என் மலர்
இந்தியா

பீகாரில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை இதுவரை வழங்காதது ஏன்?- பிரியங்கா காந்தி கேள்வி
- ராஷ்டீரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம்.
- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பீகாரில் பிரசாரம் செய்தார்.
பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் ஐக்கிய ஜனதாதளம்- பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், எதிர்கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பீகாரில் பிரசாரம் செய்தார். பெகுசராய் பகுதியில் அவர் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக ஓட்டு சேகரித்தார்.
முன்னதாக பாட்னா விமான நிலையத்தில் பிரியங்கா காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
ஒரு கோடி வேலை வாய்ப்புகளை வழங்குவதாக பா.ஜ.க கூட்டணி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இதுவரை அவர்கள் அதை வழங்காதது ஏன்? இப்போது அதைப்பற்றி கூறுவது ஏன்?
பீகாரில் மெகா கூட்டணி ஏன் ஆட்சி அமைக்காது. நிச்சயமாக நாங்கள் ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






