ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதாக எந்த ஆதாரமும் இல்லை.. அமெரிக்க உளவுத்துறை அறிக்கையை நிராகரித்த டிரம்ப்

உளவுத்துறையின் கண்டுபிடிப்புகள் எனது கூற்றுகளுக்கு முரணாக உள்ளன. ஆனால் எனக்கு கவலையில்லை கப்பார்ட் முன்வைத்த மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதாக எந்த ஆதாரமும் இல்லை.. அமெரிக்க உளவுத்துறை அறிக்கையை நிராகரித்த டிரம்ப்
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது உளவுத்துறை சரியாக வேலை செய்யவில்லை என்றும், அதன் இயக்குனர் வழங்கிய தகவல்கள் தவறானவை என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்ற அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி காப்பார்டின் நிலைப்பாட்டை அவர் நிராகரித்தார்.

ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது, தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் அளித்த தகவல் தவறானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

முன்னதாக, ஈரான் தனது கைவிடப்பட்ட அணு ஆயுதத் திட்டத்தை மீண்டும் தொடங்வில்லை என்று அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்தத் தகவல் தவறானது என்று டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

"தகவல் தவறாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் இறுதி கட்டத்தில் இருப்பதாக நான் சொன்னேன். ஆனால் உளவுத்துறையின் கண்டுபிடிப்புகள் எனது கூற்றுகளுக்கு முரணாக உள்ளன. ஆனால் எனக்கு கவலையில்லை" என்று டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால் கப்பார்ட் முன்வைத்த மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com