என் மலர்
இந்தியா

நிம்மதியாக ஓய்வு பெற முடியாது.. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு பிரியங்கா நேரடி எச்சரிக்கை
- எஸ்.எஸ்.சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் பெயர்களையும் மறந்து விடாதீர்கள்.
- இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் "சோர்-சோர்" என்று முழக்கமிட்டனர்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில் நவம்பர் 11 அன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்நிலையில் பீகாரின் ரேகா பகுதியில் இன்று நடந்த பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, "ஞானேஷ் குமார், தவறு செய்துவிட்டு நீங்கள் அமைதியாக ஓய்வு பெற்றுவிடலாம் என்று நினைத்தால், அது நடக்காது. ஞானேஷ் குமாரின் பெயரை ஒருபோதும் மறக்காதீர்கள் என்று பொதுமக்களிடம் நான் சொல்கிறேன்.
அதேபோல எஸ்.எஸ்.சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் பெயர்களையும் மறந்து விடாதீர்கள். அரியானாவில் வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டதை, மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் "சோர்-சோர்" (திருடன்-திருடன்) என்று முழக்கமிட்டனர்.
முன்னதாக 2024 அரியானா சட்டமன்றத் தேர்தலின் போது முடிவுகளைத் மாற்றுவதற்காக 25 லட்சம் போலி வாக்குகள் பயன்படுத்தப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.
இதில் ஞானேஷ் குமார், எஸ்.எஸ்.சந்து, விவேக் ஜோஷி ஆகிய மூன்று தேர்தல் ஆணையர்கள் குற்றவாளிகள் என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






