என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
    • சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டொனால்டு டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் அதிக வரிவிதிப்பை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

    இந்த மாத தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ஏப்ரல் 2-ம் தேதி பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப் போவதாகவும், அதுதான் அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும். தற்காலிகமான வரிகள், நாட்டை மாற்றி அமைக்கும் முக்கிய வரிவிதிப்புகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    மேலும், அமெரிக்க பொருட்கள் மீது எந்த அளவு வரி விதிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு பதிலுக்கு வரி விதிப்போம் எனவும் கூறி வந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, "அமெரிக்கா புதிதாக அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு முறை தவறானது. இது வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும்பொருளாதார போர் என்பது மேற்கு நாடுகளை பலவீனப்படுத்தி விடும்.

    அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு தகுந்த பதில் நடவடிக்கை கொடுப்போம். எதிர்த்து நிற்போம் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

    மேலும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து நாடுகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார்.
    • இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டொனால்டு டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் அதிக வரிவிதிப்பை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

    இந்த மாத தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ஏப்ரல் 2-ம் தேதி பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப் போவதாகவும், அதுதான் அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும். தற்காலிகமான வரிகள், நாட்டை மாற்றி அமைக்கும் முக்கிய வரிவிதிப்புகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    மேலும், அமெரிக்க பொருட்கள் மீது எந்த அளவு வரி விதிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு பதிலுக்கு வரி விதிப்போம் எனவும் கூறி வந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் இந்த வரி வதிப்பு அறிவிப்பால் சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் அபாயமும், பொருளாதார நிச்சயமற்ற சூழலும் ஏற்படும் அபாயமும் உள்ளது என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்தனர்.

    • ஹார்வர்ட், எம்ஐடி, ஸ்டான்போர்ட், யேல், கொலம்பியா மற்றும் பிரின்ஸ்டன் ஆகியவை ஏற்க மறுத்தன.
    • "அது முட்டாள்தனம்," என்று ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன் தெரிவித்தார்.

    30 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள, கலோரி கண்காணிப்பு செயலியை உருவாக்கிய CAL AI என்ற அமரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) உள்ளவர் சாக் யாதேகரி (Zach Yadegari) (18 வயது). பள்ளியில் படிக்கும்போதே இந்நிறுவனத்தை அவர் உருவாக்கினார்.

    சாப்பிடும் உணவை ஸ்கேன் செய்தால் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அந்த உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என்பதை செயலி காண்பிக்கும். 

    இளம் வயதில் உயரிய பொறுப்புடனும் மில்லியனர் ஆகவும் வளம் வருகிறார். மாதத்திற்கு 2 மில்லியன் டாலர் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தான் படிக்க விரும்பி விண்ணப்பத்தை பிரபல பல்கலைக்கழகங்கள் தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக சாக் யதேகரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஹார்வர்ட், எம்ஐடி, ஸ்டான்போர்ட், யேல், கொலம்பியா மற்றும் பிரின்ஸ்டன் உள்ளிட்ட பிரபல கல்வி நிறுவனங்கள் தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக சாக் யதேகரி தெரிவித்துள்ளார்.

    இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இளம் வயதிலேயே இத்தனை திறமையாக உருவெடுத்த இவரை அப்பல்கலைக்கழகங்கள் எப்படி நிராகரிந்தன என்பது குறித்து பலரும் தங்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். "அது முட்டாள்தனம்," என்று ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன், சாக்கின் எக்ஸ் பதிவிற்கு பதிலளித்தார். 

    • அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
    • அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகள் விதிக்கப் படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக மற்ற நாடுகள் மீது வரி விதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்.

    அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகள் விதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய டிரம்ப், அதே அளவுக்கு அந்தந்த நாடுகள் மீது ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

    இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100 சத வீதம் வரை வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக டிரம்ப் இன்று அறிவிப்பை வெளியிடுகிறார்.

    இந்த நிலையில் பரஸ்பர வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது:-

    அதிபர் டிரம்ப் வர்த்தக குழுவுடன் ஆலோசனை நடத்தினார். வரி விதிப்பு தொடர்பாக அவர் ரோஸ் கார்டனில் நடைபெறும் விடுதலை தின நிகழ்ச்சியில் அறிவிப்பை வெளியிட்டதும் வரிவிதிப்புகள் உடனடியாக அமலுக்கு வரும்.

    அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரியினை விதிக்கிறது. பால் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 50 சதவீதம், ஜப்பான் 700 சதவீதம் வரிகளை விதிக்கிறது. வெண்ணெய் மற்றும் சீஸ் மீது கனடா சுமார் 300 சதவீதம் வரியை விதிக்கிறது.

    இதுபோன்ற நாடுகளால், அமெரிக்கா நீண்ட காலமாக கடும் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளது. அதிபர் டிரம்ப் எடுத்த துணிச்சலான முடிவுகள் அமெரிக்காவுக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.

    நமது ஏற்றுமதிக்கு அந்த நாடுகள் விதிக்கும் அளவுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தும் நேரம் வந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்கா விதிக்க உள்ள பரஸ்பர வரிகளால் இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

    • கடந்த 10 நாட்களாகச் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்தனர்.
    • ஆக்ஸியம் திட்டத்தில் இந்தியரான சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்ல இருப்பது மிகவும் அருமையான விஷயம்.

    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

    8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.

    கடந்த மார்ச் 18 ஆம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். கடந்த 10 நாட்களாகச் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்தனர்.

    இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்த அனுபவம் பற்றி சுனிதா வில்லயம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளனர்.

    அதில் விண்வெளியில் இருந்து இந்தியா பார்ப்பதற்கு எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த சுனிதா, "விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு மேல் நாங்கள் வரும்போது, புட்ச் வில்மோர் அருமையான புகைப்படங்களை எடுத்தார்.

     

    கிழக்கிலிருந்து மும்பை, குஜராத்தின் மேற்பரப்பில் செல்லும்போது அழகிய கடற்கரையைக் கண்டோம். இரவு நேரங்களில் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இந்தியா ஒளிந்தபடி இருக்கும்" என்று தெரிவித்தார்.

    மேலும் இந்தியாவுக்கு அடுத்து பயணம் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எனது தந்தையின் சொந்த நாட்டுக்குத் சென்று மக்களை சந்தித்து உற்சாகமடைவேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

    மேலும் ஆக்ஸியம் திட்டத்தில் இந்தியரான சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்ல இருப்பது மிகவும் அருமையான விஷயம். அவர் ஹீரோவாக திகழ்வார்.

    அவருக்கும் உங்களுக்கு அங்கிருந்து இந்தியா எப்படி உள்ளது என்பதை கூறுவார். இந்தியர்களுடன் எனது அனுபவங்களை பகிர ஆர்வமுடன் இருக்கிறேன். நிச்சயம் ஒரு நாள் அது நடக்கும். விண்வெளியில் கால்பதிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு நான் உதவுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படக்கூடிய 87 சதவீத பொருட்கள் பாதிக்கப்படும்.
    • அமெரிக்க இறக்குமதிக்கு வரியை குறைத்தால் அதனால் இந்தியாவுக்கு 23 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும்.

    இந்தியா அமெரிக்க இறக்குமதிக்கு அதிகமாக வரி விதிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் நாளை (ஏப்ரல் 2ஆம் தேதி) முதல் இந்தியா மற்றும் இதர நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு போட்டி வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

    சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளோடு ஏற்கனவே டொனால்டு டிரம்ப் வர்த்தகப் போரை தொடங்கியுள்ள நிலையில் தற்போது இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.

    இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படக்கூடிய 87 சதவீத பொருட்கள் டிரம்ப் நிர்வாகத்தின் போட்டி வரி நடவடிக்கையால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு 66 பில்லியன் டாலர்கள்.

    இந்நிலையில் இந்த போட்டி வரியை தவிர்ப்பட்டதற்காக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் வரியை இந்தியா குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

     

    அந்த தகவலை கொடுத்தவர் டொனால்டு டிரம்ப். வெள்ளை மாளிகை ஓவல் அலுவலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்தியா அதன் வரிகளை கணிசமாகக் குறைக்கப் போகிறது என்று கேள்விப்பட்டேன். பல நாடுகள் தங்கள் வரிகளை கைவிடப் போகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க இறக்குமதிக்கு வரியை குறைத்தால் அதனால் இந்தியாவுக்கு 23 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  

    • அதில் ஒரு மகள் திருநங்கையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
    • ஆஷ்லே தனது டெஸ்லா காரை விற்பதாகக் அறிவித்திருக்கிறார்.

    உலக பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் தற்போது அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DODGE) துறையின் தலைவராக உள்ளார். அதிபர் டிரம்ப் உடன் மிகவும் நெருக்கம் காட்டி வரும் எலான் மஸ்க் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வது வழக்கம்.

    எலான் மஸ்க்குக்கு வெவ்வேறு பெண்கள் மூலம் இதுவரை 14 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு மகள் திருநங்கையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். எனவே தனது மகள் இறந்துவிட்டதாக எலான் மஸ்க் கூறி வருகிறார். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதை எலான் மஸ்க் தவிர்த்து வருகிறார்.

    இதற்கிடையே ஆஸ்லே செயின்ட் கிளார் என்ற எழுத்தாளர் எலான் மஸ்க்கின் குழந்தையை தான் பெற்றெடுத்ததாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் ஆஷ்லேயின் ஆண் குழந்தை என்னுடையதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் அவளுக்கு ₹21 கோடி கொடுத்தேன் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

     

    இதுதொடர்பான பதிவில், "தெரியாமலேயே... நான் ஆஷ்லேக்கு $2.5 மில்லியன் (கிட்டத்தட்ட ரூ.21.4 கோடி) கொடுத்துள்ளேன், மேலும் அவளுக்கு வருடத்திற்கு $500k (ரூ.4.3 கோடி) அனுப்புகிறேன்" என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.

    அரசு துறைகளில் எலான் மஸ்க்கின் ஆதிக்கத்தை கண்டித்து அவரின் டெஸ்லா நிறுவன கார்களை அமெரிக்கர்கள் புறக்கணிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

    இதற்கிடையே ஆஷ்லே தனது டெஸ்லா காரை விற்பதாகக் அறிவித்திருக்கிறார். இதனால் மனம் நொந்துபோன எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று தெரிகிறது.

    • இந்தியா-அமெரிக்கா இடையே 2007 இல் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை.
    • 20 ஆண்டுகளுக்கு பிறகு அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

    இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த 2007ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷும் இணைந்து இந்த ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

    ஆனால் இந்த ஒப்பந்தம் அதன்பின்பு நடைமுறைக்குவரவில்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமேரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

    இந்தியாவில் அணு உலைகள் அமைக்க ஹோல்டெக் என்ற அமெரிக்கா நிறுவனத்திற்கு டிரம்ப் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இருப்பினும், இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து உருவாக்கப்படும் அணு மின் நிலையங்கள், அமெரிக்க அரசின் அனுமதி இல்லாமல் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாடுகளுக்கோ அல்லது அமெரிக்க நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனத்துக்கோ மாற்றப்படக்கூடாது என்று அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் நிபந்தனை விதித்துள்ளது. 

    • இந்த மோதலின் காரணமாக, விமானமும் வீடும் தீப்பிடித்து எரிந்தன.
    • விபத்துக்குள்ளான விமானம் ஒற்றை எஞ்சின் கொண்ட சொகாட்டா TBM7 ரக விமானம் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவில் ஒரு சிறிய ரக பயணிகள் விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

    நேற்று (சனிக்கிழமை) அயோவாவிலிருந்து மினசோட்டாவுக்குப் பறந்து கொண்டிருந்த விமானம், மின்னியாபோலிஸில் ப்ரூக்லின் பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது மோதியது. இந்த மோதலின் காரணமாக, விமானமும் வீடும் தீப்பிடித்து எரிந்தன.

    விபத்து தொடர்பாக புரூக்ளின் பூங்காவின் செய்தித் தொடர்பாளர் ரிசிகாட் அடெசோகன் கூறுகையில், வீட்டில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை, ஆனால் வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

    விபத்துக்குள்ளான விமானம் ஒற்றை எஞ்சின் கொண்ட சொகாட்டா TBM7 ரக விமானம் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இந்த சம்பவத்தில் குறைந்தது ஒரு நபராவது உயிரிழந்திருப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விமானத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையே விமானம் விபத்துக்குள்ளான பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது. 

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சபலென்கா 7-5, 6-2 என்ற நேர் செட்டில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    சபலென்கா மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் பெறுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் நம்பர் 1 ஜோடி வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் நம்பர் 1 ஜோடியான மார்செலோ ஆரேவலோ-மேட் பாவிக் ஜோடி, பிரிட்டனின் லாயிட் கிளாஸ்பூல்-ஜூலியன் கிளாஷ் ஜோடி உடன் மோதியது.

    இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய நம்பர் 1 ஜோடி 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    சமீபத்தில் நடந்த இந்தியன் வெல்ஸ் தொடரிலும் இந்த ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • கேளிக்கை நிகழ்ச்சியின்போது ஒரு சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
    • இந்தத் துப்பாக்கிச் சூடு சம்ப்வத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் அமைந்துள்ள சியாட்டில் நகரின் டகோமா பகுதியில் உள்ள வீட்டில் இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இரவு 12 மணியளவில் (உள்நாட்டு நேரப்படி) கேளிக்கை நிகழ்ச்சி நடந்தபோது திடீரென அங்கிருந்தவர்கள் மீது ஒரு சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவனை கைதுசெய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    ×