என் மலர்
நீங்கள் தேடியது "தோனி"
- 10 லட்சம் ரூபாயை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு மார்ச் 12-ந் தேதிக்குள் டோனி செலுத்த வேண்டும்.
- ரூ.100 கோடியை மான நஷ்ட ஈடு கோரி சம்பத் குமாருக்கு எதிராக டோனி மனு தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில், சென்னை அணி வீரர் மகேந்திரசிங் டோனிக்கும் தொடர்பு இருப்பதாக, ஓய்வுப்பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி சம்பத் குமாருக்கு எதிராக டோனி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய சிடி-யை எழுத்து வடிவமாக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, வழக்கு தொடர்பான சிடி-யை எழுத்துவடிவமாக்க மொழிபெயர்ப்பாளரும், தட்டச்சரும் முழுநேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. இதற்கு 3 முதல் 4 மாதங்களாகும். மொழியாக்கம் செய்யப்படும் ஆவணங்களை நகல் எடுக்க கூடுதல் செலவினம் ஏற்படுகிறது.
இதனால், மொழியாக்கத்துக்கான கட்டணமாக 10 லட்சம் ரூபாயை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு மார்ச் 12-ந் தேதிக்குள் டோனி செலுத்த வேண்டும்.
மேலும், மொழியாக்க பணிகளை மார்ச் 3-வது வாரத்துக்குள் மொழி பெயர்ப்பாளர், தட்டச்சர் முடிக்க வேண்டும். விசாரணையை மார்ச் 12-ந் தேதிக்கு தள்ளிவைகிறேன் என்று உத்தரவிட்டார்.
- ஐபிஎல் 2026-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது.
2026 ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.
ஐபிஎல் 2026-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மார்ச் இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், எம்.எஸ்.தோனி பயிற்சியை தொடங்கியுள்ளார்.
எம்.எஸ்.தோனி பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோவை ஜார்க்கண்ட் கிரிக்கெட் அசோசியேசன் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேமிசன் பந்தில் 93 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார்.
- நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை கோலி வென்றார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.
இப்போட்டியில் ரோகித் அவுட்டாகி வெளியேறிய சமயத்தில் கோலி களமிறங்கிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.
போட்டி முடிந்த பின்பு இதுகுறித்து பேசிய கோலி, "ஒருவர் அவுட் ஆகி வெளியே செல்லும்போது, களத்திற்குள் வரும் எனக்கு அதிக ஆர்ப்பரிப்பு எழுவது எனக்கு பிடிக்கவில்லைதான். இதே போல தோனிக்கும் அடிக்கடி நடக்கிறது. ரசிகர்களின் உற்சாகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில், அவுட்டாகி வெளியேறுபவர் இதை பெரிதும் விரும்ப மாட்டார் என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
- பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவை தலா 14.20 கோடி கொடுத்து சி.எஸ்.கே. அணி ஏலத்தில் எடுத்தது
- 2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான வீரர்களை எடுத்துள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலத்தில் பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய அன்கேப்ட் வீரர்களை தலா 14.20 கோடி கொடுத்து சி.எஸ்.கே. அணி ஏலத்தில் எடுத்து பெரும் பேசுபொருளானது.
2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான வீரர்களை எடுத்துள்ளது.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு ரெட்ரோ லுக்கில் சி.எஸ்.கே. வீரர்கள் இருக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்துள்ளது.
- இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 30-ந் தேதி ராஞ்சியில் நடக்கிறது.
- இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் ராஞ்சிக்கு வந்தடைந்தனர்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிந்தது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றி சாதனை படைத்தது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெற்ற விராட் கோலி, ரிஷப் பண்ட், ருதுராஜ் ஆகியோருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே வீரருமான எம் எஸ் தோனி தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.
அதற்காக 3 பேரும் நேற்று இரவு தோனி வீட்டுக்கு சென்றனர். விருந்துக்கு பின்னர் தோனியே தனது காரை ஓட்டிச் சென்று விராட் கோலியை ஹோட்டலில் இறக்கிவிட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- கடல் போன்ற மஞ்சள் படை தோனியின் பெயரை உச்சரிக்கும்.
- எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது.
2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.
அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.
இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் சென்னை மைதானத்தில் தோனி நுழைந்தால் மைதானமே அதிரும் என்று இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோ ரூட், "ஐபிஎல் போட்டியின் போது, சென்னையில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய வரும்போது, மைதானம் குலுங்குவது போலவும், அதிர்வது போலவும் உணர்வீர்கள். அரங்கமே அதிர்வுறும். கடல் போன்ற மஞ்சள் படை அவரது பெயரை உச்சரிக்கும். எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது. என்ன ஒரு அனுபவம் அது" என்று தெரிவித்தார்.
- தோனி மனைவி சாக்ஷி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
- தோனி இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் இந்திய அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். மேலும் சிஎஸ்கே மூலமும் பல ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார்.
அவர் இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்குவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் எம்.எஸ். தோனி மனைவி சாக்ஷி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு தோனி கேக் கொடுக்கும் புகைப்படத்தை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து நம் தலைவன் தலைவிக்கு பிறந்தநாள் விசில்கள் என தலைப்பிட்டுள்ளது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது.
- 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.
2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.
அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.
இந்நிலையில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதை குறிப்பிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
கூலி படத்தின் கூலி பவர் ஹவுஸ் பாடலை பயன்படுத்தி சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் தல தோனிக்கு இந்த வீடியோவை சி.எஸ்.கே. அணி எடிட் செய்துள்ளது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது.
- 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.
2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.
அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.
மேலும், ஐபிஎல் 2026-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- சென்னை வந்த கவுருக்கு பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- கவுர், பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 52 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி கோப்பையை வென்றது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றிக்கு பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், நடிகர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
அந்த வகையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதனால் சென்னை வந்த அவருக்கு மேளதாளங்கள் முழங்க, பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாணவிகள் இந்திய வீராங்கனைகளின் ஜெர்சியை அணிந்து வந்து ஹர்மன்பிரீத் கவுரிடம் கோப்பையை பெற்றுக்கொண்டனர். அதாவது மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியினர் கோப்பையை வென்று கொண்டாடியதை போன்று அவர்கள் நடித்து காட்டினர்.
இதனை தொடர்ந்து அவர் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கவுரிடம் மாணவர் ஒருவர் தோனி, விராட் கோலி இவர்களில் யார் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் என கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி என கவுர் பதிலளித்தார். இதனால் அரங்கமே அதிர்ந்தது.
அதனை தொடர்ந்து தோனி, ஸ்மிருதி மந்தனா இவர்களில் யார் என கேள்வி எழுப்ப மந்தனா என பதிலளித்தார். இதனால் அதிர்ந்த அரங்கம் அமைதியானது. அதனை தொடர்ந்து மந்தனாவா மிதாலி ராஜா என கேள்வி எழுப்ப மீண்டும் ஸ்மிருதி என பதிலளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பாகிஸ்தான் 2 - 1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
- தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் தொடர் நாயகன் விருதை வென்றார்.
பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் நேற்று 3ஆவது மற்றும் கடைசி போட்டி பைசலாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற்ற பாகிஸ்தான் 2 - 1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
தொடரை இழந்தாலும் தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் தொடர் நாயகன் விருதை வென்றார். இதன்மூலம் ஒருநாள் தொடரில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை (POTS) வென்ற விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற தோனியின் (7) சாதனையை டி காக் (7) சமன் செய்தார்.
- எம் எஸ் தோனி ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.
- தோனி குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம் எஸ் தோனி . அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக கபில் தேவுக்கு பிறகு 2-வது உலகக் கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன் டோனி ஆவார்.
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பிறகு அவர் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது. அவர் ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்டாலும் சரி, பைக் ஓட்டினாலும் சரி, விமான நிலையத்தில் இருந்து நடந்து வந்தாலும் சரி உடனே அந்த வீடியோ வைரலாகி விடும்.
அந்த வகையில் ரசிகர் ஒருவரின் பைக்கின் எம்.எஸ். தோனி ஆட்டோகிராப் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.






