என் மலர்
ஆன்மிகம்
- இந்த ஆண்டுக்கான கார்த்திகை திருவிழா வருகிற 27-ந் தேதி சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
- டிசம்பர் 2-ந் தேதி மலைக்கோவிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் பல்வேறு திரு விழாக்களில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா முக்கியமான தாகும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை திருவிழா வருகிற 27-ந் தேதி சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறும்.
டிசம்பர் 2-ந் தேதி மலைக்கோவிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 3-ந் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
அன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மலைக்கோவிலில் 4 மூலைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதன்பின் சரியாக மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொழுத்தப்படும். இதே போல் பழனி கோவிலின் உபகோவில்களான திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன், பூம்பாறை முருகன் கோவில்களிலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- 13 பவுர்ணமிகள் கோரக்கரை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
- நூற்றுக்கணக்கான துறவிகள் உலக நாடுகளில் இருந்து கோரக்கரை வழிபட்டு ஞான விரிவு பெறுகிறார்கள்.
வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஆசிரமத்தை எந்த நாட்களிலும் சென்று வழிபடலாம். இங்கு ஒவ்வொரு நாளும் 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக குருவாரம் எனப்படும் வியாழக்கிழமை (கோரக்கர் பிறந்த நாள் என்பர்) அன்று வழிபடுவது சிறப்பாகும்.
வியாழக்கிழமைகளில் காலை முதல் உபவாசம் இருந்து இரவு வழிபட்டு, பிரசாதம் உண்டு, கோவில் வளாகத்தில் தங்கி உறங்கி, விடியல் நீராடி கோரக்கரை வழிபட்டு திரும்பினால் மனக்கவலைகள் அகலும்.
மேலும், பவுர்ணமி அன்று வழிபட்டால் ஒரு மாதம் வழிபட்ட பலன் கிடைக்கும். அதிலும், ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று அன்னாபிஷேக வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும். அன்று கோரக்கரை தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஐப்பசி பரணி தினத்தன்று வழிபட்டால் ஓராண்டு வழிபட்ட பலன் கிடைக்கும். தொடர்ந்து, 13 பவுர்ணமிகள் கோரக்கரை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அதுமட்டுமின்றி, கோரக்கரை வழிபட்டால் திருமணமாகாத இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைபேறு இல்லாத தம்பதிக்கு குழந்தைபேறு கிட்டும். புற்றுநோய் முதலிய அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம். மன வளர்ச்சி குன்றியோர் இங்கு வந்து சென்றால் மனநலம் பெறுகிறார்கள்.
களவுபோன பொருட்கள் திரும்ப கிடைக்கின்றன. தொலை தூர பயணம் மேற்கொள்ளும் போது இவரை வணங்கி புறப்பட்டால் சிறப்பான பயணமாக அமைவதோடு செல்வ வளமும் கூடும் என்கின்றனர் பக்தர்கள்.
கருவறையில் உள்ள சிவன், உமை, சித்தர் திருவடிகளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது குடும்ப பிரச்சினைகளை நீக்குவதோடு, வெளியில் சொல்ல முடியாத கவலைகளையும் அகற்ற துணையாகிறது. நூற்றுக்கணக்கான துறவிகள் உலக நாடுகளில் இருந்து கோரக்கரை வழிபட்டு ஞான விரிவு பெறுகிறார்கள்.
கோரக்கர் படத்தை வீடுகளில் வைத்து பூஜிப்பதும், பயண நேரங்களில் சட்டை பையில் வைத்து கொண்டு பயணிப்பதும் நன்மை தருவன. இவரை இயல், இசை, நாடக கலை வல்லுநர்கள் வழிபட்டு புதிய வாய்ப்புகளை பெற்று உயர்கிறார்கள். சித்தர்கள் போற்றிய பெரும் சித்தர் கோரக்கர். அதனால் அவரை தொழுவது சித்தர் உலகையே பூஜித்து கோடி புண்ணியப்பலன் பெறுவதற்கு சமமாகும்.
- பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார்.
- மணிகண்டன் நான் காட்டுக்குள் சென்று புலி பாலை கொண்டு வருகிறேன் என்று கூறி புறப்பட்டு சென்றான்.
மகிஷாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் இருந்து தன்னை யாரும் அழிக்கக்கூடாது என்ற வரம் பெற்றான். முப்பெரும் தேவியர் சண்டிகாதேவி என்ற அவதாரம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தனர். மகிஷாசுரனின் சகோதரி மகிஷி தன் சகோதரன் கொல்லப்பட்டதற்கு பரிகாரம் காண்பதற்காக கடும் தவம் இருந்தாள். ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் தனக்கு அழிவு வரவேண்டும் என்ற வரத்தை பெற்றாள்.
மகிஷியை அழிப்பதற்காக ஐயப்ப அவதாரத்தை சிவ பெருமான் உண்டாக்கினார். பாற்கடலை கடைந்த போது அசுரர்களை மயக்க திருமால் மோகினி அவதாரம் எடுத்தார். அவர் அழகை கண்டு பரவசம் அடைந்த சிவன் அவளை தழுவினார். இதனால் சிவ விஷ்ணுவின் ஆற்றல் கொண்ட தர்மசாஸ்தா அவதரித்தார்.
பந்தள மன்னர் ராஜசேகரன் குழந்தை இல்லாமல் இருந்து வந்தார். அவர் தனக்கு குழந்தை பிறக்க வேண்டுமென்று சிவனிடம் தினமும் மனம் உருக வேண்டினார்.
மார்கழி மாதம் உத்திர நட்சத்திர தினத்தன்று பந்தள மன்னர் காட்டுக்கு வேட்டையாட சென்ற போது அங்கு கிடந்த ஒரு குழந்தையை கண்டெடுத்தார். அந்த குழந்தையை அரண்மனைக்கு எடுத்துவந்தார். வழியில் முதியவர் வடிவில் தோன்றிய திருமால் குழந்தை கழுத்தில் கனகமணி மாலை அணிவித்து மணிகண்டன் என்ற பெயரை சூட்டினார்.
குழந்தையை ராணியிடம் பந்தள மன்னர் கொடுத்தார். ராணியும் மகிழ்ச்சி அடைந்தாள். அந்த குழந்தையை தாலாட்டி சீராட்டி வளர்த்தாள். அந்த குழந்தை அற்புதங்கள் பல செய்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன் எல்லா கலைகளிலும் தேர்ச்சி பொற்றான். குருவின் வாய் பேச முடியாத மகனை பேச வைத்து அற்புதம் நிகழ்த்தினான்.
இந்த நிலையில் ராணிக்கு அழகான ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராஜராஜன் என பொயர் சூட்டினர். என்றாலும் பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார். இதை மந்திரி ஒருவர் விரும்பவில்லை. ராணி மனதை மாற்றி மணிகண்டனை விரட்ட முடிவு செய்தனர்.
மந்திரி திட்டப்படி ராணி தலைவலி வந்தது போல் நடித்தாள். புலி பால் கொண்டு வந்தால் தான் ராணி தலைவலியை சரிப்படுத்த முடியும் என்று மருத்துவர்களை அந்த மந்திரி சொல்ல வைத்தான். புலி பாலை யார் கொண்டு வரமுடியும் என அரசவையில் உள்ள எல்லோரும் திகைத்து நின்றனர். அப்போது மணிகண்டன் நான் காட்டுக்குள் சென்று புலி பாலை கொண்டு வருகிறேன் என்று கூறி புறப்பட்டு சென்றான். காட்டுக்குள் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் கடும் போர் ஏற்பட்டது. மகிஷியை அம்பு ஏய்தி மணிகண்டன் வீழ்த்தினார். தன்னை வீழ்த்தியது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஒருவன் என்பதை உணர்ந்த மகிஷி மறுஉருவம் பெற்று எழுந்தாள்.
ஐயப்பனை திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். ஆனால் இந்த அவதாரத்தில் பிரம்மச்சாரியாக வாழப்போவதாக கூறிய அய்யப்பன் அவளை தனது இடது பக்கத்தில் சிறு தூரத்தில் நிலைக்கொள்ளும்படி செய்தார். அவளே மஞ்சமாதா என்று அழைக்கப்படுகிறாள். அதன்பிறகு புலி மீது ஏறி பந்தள நாட்டு அரண் மனைக்கு ஐயப்பன் திரும்பி வந்தார். அவரை கண்டு அனைவரும் பயபக்தியுடன் வணங்கினார்கள். 12 வயது முடிந்ததும் தான் ஒரு தெய்வ பிறவி என்பதை பந்தள மன்னர் ராஜசேகரனுக்கு ஐயப்பன் உணர்த்தினார். தனக்கு சபரிமலையில் ஆலயம் எடுக்க உத்தரவிட்டார்.
சபரிமலையில் தான் ஒரு அம்பை எய்வதாகவும் அந்த அம்பு எந்த இடத்தில் போய் விழுகிறதோ அங்கு கோவில் கட்டும்படி அருள்பாலித்தார்.
அதன்படி பந்தள ராஜா ஐயப்பன் கோவிலை கட்டினார். பரசுராமர் உதவியுடன் மகரசங்கர நாளில் சனிக்கிழமையன்று கோவில் கட்டி திறக்கப்பட்டது.
இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று ஐயப்பன் ஜோதி வடிவில் இன்றும் அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.
- துளசி மாலையில், மணியைக் கோர்த்து குழந்தையின் கழுத்தில் போட்டனர்.
- துளசி வெப்பத்தை வெளிப்படுத்தக்கூடியது.
ஐயப்பன் அவதரித்தபோது, அவரது தாயான திருமாலும், தந்தையான சிவபெருமானும் பம்பை நதிக்கரையில் விட்டுச் சென்றனர். அப்போது குளிர்காற்றில் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக, துளசி மாலையில், மணியைக் கோர்த்து கழுத்தில் போட்டனர்.
இதுதவிர மகாவிஷ்ணுக்கு பிடித்தது துளசி. இதனால்தான் ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள், துளசி மாலையில், ஐயப்பனின் உருவம் பொறித்த டாலரை அணிகின்றனர். கார்த்திகை மாதம், மழைக்காலம். துளசி வெப்பத்தை வெளிப்படுத்தக்கூடியது என்பதால், துளசிமாலையை அணிவதாக அறிவியல் ரீதியான விளக்கமும் உள்ளது.
- சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க 18 படிகள் வழியாக அனுமதிக்கப்படுவர்.
- ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொரு தெய்ம் வசிப்பதாக கருதப்படுகிறது.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க 18 படிகள் வழியாக அனுமதிக்கப்படுவர். அந்த 18 படிகளிலும் 18 தெய்வங்கள் வசிப்பதாக கருதப்படுகிறது.
ஒன்றாம் படி - சூரியன்
இரண்டாம் படி - சிவன்
மூன்றாம் படி - சந்திரன்
நான்காம் படி - பராசக்தி
ஐந்தாம் படி - செவ்வாய்
ஆறாம் படி - ஆறுமுகப் பெருமான்
ஏழாம் படி - புதன்
எட்டாம் படி - மகாவிஷ்ணு
ஒன்பதாம் படி - குரு பகவான்
பத்தாம் படி - பிரம்மா
பதினோறாம் படி - சுக்ரன்
பன்னிரெண்டாம் படி- திருவரங்கன்
பதின்மூன்றாம் படி - சனீஸ்வரன்
பதினான்காம் படி - எமதர்மன்
பதினைந்தாம் படி - ராகு
பதினாறாம் படி - காளி
பதினேழாம் படி - கேது
பதினெட்டாம் படி - விநாயகர்
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-27 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : நவமி மறுநாள் விடியற்காலை 4.38 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : மகம் நள்ளிரவு 1.06 மணி வரை பிறகு பூரம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சனம், சுவாமிமலை முருகப்பெருமான் வைரவேல் தரிசனம்
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதர் யானை வாகனத்தில் வீதி உலா. நெல்லை ஸ்ரீ காந்திமதியம்மன் ரதோற்சவம். மாயவரம் ஸ்ரீ கவுரிமாயூரநாதர் காலை யானை, யாளி வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு. இரவு ஸ்ரீ அபயாம்பிகை ஸ்ரீ மாயூரநாத சுவாமி திருக்கல்யாண வைபவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திரரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்0திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு, திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிந்தனை
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-பரிசு
கடகம்-நட்பு
சிம்மம்-பெருமை
கன்னி-நற்செயல்
துலாம்- இன்பம்
விருச்சிகம்-உழைப்பு
தனுசு- உண்மை
மகரம்-நன்மை
கும்பம்-பயணம்
மீனம்-திருப்பம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
உடன்பிறப்புகள் உறுதுணையாக இருக்கும் நாள். உத்தியோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும்.
ரிஷபம்
கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் காணும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
மிதுனம்
வருமானம் திருப்தி தரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
கடகம்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். பணப்புழக்கம் அதிகரித்தாலும் அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.
சிம்மம்
முன்னேற்றம் கூடும் நாள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். உடல்நலத்தில் சிறிது அக்கறை காட்டுவது நல்லது.
கன்னி
யோகமான நாள். ஆரோக்கியம் சீராகும். வழக்கமாக செய்யும் பணியை இன்று மாற்றியமைப்பீர்கள். தொழில் ரீதியான பயணம் உண்டு.
துலாம்
வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழில் ரீதியாக செய்த புது முயற்சிகளில் வெற்றி பெறும்.
விருச்சிகம்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். தேசப்பற்று மிக்கவர்களின் உதவி கிடைக்கும். பழைய கடன்களை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
தனுசு
அமைதியைக் கடைப்பிடித்து ஆனந்தம் காண வேண்டிய நாள். வேலைகள் உடனடியாக முடியாமல் இழுபறி நிலை ஏற்படும். கேட்ட இடத்தில் உதவி கிடைப்பது அரிது.
மகரம்
நிம்மதி குறையும் நாள். வரவை விட செலவு கூடும். அலுவலகப் பணிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். உத்தியோக முயற்சியில் தடை ஏற்படலாம்.
கும்பம்
எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும் நாள். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மீனம்
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் ஒன்று நடைபெறும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.
- ஐயப்பனுக்கு பிடித்தமான அபிஷேகம், நெய் அபிஷேகம்.
- சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு, கோவில் சார்பாக அரவணை பாயசமும், அப்பமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசிக்கிறார்கள்.
கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், பத்தனம்திட்டா என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ளது, சபரிமலை. இந்த மலை மீது மிகவும் பிரசித்திப் பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் 1-ந் தேதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்கச் செல்வார்கள். சபரிமலை ஐயப்பன் ஆலயம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1535 அடி உயரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கிறது.
அகிலத்தைக் காக்கும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாக, அன்னை லலிதா திரிபுரசுந்தரி இருக்கிறார். இவரை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தவம் இருந்து வழிபட்டனர். அவர்கள் முன் தோன்றிய அம்பாளிடம், "விஸ்வரூப தரிசனம் காட்டியருள வேண்டும்" என்று வேண்டினர். அதன்படியே தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை அம்பாள் காட்டினார். அப்போது அந்த தேவியின் இதயத்தில் ஒரு லட்சம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவில் ஒரு சக்தி இருப்பதை மும்மூர்த்திகளும் கண்டனர். அந்த சக்தியே, 'மகா சாஸ்தா'. அந்த சக்தி தனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் மனதிற்குள் நினைத்தனர். அதன்படியே சிவனுக்கும், மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கும் ஹரிஹர அம்சமாக ஐயப்பன் என்ற பெயரில் அவதரித்தார், சாஸ்தா.
தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்தி வந்த மகிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு, சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே 'சபரிமலை' என போற்றப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பனின் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தைச் சுற்றிலும், மாளிகைப்புறத்தம்மன், கன்னிமூல கணபதி, வாவர் சுவாமி, கடுத்தசுவாமி ஆகிய துணை தெய்வங்களும் உள்ளன.
மலை மீதுள்ள இந்த ஆலயத்தை அடைவதற்கு இரண்டு பாதைகள் இருக்கின்றன. எரிமேலி என்ற இடத்தில் இருந்து அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக 61 கிலோமீட்டர் நடைபயணம் செல்ல வேண்டும். மற்றொன்று பம்பை ஆற்றில் இருந்து ஐந்து கிலோமீட்டர் நடைபயணம் செல்ல வேண்டும். சபரிமலையானது, சுயம்பு லிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது. இங்கு சிவனைப் போல தியான கோலத்திலும் (முக்தி அளிப்பது), விஷ்ணுவைப் போல விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) ஐயப்பன் அருள்பாலிக்கிறார்.
ஐயப்பனுக்கு பிடித்தமான அபிஷேகம், நெய் அபிஷேகம். பக்தர்கள் இருமுடிகட்டி கொண்டுவரும் தேங்காய்க்குள் இருக்கும் நெய்யைக் கொண்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இறைவனுக்கு அபிஷேகத்துக்கு பக்தர்கள் அளித்த நெய் (ஜீவ ஆத்மா), பரமாத்மாவுடன் (இறைவன்) இணையும் தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சபரிமலை ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், 108 ஒரு ரூபாய் நாணயம் ஆகிய எட்டு பொருட்களைக் கொண்டு செய்யப்படும் அபிஷேகம் 'அஷ்டாபிஷேகம்' என்று வழங்கப்படுகிறது.
இந்த ஆலயத்திற்குள் வரும் பக்தர்கள், அங்கு எழுதப்பட்டிருக்கும் 'தத்வமஸி' என்ற வார்த்தையைப் பார்த்திருப்பார்கள். அதற்கு 'நீயும் கடவுள்' என்று பொருள். மகரசங்கராந்தி (தைப்பொங்கல்) அன்று, இத்தல இறைவனான ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவார். இந்த ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்து தரிசிக்க முடியும்.
சபரிமலையில் ஐயப்பன் கோவிலுக்குப் பின்புறம், மாளிகை புறத்தம்மன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இங்கு தேங்காயை உடைத்து வழிபடக்கூடாது. மாறாக உருட்டி வழிபாடு செய்ய வேண்டும். அதோடு மஞ்சள்பொடியை அம்பாளுக்கு படைத்து வழிபாடு செய்யலாம். ஐயப்பனை புகழ்ந்து பாடும் பாடல்கள், பல பக்தர்களால் பாடப்பட்டிருந்தாலும், சபரிமலை ஆலயத்தில் நடைசாத்தப்படும் நேரத்தில் இசைக்கப்படும் 'ஹரிவராசனம்' பாடல், மிகவும் முக்கியமானது. இது ஐயப்பனுக்கான தாலாட்டு பாடலாகும்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு, கோவில் சார்பாக அரவணை பாயசமும், அப்பமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதில் அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து செய்யப்படும் அரவணை பாயசம் பலரது விருப்பமானதும், சுவைக்கு புகழ்பெற்றதும் ஆகும். சபரிமலை ஆலயத்தின் நிர்வாக உரிமை, திருவாங்கூர் தேவஸ்தானக் குழுவிடம் உள்ளது. ஆலயத்திற்குள் பூஜை செய்யும் அதிகாரம் பெற்றவர்கள், தந்திரிகள் ஆவர். திருவாங்கூர் தேவஸ்தானம், சபரிமலை ஐயப்பன் கோவிலை, சுமார் ரூ.30 கோடிக்கு காப்பீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன வேறுபாடின்றி, ஒரே மனதுடன், ஒரே மந்திரத்தை உச்சரித்தப்படி சுவாமி ஐயப்பனின் திருவடிகளை அடைய வேண்டும் என்பதே இந்த ஆலயத்தின் அடிப்படை.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வரவு திருப்தி தரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள்.
ரிஷபம்
உறவினர்களை சந்தித்து உள்ளம் மகிழும் நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மிதுனம்
கோவில் வழிபாட்டல் குதூகலம் காண வேண்டிய நாள். திடீர் முன்னேற்றம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
கடகம்
தொட்டது துலங்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். விரதம். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். உத்தியோகத்தில் இடமாறுதல் ஏற்படும்.
சிம்மம்
ஆலய வழிபாட்டில் அக்கறை செலுத்தும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அன்னிய தேசத்திலிருந்து நல்ல தகவல் வரலாம்.
கன்னி
கலகலப்பான செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
துலாம்
இன்பங்கள் வந்து சேரும் நாள். தொழிலுக்காக எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.
விருச்சிகம்
புகழ் கூடும் நாள். புனிதப் பயணங்கள் உண்டு. நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். வரவு திருப்தி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
தனுசு
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மகரம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய சொத்துகள் வாங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வர்.
கும்பம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மீனம்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். பகை ஒன்று நட்பாகலாம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-26 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அஷ்டமி மறுநாள் விடியற்காலை 4.52 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : ஆயில்யம் நள்ளிரவு 12.52 மணி வரை பிறகு மகம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதர் அனுமன் வாகனத்தில் வீதி உலா, வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை ஸ்ரீ மீனாட்சி கோவிலில் கால பைரவருக்கு அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். மாயவரம் ஸ்ரீ கவுரிமாயூரநாதர் காலை கயிலாய அன்னபட்சி வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, யானை, யாளி வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு திருவீதியுலா, தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், தென்காசி ஸ்ரீ உலகம்மை, பத்தமடை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவில்களில் பவனி வரும் காட்சி.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபய பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-சுகம்
மிதுனம்-வெற்றி
கடகம்-முயற்சி
சிம்மம்-திறமை
கன்னி-நிம்மதி
துலாம்- தீரம்
விருச்சிகம்-உறுதி
தனுசு- ஆதரவு
மகரம்-மாற்றம்
கும்பம்-சுபம்
மீனம்-செலவு
- குலதெய்வம் என்பது அந்தக் குடும்பத்துக்கே உரியது என்பதால், திருமணமான பெண் புதிய வீட்டில் கணவரின் குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
- உப்பும் புளியும் சேர்த்து தயாரிப்பதனால் ஊறுகாயைக் கூட எடுத்து செல்லக் கூடாதாம்.
திருமணமான பெண்கள் பிறந்த வீட்டிற்கு சென்று வரும்போதெல்லாம் நிச்சயமாக ஏதாவது ஒன்றை எடுத்து செல்வார்கள். அது மளிகை பொருட்களாகவும் இருக்கலாம் அல்லது அவர்களது மனதிற்கு பிடித்த பொருளாகவும் இருக்கலாம் அல்லது அவர்கள் புழங்கிய பொருளாகவும் இருக்கலாம். என்ன காரணமாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட பொருட்களை மட்டும் பிறந்த வீட்டில் இருந்து கொண்டு செல்லக் கூடாதாம். அவை என்னென்ன என்று பார்க்கலாம் வாருங்கள்.
* உப்பு மற்றும் புளி : எந்த காரணம் கொண்டும் நிச்சயமாக கொண்டு செல்லக் கூடாதாம். அப்படி கொண்டு சென்றால் பிறந்த வீட்டில் உள்ள மகாலட்சுமி அங்கிருந்து வெளியேறி விடுவாள் என்பது நம்பிக்கை.
* உப்பும் புளியும் சேர்த்து தயாரிப்பதனால் ஊறுகாயைக் கூட எடுத்துச் செல்லக் கூடாதாம்.
* நல்லெண்ணெய்: பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையில் சிறு மனக்கசப்பு இருந்தாலும் அது பெரிதாகிவிடும்.
* கசப்பு தன்மையுள்ள காய்கறிகள், கீரைகள் : அகத்திக்கீரை, பாகற்காய் போன்றவற்றை பிறந்த வீட்டில் இருந்து எடுத்து செல்லக் கூடாது என்கின்றனர். இதனால் தேவையில்லாத மனக்கசப்புகள் உண்டாகும் என்பது சாஸ்திர நியதி.
* பூஜை பொருட்கள் : பிறந்த வீட்டின் குலதெய்வப் படங்கள் அல்லது சிலைகள், பூஜை பொருட்கள், விளக்கு முதலானவற்றை கொண்டு செல்லக் கூடாது. பயன்படுத்தாத பொருட்களாக இருந்தால் எடுத்துச் செல்லலாம். ஒரு வீட்டில் ஏற்றிய விளக்கை எப்போதும் மற்றொரு வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. அப்படி செய்தால் லட்சுமி கடாட்சம் மங்கிவிடும்.

* குலதெய்வம் என்பது அந்தக் குடும்பத்துக்கே உரியது என்பதால், அதற்கான வழிபாடு அங்கேயே தொடர வேண்டும். திருமணமான பெண் புதிய வீட்டில் கணவரின் குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
* இரும்பு மற்றும் கூர்மையான பொருட்கள்: கத்தி, அரிவாள் உள்ளிட்ட இரும்பு பொருட்களையும் எடுத்துச் செல்லக் கூடாது. அப்படி எடுத்துச் சென்றால் பிறந்த வீட்டாருக்கும் புகுந்த வீட்டாருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம்.
* துடைப்பம், முறம்: வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பம், மாப் மற்றும் அரிசி அளக்க பயன்படுத்தும் படி , புடைக்க முறம் போன்றவற்றை எடுத்துச் செல்லக் கூடாது. இதனால் இரு வீட்டாருக்கும் பிரச்சனை ஏற்படக்கூடும்.
* கோல மாவு : இப்போதெல்லாம் கோலம் போடுவதே குறைந்துவிட்டது எனினும் சிலர் அவ்வழக்கத்தை விடாமல் தொடர்ந்து வருகின்றனர். பிறந்த வீட்டில் இருந்து கோலமாவை இலவசமாக எடுத்து வருதல் என்பது கூடாது. வேண்டுமென்றால் இதற்கான தொகையை தாயிடம் கொடுத்துவிட்டு எடுத்து வரலாம்.
- உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட ‘கோரக்நாத் மந்திர்’ என்ற சமாதி கோவில் அமைந்துள்ளது.
- மற்ற சித்தர்களை போலவே, கோரக்கரும் மருத்துவம், தத்துவம் மற்றும் ரசவாதம் குறித்த பாடல்களை எழுதியுள்ளார்.
பதினெண் சித்தர்களுள் புகழ்பெற்ற சித்தராக விளங்குபவர் "கோரக்கர்". இவர் அகத்தியர் மற்றும் போகரிடம் சீடராக இருந்தவர். பதினெண் சித்தர்களில் 16-வது இடத்தில் உள்ள இவர், கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரம் 2-ம் பாதத்தில் பிறந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன.
'இறப்பில்லா மர்மயோகி'
இவர் தமது இளம் வயதை கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் கழித்தார். இது இவரது பிறப்பிடமாக கருதப்படுகிறது. இவர் இறப்பில்லா மர்மயோகி என்று சொல்லப்படுகிறது. மேலும், சிவபெருமானிடம் உபதேசம் பெற்று, நாதசைவத்தை தோற்றுவித்ததாகவும் கூறப்படுகிறது. இவர் 880 வருடம், 11 நாள் வாழ்ந்தார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் தென், வட மாநிலங்களிலும், சீன நாடு முதலிய கீழ் நாடுகளிலும் இவரின் வரலாறு அறியப்பட்டுள்ளது.
சித்தரின் ஜீவசமாதிகள்
இவரின் ஜீவசமாதி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்குபொய்கை நல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது. வடக்குபொய்கை நல்லூரில் சமாதி கூடிய காலம் கி.பி. 1233-ம் ஆண்டாகும். இவர் பட்டினத்தார் காலத்திற்கு பின்னும் வாழ்ந்திருந்தார் எனவும் கூறப்படுகிறது. மேலும், பொதிகை மலை, ஆனை மலை, கோரக் நாத்திடல் (மானாமதுரை), பரூரப்பட்டி (தென் ஆற்காடு), கோரக்கர் குண்டா (சதுரகிரி), பத்மாசுரன் மலை (கர்நாடகம்), கோரக்பூர் (உத்தரப்பிரதேசம்) ஆகிய இடங்களில் இவரது ஜீவசமாதிகள் உள்ளன.
கோரக்நாத் மந்திர்
இவற்றில் வடக்குபொய்கைநல்லூர் மற்றும் படூர்பட்டி ஜீவசமாதிகள் பற்றி கோரக்கரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். பொதிகை மலை, ஆனை மலை சமாதிகள் பற்றி அறிய முடியவில்லை. கோரக் நாத்திடல் மானாமதுரை அருகே வந்தமனூர் எனும் இடத்தில் உள்ளது. அங்குள்ள ஜீவசமாதிக்கு சித்ரா பவுர்ணமி அன்று பொங்கலிட்டு படையல் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதேபோல், உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட 'கோரக்நாத் மந்திர்' என்ற சமாதி கோவில் அமைந்துள்ளது.
வரங்கள் அருளும் 'கோரக்கர்'
இவருடன் தொடர்புடைய பிற மடங்களாக பேரூர், திருச்செந்தூர் மற்றும் இலங்கையில் உள்ள திரிகோணமலை உள்ளது. கோரக்கர் குகைகள் சதுரகிரி மற்றும் கொல்லி மலைகளில் காணப்படுகின்றன. மற்ற சித்தர்களை போலவே, கோரக்கரும் மருத்துவம், தத்துவம் மற்றும் ரசவாதம் குறித்த பாடல்களை எழுதியுள்ளார்.
ஐப்பசி பவுர்ணமி நாளில் ஜீவசமாதி அடைந்த இவரை வடக்குபொய்கை நல்லூரில் சென்று வழிபடுபவர்களுக்கு வரங்கள் பல அருள்வதாக இன்றும் பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.






