என் மலர்
அமெரிக்கா
- வருகிற 21-ந்தேதி இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல்.
- துணை அதிபரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இம்மாதம் இந்தியாவுக்கு வர உள்ளார். தனது மனைவி உஷா வான்ஸ், மகன்களுடன் இந்திய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். உஷா சிலுகுரி வான்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் வருகிற 21-ந்தேதி இந்தியாவுக்கு வர உள்ளதாகவும், அவர் 4 நாட்கள் பயணம் மேற்கொள்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்சுடன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
ஆனால் வான்சின் பயண திட்டம் பெரும்பாலும் தனிப்பட்டதாக இருக்கும் என்றனர். ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் ஜெய்ப்பூர், ஆக்ரா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளார். மேலும் அவருக்கு டெல்லியில் பிரதமர் மோடி விருந்து அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்தியாவுக்கு வரும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
சமீபத்தில் இந்தியா மீது கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி விவகாரம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- அதிபர் டிரம்ப் கடந்த 2-ம் தேதி பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார்.
- இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்படுகிறது என தெரிவித்தார் டிரம்ப்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 2-ம் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரிகளை விதிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
இந்நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கோடீஸ்வரர் எலான் மஸ்க் இருவருக்கும் எதிராக அமெரிக்கா முழுவதும் பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹான்ட்ஸ் ஆப் என்ற எதிர்ப்பு பேரணி அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பேரணியில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களும், உள்ளூர் ஆதரவாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப் பெரிய பேராட்டங்களில் இதுவும் ஒன்று. இது அமெரிக்கர்களிடையே அதிகரித்து வரும் விரக்தியைக் குறிக்கிறது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதன் அரையிறுதியில் அமெரிக்காவின் அனிசிமோவா காயத்தால் விலகினார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சக நாட்டு வீராங்கனை அமண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
இதில் சோபியா கெனின் 5-2 என முதல் செட்டில் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது அனிசிமோவா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.
இதையடுத்து சோபியா கெனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சோபியா கெனின், ஜெசிகா பெகுலாவை சந்திக்கிறார்.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதன் அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் ஜெசிகா 6-2 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டை அலெக்சாண்ட்ரோவா 6-2 என கைப்பற்றினார்.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 7-5 என ஜெசிகா பெகுலா வென்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தினார்.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதியில் பிரிட்டனின் எம்மா நவரோ தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பிரிட்டனின் எம்மா நவரோ, சக நாட்டு வீராங்கனையான அமண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக அனிசிமோவா 7-5, 7-6, (7-1) என்ற செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
- பாலஸ்தீனிய ஆதரவு கொண்ட மைக்ரோசாப்ட் ஊழியர்கள் கூச்சலிட்டு போராட்டம் நடத்தினர்.
இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி வருவதற்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அப்போது பாலஸ்தீனிய ஆதரவு கொண்ட ஊழியர்கள் கூச்சலிட்டு போராட்டம் நடத்தினர்.
மைக்ரோசாப்ட் AI இன் தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா சுலேமான் பேசிக்கொண்டிருக்கும் ஒரு ஊழியர் "முஸ்தபா, உங்களுக்கு வெட்கமாக இல்லையா" என்று கூச்சலிட்டார்.
அப்போது மற்றொரு ஊழியர் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா அவர்களே, "உங்களுக்கு வெட்கமாக இல்லையா.. நீங்கள் அனைவரும் நயவஞ்சகர்கள்" என்று கூச்சலிட்டார்.
காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியபோது இலக்குகளை குறிவைத்து தாக்க மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன்ஏஐ ஆகியவற்றின் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இஸ்ரேல் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதியில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன்
மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சோபியா கெனின் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அன்னா கலின்ஸ்கயாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான டேனியல் காலின்சுடன் மோதினார்.
இதில் காலின்ஸ் 6-1 என முதல் செட்டை வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஜெசிகா பெகுலா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 6-0 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் டிக்டாக் செயலியை நிர்வகித்து வருகிறது
- அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தினர்.
வாஷிங்டன்:
டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.
சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் இச்செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிக்கு ஜோ பைடன் அரசு தடை விதித்தது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை என கூறியது.
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 19 முதல் அமலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட கெடுவை மேலும் 75 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
- இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்
- பில்லியனர்களின் சொத்து மதிப்பை கண்காணிக்கும் ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது..
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.
இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார்.
இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

இந்நிலையில் டிரம்ப்பின் வரிவிதிப்பால் பில்லியனர்கள் பலரின் சொத்துமதிப்பு ஒரே நாளில் வெகுவாக சரிந்துள்ளது.
பில்லியனர்களின் சொத்து மதிப்பை கண்காணிக்கும் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒட்டுமொத்த பில்லினர்களின் செல்வத்தில் நேற்று ஒரே நாளில் 208 பில்லியன் டாலர் சரிவு ஏற்பட்டுள்ளது.
ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, இது 13 ஆண்டுகளில் நான்காவது பெரிய ஒரு நாள் சரிவாகும். மேலும் COVID-19 தொற்று காலகட்டத்துக்கு பிறகு இது மிகப்பெரிய சரிவு என்று கூறப்படுகிறது.
பில்லியனர்களில் குறிப்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 17.9 பில்லியன் டாலர்களையும், ஜெஃப் பெசோஸ் 15.9 பில்லியன் டாலர்களையும், எலான் மஸ்க் 11 பில்லியன் டாலர்களையும் இழந்துள்ளனர்.
- டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
- அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதிக்க தயாராகி வருகின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்தார்.
அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதாக கூறி இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். இதில் இந்தியா மீது 27 சதவீத வரியை விதித்து உள்ளார்.
டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதிக்க தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்புக்கு பிறகு அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல் அடியோடு மாறி வருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டனா்.
இதனால் அந்த நாட்டுப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியடைந்தது. பங்குச் சந்தையின் அனைத்து குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் பல லட்சம் கோடியை இழந்தன.
அமெரிக்காவுக்கு சீனாவும், ஐரோப்பிய ஒன்றியமும் பதிலடி கொடுக்க உள்ளதாக கூறியதையடுத்து 2020-ம் ஆண்டுக்குப் பிறகு (கொரோனா காலம்) அமெரிக்க பங்குச் சந்தைகளில் மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் உலக பங்குச்சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிந்தன.
இந்த நிலையில் டிரம்ப் நிருபர்களிடம் அளித்த பேட்டியின் போது பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்தபோது, விரைவில் சந்தைகள் ஏற்றம் பெறப்போகின்றன. பங்குகள் ஏற்றம் பெறப்போகின்றன. நாடு ஏற்றம் பெறப்போகிறது.
இந்த வரி விதிப்பு அறிவிப்பு உலகளவில் சந்தைகளை உலுக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வது போன்ற ஒரு அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருக்கிறோம். அது மிகவும் நன்றாக நடக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
வரிகளைத் தவிர்க்க அமெரிக்காவில் தங்கள் தயாரிப்புகளை தயாரிக்க விரும்பும் நிறுவனங்களிடமிருந்து டிரில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு நமது நாட்டிற்கு வரும். ஒரு ஒப்பந்தத்தை முடிக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று பல நாடுகள் பார்க்க விரும்புகின்றன.
யாராவது அற்புதமான சலுகையை கொடுக்கத் தயாராக இருந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். அமெரிக்காவை மற்ற நாடுகள் நீண்ட கால மாக பயன்படுத்தி வருகின்றன. அதை நிறுத்த விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
- நேற்றை விட 805 புள்ளிகள் சரிந்துள்ளன.
புதுடெல்லி:
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மற்ற நாடுகளை சேர்ந்த பொருட்களுக்கு பரஸ்பரம் வரிவி திப்பை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தி யாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்ப டும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக இந்தியாவில் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு காரணமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் ரூ.11 லட்சம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் நடை பெற்று உள்ளது. இந்தியாவில் உள்ள விவசாய பொருட்கள் மற்றும் அரிசி, இறால், தேன், காய்கறி ஜூஸ், ஆமணக்கு எண்ணை, மிளகு உள்ளிட்ட பல பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. விவசாய பொருட்கள் மட்டும் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரத்தின கற்கள், நகைகள், வாகனங்கள், உணவு பொருட்கள் ஆகியவை ரூ.7.5 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
தற்போது அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டு உள்ளதால் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
பாதாம், வால்நட், பிஸ்தா, ஆப்பிள், பருப்பு வகைகள் ஆகியவை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த பொருட்களுக்கு இந்தியாவில் 52 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வரியை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை மறைமுகமாக டிரம்ப் ஏற்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இந்திய பொருட்க ளுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு இருப்பது இந்தியாவில் பங்கு வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பங்கு சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
நேற்றை விட 805 புள்ளிகள் சரிந்துள்ளன. இன்று சென்செக்ஸ் 75,653 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை நிப்டியும் சரிவோடு தொடங்கியது.
வங்கிகள், ரியல் எஸ்டேட், தகவல் தொழில் நுட்பம், நுகர்வோர் பொருட் கள், நிதி சேவைகள் சார்ந்த பங்குகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. இந்தி யாவில் இருந்து எந்தெந்த பொருட்கள் அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி செய்யப்படு கிறதோ அந்தந்த பொருட் களை தயாரிக்கும் நிறுவ னங்கள் பங்கு சந்தையில் கடும் சரிவை சந்தித்து உள்ளன.






