என் மலர்tooltip icon

    உலகம்

    ஈரானின் அணுசக்தி வசதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டன, இனி வரும் தாக்குதல் மிகப் பெரியதாக இருக்கும் - டிரம்ப்
    X

    ஈரானின் அணுசக்தி வசதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டன, இனி வரும் தாக்குதல் மிகப் பெரியதாக இருக்கும் - டிரம்ப்

    • அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
    • பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் எங்கள் நோக்கமாகும்.

    ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

    அமெரிக்காவின் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்த தாக்குதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம். அமெரிக்க தாக்குதல்களில் ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் முற்றிலும் முழுமையாகவும் அழிக்கப்பட்டன.

    ஈரானை தாக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஒரு குழுவாக செயல்பாட்டோம். ஈரானின் அணு சக்தி செறிவூட்டல் திறனை நிறுத்தவும், அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்தவும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    ஈரான் இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும். எங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    ஈரானுக்கு அமைதி அல்லது சோகம் ஆகிய வற்றில் ஒன்றில் ஒரு தேர்வு மட்டுமே உள்ளது. மத்திய கிழக்கு பகுதியை கொடுமைப்படுத்தும் நபராக ஈரான் உள்ளது. அந்த நாடு அமைதியை ஏற்படுத்தவில்லை என்றால் கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்படும்.

    கடந்த 8 நாட்களில் நாம் கண்டதை விட மிகப்பெரிய அமைதி ஏற்படும் அல்லது ஈரானுக்கு மிகப்பெரிய சோகம் ஏற்படும். இன்னும் பல இலக்குகள் குறி வைக்கப்பட்டு உள்ளன. அமைதி விரைவாக வரவில்லை என்றால் மற்ற இலக்குகளை துல்லியம், வேகம் மற்றும் திறமையுடன் நாங்கள் தாக்குவோம்" என்று கூறினார்.

    Next Story
    ×