என் மலர்
அமெரிக்கா
- வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது.
- தி சாத்தானிக் வெர்சஸ் நாவலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நியூயார்க்:
இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கடந்த 2022, ஆகஸ்ட் 12-ம் தேதி நியூயார்க்கில் உள்ள சௌடவுகுவா கல்வி நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது மேடையில் ஏறிய ஹாடி மாத்தர் சல்மான் ருஷ்டியை 12 முறை சரமாரியாகக் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ருஷ்டி ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 6 வார சிகிச்சைக்கு பின் படிப்படியாக குணமானார்.
இந்தத் தாக்குதலில் ருஷ்டியின் தலை, கழுத்து, இடது உள்ளங்கை, கல்லீரல், குடல் உள்பட உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது. ஹாடி மாதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1988-ம் ஆண்டு சல்மான் ருஷ்டி வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' நாவலுக்கு இஸ்லாமிய மதவாதிகளிடையே கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. அவர் பல கொலை மிரட்டல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் அரங்கேறியது என கூறப்படுகிறது.
இந்நிலையில், குற்றவாளிக்கு 25 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- ஆடம்பரமான போயிங் 747-8 ஜம்போ ஜெட் விமானத்தை அவர் பரிசாக பெற உள்ளார்.
- அப்படிப்பட்ட சலுகையை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன்.
மத்திய கிழக்குக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணம் மேற்கொண்டுள்ள உள்ள நிலையில் கத்தார் அரச குடும்பத்தினரிடமிருந்து ஆடம்பரமான போயிங் 747-8 ஜம்போ ஜெட் விமானத்தை அவர் பரிசாக பெற உள்ளார்.
இந்த விமானம் பாதுகாப்பு அச்சுறுதல்களைக் கொண்டிருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்த நிலையில் டிரம்ப் அதை நிராகரித்துள்ளார்.
இந்தப் பரிசை ஏற்றுக்கொள்வதை அவர் நியாயப்படுத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அப்படிப்பட்ட சலுகையை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். இலவசமாக இருக்கும்போது வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாளா?" அவர் தெரிவித்தார்.
பதவிக்காலம் முடிந்ததும் அவர் இந்த விமானத்தை தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்காலத்தில் இந்த விமானம் அதிபர் நூலக அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று கூறினார்.
- கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது
- அந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக டிரம்ப் சிலை வைத்துள்ளார்
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப், அந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக சிலை வைத்துள்ளார்
இந்த புகைப்படத்தை வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
- டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
- காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய தயார் என்று டிரம்ப் அறிவிப்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக நேற்று அறிவித்தது. நாளை சண்டை நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைப் பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க வீரதீரமான முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவியது குறித்து நான் பெருமைப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இருவரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழ்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தியா, பாகிஸ்தான் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது
- பிரதமர் மோடி மற்றும் ஷெரீப்பின் ஞானம், விவேகம், அரசியல் திறமைக்கு பாராட்டு
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
இதனையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது பதிவில், "நடுநிலையான இடத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை தொடங்குவதாகவும் அறிவிப்பதில் மகிழ்ச்சி. அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பிரதமர் மோடி மற்றும் ஷெரீப்பின் ஞானம், விவேகம், அரசியல் திறமைக்கு பாராட்டு" என்று பதிவிட்டுள்ளார்.
- இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
- இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இரவு முழுவதும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இரவு முழுவதும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக இரு நாடுகளும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
----------------------------------------------
- இரு நாடுகளின் தலைவர்களுடனும் அதிபர் டிரம்புக்கு நல்ல உறவு உள்ளது.
- இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை தணிக்க விரும்புகிறார்.
வாஷிங்டன்:
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்நிலையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதிபர் டொனால்டு டிரம்ப் முடிந்தவரை விரைவில் பதற்றத்தைக் குறைக்க விரும்புகிறார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்.
அவர் இரு நாடுகளின் தலைவர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிக்கிறார் என தெரிவித்தார்.
- பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
- இதுதொடர்பாக நடந்த வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்தது.
வாஷிங்டன்:
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப். அமைப்பிடம் இருந்து பாகிஸ்தான் கடன் பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு 1. 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஐ.எம்.எப். திட்டமிட்டிருந்தது. இந்தக் கடனை வழங்குவுது குறித்து ஐ.எம்.எப். அமைப்பு ஆய்வு செய்ய இருந்தது..
ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நன்கு யோசித்து முடிவு எடுக்கவேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நடந்த ஐ.எம்.எப். அமைப்பில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. சர்வதேச நிதியத்திடம் இருந்து பெறும் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு செலவு செய்கிறது என தெரிவித்தது.
- ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
- இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் பாகிஸ்தான் நிலைகுலைந்து காணப்பட்டது.
வாஷிங்டன்:
பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் நிலைகுலைந்து காணப்படும் பாகிஸ்தான், காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் எஸ்-400 வான் பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தின.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்சனையில் நாங்கள் தற்போது தலையிடப் போவதில்லை.
பதற்றத்தைத் தணிப்பதற்கு முயற்சி செய்வோம்.
இரு நாடுகளையும் ஆயுதங்களைக் கைவிடும்படி நாங்கள் கூறமுடியாது.
இது மிகப் பெரிய போராகவோ, அணு ஆயுத பிரச்சனையாகவோ மாறாது என நம்புகிறோம் என தெரிவித்தார்.
- ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் இந்திய பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்.
- இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் உள்ளிட்டவை சிறப்பாக தடுத்து அழித்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா கடந்த 7ம் தேதி நள்ளிரவில் சுமார் 25 நிமிடத்திற்குள் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத இலக்குகளை தாக்கி அழித்தது.
இதனால், பாகிஸ்தான ராணுவம் இந்திய எல்லையில் தன்னிச்சையாக அத்துமீறி குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே நேற்றிரவு ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் இந்திய பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக அவந்திபூரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட்டு, அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, அதாம்பூர், பதிண்டா, சண்டிகார், நநல், பலோடி, உட்டார்லை, பூஜ் ஆகிய இடங்கில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் சரமாரி தாக்குதல் நடத்தியது.
இந்திய விமானப்படை எஸ்-400 சுதர்ஷன் சக்ரா வான் பாதுகாப்பு ஏவுகணை சிஸ்டம் மூலம் அவைகள் தாக்கி அழிக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் உள்ளிட்டவை சிறப்பாக தடுத்து அழித்தது. மேலும், லாகூரில் இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், லாகூர் நகரை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லாகூரை விட்டு வெளியேற முடியவில்லை என்றால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
- நாங்கள் இரு நாடுகளுடனும் நன்றாகப் பழகுகிறோம்.
- அவர்கள் நிறுத்துவதை பார்க்க விரும்புகிறேன் என்றார்.
வாஷிங்டன்:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஓ, இது மிகவும் மோசமானது. என் நிலைப்பாடு என்னவென்றால் நான் இருவருடனும் ஒத்துப்போகிறேன்.
எனக்கு இருவரையும் நன்றாகத் தெரியும். அவர்கள் அதைச் சரிசெய்வதை பார்க்க விரும்புகிறேன். அவர்கள் நிறுத்துவதை பார்க்க விரும்புகிறேன்.
இப்போது அவர்கள் நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் மிகவும் மோசமாகிவிட்டார்கள், எனவே இப்போது அவர்கள் நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் இரு நாடுகளுடனும் நன்றாகப் பழகுகிறோம்.
இருவருடனும் நல்ல உறவுகள் உள்ளன. அது நின்றுவிடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஏதாவது உதவி செய்ய முடிந்தால், நான் அங்கே இருப்பேன் என தெரிவித்தார்.
- பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
வாஷிங்டன்:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:
நாங்கள் ஓவல் மைதானத்தின் வாசலில் நடந்து கொண்டிருந்தபோது அதைப் பற்றிக் கேள்விப்பட்டோம்.
கடந்த காலத்தின் ஒரு சிறிய பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஏதோ நடக்கப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.
அவர்கள் பல தசாப்தங்களாகப் போராடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பற்றி யோசிக்கும்போது பல நூற்றாண்டுகளாக. இல்லை, அது மிக விரைவாக முடிவடையும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.






