சகத்தை (அவமதிப்பு அமைச்சகம்) உருவாக்க வேண்டும்.
பீகார் அரசை நடத்துவது பிரதமர், மத்திய தலைவர்கள்தான், நிதீஷ் குமார் அல்ல.
அரசு அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மக்களின் வாக்குரிமையை பீகாரில் உள்ள NDA அச்சுறுத்துகிறது.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
- ராஷ்டீரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம்.
- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பீகாரில் பிரசாரம் செய்தார்.
பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் ஐக்கிய ஜனதாதளம்- பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், எதிர்கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பீகாரில் பிரசாரம் செய்தார். பெகுசராய் பகுதியில் அவர் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக ஓட்டு சேகரித்தார்.
முன்னதாக பாட்னா விமான நிலையத்தில் பிரியங்கா காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
ஒரு கோடி வேலை வாய்ப்புகளை வழங்குவதாக பா.ஜ.க கூட்டணி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இதுவரை அவர்கள் அதை வழங்காதது ஏன்? இப்போது அதைப்பற்றி கூறுவது ஏன்?
பீகாரில் மெகா கூட்டணி ஏன் ஆட்சி அமைக்காது. நிச்சயமாக நாங்கள் ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பல உறுப்பினர்களால் நான் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன்.
- இதனால் நீண்டகால மன அழுத்தத்திற்கு ஆளாகி அவதிப்பட்டு வந்ததாக அவர் எழுதியிருந்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மத்திய ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் கடந்த வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் கோட்டயம் மாவட்டம் எலிகுளம் கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட வஞ்சிமலையைச் சேர்ந்த ஐடி ஊழியர் அனந்து அஜி (26) என்று அடையாளம் காணப்பட்டார். அவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை மாலை அவரது வீட்டில் செய்யப்பட்டன.
இறப்பதற்கு முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் எழுதிய பதிவு, மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனந்து அஜித் தனது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பல உறுப்பினர்களால் நான் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன்.
நான் மட்டும் அல்ல, ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் பரவலாக பாலியல் துஷ்பிரயோகங்கள் நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டு இதனால் நீண்டகால மன அழுத்தத்திற்கு ஆளாகி அவதிப்பட்டு வந்ததாக அவர் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக வயநாடு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதவில், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரிக்க வேண்டும். தனது தற்கொலைச் செய்தியில், ஆர்.எஸ்.எஸ்ஸின் பல உறுப்பினர்களால் தான் மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் ஆனந்து அஜி குற்றம் சாட்டியுள்ளார்.
தான் மட்டும் பாதிக்கப்பட்டவர் அல்ல என்றும், ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பரவலாக பாலியல் துஷ்பிரயோகம் நடைபெறுகிறது என்றும் அவர் தெளிவாகக் கூறினார். உண்மையாக இருந்தால், இது பயங்கரமானது.
இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான இளம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இந்த முகாம்களில் கலந்து கொள்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் வெளிப்படைத்தன்மையை பேண வேண்டும்.
சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகம் போலவே, சிறுவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகமும் சமூகத்தில் பரவியுள்ள பெரும் சாபக்கேடாகும்.
இந்தச் சொல்லப்படாத கொடூரமான குற்றங்களைச் சுற்றியுள்ள மௌனத்தின் திரை கிழிக்கப்பட்டு உண்மை வெளிவர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
- மக்களின் உண்மையான நோக்கங்களை உணர்ந்து கொள்ளும் திறன் பெண்களிடம் உள்ளது.
- மோடி, அமித் ஷா, நிதிஷ் குமாரின் உண்மையான நோக்கங்களை மக்கள் உணர வேண்டும்.
பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பெண்கள் சுயத்தொழில் தொடங்க, 75 லட்சம் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் நிதிஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிலையில், பீகார் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் பிரியங்கா காந்தி நிகழ்ச்சி ஒன்றில கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரின் உண்மையான நோக்கங்களை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் பாடம் கற்பிக்க அவர்கள் தகுதியானவர்கள்.
தேர்தல் வர இருப்பதால், 10 ஆயிரம் தர அரசு முன்வந்துள்ளது. ஆனால், இந்த 10 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும் என்று அவர்கள் வாக்குறுதி அளிக்கவில்லை.
மக்களின் உண்மையான நோக்கங்களை உணர்ந்து கொள்ளும் திறன் பெண்களிடம் உள்ளது. மக்கள் அவர்களுடைய மகள்களுக்கு வரன் தேடுமபோது, அதை பயன்படுத்துகிறார்கள். அதேபோல், மோடி, அமித் ஷா, நிதிஷ் குமாரின் உண்மையான நோக்கங்களை மக்கள் உணர வேண்டும்.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
- வயநாடு தொகுதிக்கு கடந்தமாதம் (நவம்பர்) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
- காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டார்.
கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் வயநாடு தொகுதிக்கு கடந்தமாதம் (நவம்பர்) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அவர் 6,22,338 வாக்குகள் பெற்று 4 லட்சத்துக்கு அதிகான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பிரியங்கா காந்தி வயநாடு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர்களுடன் கொட்டியம்வயலில் முன்மொழியப்பட்ட படிஞ்சரத்தாரா-பூழித்தோடு சாலைப் பகுதியைப் பார்வையிட்டார்.
பின்னர் நிலம்பூர் வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரை நேரில் சென்று அவர்களின் பிரச்னைகளை பிரியங்கா காந்தி கேட்டறிந்தார்.
- பேச்சு சுதந்திர உரிமையை நசுக்க நேருவின் ஆட்சிக் காலத்தில் அரசியலமைப்பு திருத்தப்பட்டது.
- இந்த ஒப்பந்தம் எந்த நன்மையையும் தரவில்லை என்று நேருவே தனது செயலாளரிடம் தனது தவறை ஒப்புக்கொண்டார்.
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு மீது இந்நாள் பிரதமர் மோடி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய மோடி, "நேரு நாட்டை ஒரு முறை அல்ல, இரண்டு முறை பிரித்தார். முதலில் ராட்க்ளிஃப் கோடு மற்றும் பின்னர் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் மூலம், அவர் நாட்டிற்கு சேதம் விளைவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் சிந்து நதியின் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் எந்த நன்மையையும் தரவில்லை என்று நேருவே தனது செயலாளரிடம் தனது தவறை ஒப்புக்கொண்டார். இந்த ஒப்பந்தம் முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது.
அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு சுதந்திர உரிமையை நசுக்க நேருவின் ஆட்சிக் காலத்தில் அரசியலமைப்பு திருத்தப்பட்டது.
காங்கிரஸ் அரசு பின்தங்கிய வகுப்பினரின் வளர்ச்சிக்கு ஒருபோதும் பாடுபடவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் கீழ் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கான நடவடிக்கைகளை நாடு எடுத்து வருகிறது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், "11 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, தனது பொறுப்புகளில் இருந்து தப்பிக்க நேருவை மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி வருகிறது.
கடந்த காலத்தை தோண்டி எடுப்பதை நிறுத்திவிட்டு, நிகழ்காலத்தில் நடக்கும் விஷயங்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? நீங்கள் மக்களுக்கு பொறுப்பு வேண்டும்" என்று தெரிவித்தார்.
- பீகாரில் உள்ள ஒரு பெண்மணியின் வயது 124 என வாக்காளர் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- இதை ராகுல் காந்தி வெளிப்படுத்திய நிலையில், பிரியங்கா காந்தி அந்த பெண் படம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்திருந்தார்.
காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 48 தொகுதிகளில் வாக்கு திருட்டு நடந்ததாக கூறினார். அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்.
அப்போது அவர் வாக்காளர் பட்டியலில் இருந்த குளறுபடிகளையும் சுட்டிக் காட்டினார். எடுத்துக்காட்டாக பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மிந்தாதேவி என்ற பெண்ணுக்கு 124 வயது என்று பதிவு செய்யப்பட்டு இருப்பதை குறிப்பிட்டார்.
பீகார் வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை கண்டித்து கடந்த சில தினங்களாக பாராளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று போராட்டம் நடந்தபோது பிரியங்கா மற்றும் சில காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் டீ-சர்ட் அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
அவர்கள் அணிந்து இருந்த டி.சர்ட் முன் பகுதியில் மிந்தாதேவியின் புகைப்படமும் பின் பகுதியில் 124 நாட்அவுட் என்றும் பொறிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மிந்தாதேவி பற்றிய தகவல்கள் நேற்று நாடு முழுவதும் பரவியது.
ஒரே நாளில் புகழ்பெற்ற மிந்தாதேவிக்கு 35 வயது ஆகிறது. இவர் பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள பிரபுநாத் நகரில் வசித்து வருகிறார். வாக்காளர் பட்டியலில் தனது பெயர் 124 என்று தவறாக இருப்பதை 2 தினங்களுக்கு முன்பு சுட்டிக்காட்டி இருந்தார். இந்த நிலையில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி பிரியங்கா போராட்டம் நடத்தியதால் அவர் கடும் கோபம் அடைந்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எனது புகைப்படத்தை டி.சர்ட்டில் பொறித்து அணிந்து கொள்வதற்கு பிரியங்கா காந்திக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர் யார்? அவர் என் சொந்தக்காரரா? எதற்காக அவர் என் அனுமதி இல்லாமல் என் புகைப்படத்தை பயன்படுத்த வேண்டும்?
அவரது இந்த செயலால் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். நிறைய பிரச்சி–னைகளை சந்திப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. எனது படத்தை பிரியங்கா அணிந்து இருப்பது போன்று பார்த்து விட்டு எனது நண்பர்கள், உறவினர்கள் தொடர்ந்து அழைத்து பேசியபடி உள்ளனர்.
என்னால் வெளியில் செல்ல இயலவில்லை. என் வீட்டை சுற்றி சுற்றி நிருபர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். பிரியங்காவின் செயலால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன். பிரியங்கா பிரசாரத்துக்கு என்னை ஏன் பயன்படுத்துகிறார்?
நான் சாதாரண குடும்ப பெண். திடீரென அரசியல் ரீதியாக எனது படம் பயன்படுத்தி இருப்பது என்னை மிகவும் வேதனைக் குள்ளாக்கி இருக்கிறது. என்னை பலிகடா ஆக்கக் கூடாது? வாக்காளர் பட்டியலில் உள்ள எனது வயது தவறை சரி செய்து கொடுத்தாலே போதுமானது.
நான் எனது கணவர், குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன். என் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பிரியங்கா நடந்துள்ளார். அவர் ஏன் இந்த விவகாரத்தில் தலையிடுகிறார்.
எனக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு எனக்கு தொல்லை ஏற்படுத்தி உள்ளார். இதை எப்படி எனக்கு பிரியங்கா கொடுத்த ஆதரவாக கருத முடியும். என்னை தவறான முறையில் அவர் பிரசாரம் செய்து உள்ளார்.
இந்த தவறுக்கு நான் காரணம் அல்ல. அதிகாரிகள் தவறை திருத்துவதாக சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது எனது முகவரியை பிரியங்கா நாடு முழுவதும் வெளிப்படுத்தி எனக்கு தொல்லையை ஏற்படுத்தி இருக்கிறார். இதை செய்வதற்கு அவர் யார்?
இவ்வாறு அவர் கூறினார்.
- காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை என்றார் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர்.
- இஸ்ரேல் 25,000 ஹமாஸ் பயங்கரவாதிகளையே கொன்றது என தெரிவித்தார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் எம்.பி.யும், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, இன்று தனது எக்ஸ் தளத்தில், இஸ்ரேலிய அரசு இனப்படுகொலை செய்துவருகிறது. 60,000-க்கும் மேற்பட்ட மக்களை அது கொன்றுள்ளது, இவர்களில் 18,430 பேர் குழந்தைகள்.நூற்றுக்கணக்கானோரை இஸ்ரேல் பட்டினியால் கொன்றுள்ளது. இதில் பலர் குழந்தைகள். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது என பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவை டேக் செய்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் பதில் அளித்துள்ளார்.
அவரது பதிவில், வெட்கக்கேடானது உங்கள் வஞ்சகம். இஸ்ரேல் 25,000 ஹமாஸ் பயங்கரவாதிகளையே கொன்றது. பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட உயிரிழப்புக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பது ஹமாசின் கொடூரமான தந்திரங்கள். வெளியேற அல்லது உதவி பெற முயற்சிக்கும் மக்களைச் சுடுவது, அவர்களுக்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களை நடத்துவது ஆகியவை காரணமாகவே பொதுமக்கள் உயிரிழக்க நேரிடுகிறது.
காசாவுக்கு 20 லட்சம் டன் உணவை இஸ்ரேல் வழங்கியது. அவற்றைக் கைப்பற்ற ஹமாஸ் முயல்வதன் மூலம் பட்டினியை உருவாக்குகிறது. கடந்த 50 ஆண்டுகளில் காசாவின் மக்கள் தொகை 450 சதவீதம் அதிகரித்துள்ளது. அங்கு இனப்படுகொலை இல்லை என தெரிவித்தார்.
இதேபோல், அல்ஜசீரா தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டதற்கும் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வாக்குகள் திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி பெரிய தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
- 30 நாட்களுக்குள் பிரமாணப்பத்திரம் சமர்ப்பிக்கலாம்.
புதுடெல்லி:
பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நேற்று தேர்தல் கமிஷன் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் இணைந்து வாக்குகளை திருடியதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதிக்குட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்ற தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் சகோதரியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி எம்.பி. இன்று பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்குகள் திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி பெரிய தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தவறாக எதுவும் சொல்லவில்லை. ஏதேனும் பிரச்சனை அல்லது தற்செயலான தவறு இருந்தால், அது விசாரிக்கப்பட வேண்டும்.
ஆனால் விசாரிப்பதற்கு பதிலாக பா.ஜ.க. ஒரு பிரமாணப் பத்திரத்தைக் கேட்கிறது. 30 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கலாம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. பின்னர் அவர்கள் ஏன் பிரமாணப் பத்திரத்தைக் கேட்கிறார்கள்?
வேண்டுமென்றே தவறு நடந்தால் அதை நீங்கள் விசாரிக்க வேண்டும். நீங்கள் ஏன் எங்களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்கவில்லை? நீங்கள் ஏன் விசாரிக்கவில்லை? சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்களா? சுமார் 1 லட்சம் வாக்காளர்களை நீக்குவதன் மூலம், யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக தீர்மானிக்க முடியும். ஒரு நாள் மற்றவர்கள் அதிகாரம் பெறும்போது ஜனநாயகத்தின் இந்த முழுமையான அழிவில் துணை நின்றவர்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






