என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • கஜகஸ்தானின் எலினா ரிபாகினா அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, கனடாவின் லைலா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லைலா 6-7 (2-7), 7-6 (7-3), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இதனால் ரிபாகினா தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஏர்லைன்ஸ் விமானம் AA-3023, புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது.
    • 173 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    அமெரிக்காவில் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 07:49 மணிக்கு மியாமிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் AA-3023, புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது.

    அப்போது தரையிறங்கும் கியர் பழுதடைந்ததால் டயர் தீப்பிடித்தது. இதனால் ஓடுபாதையில் அடர்த்தியான புகை கிளம்பியது.

    எச்சரிக்கையான விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். விமானத்தில் இருந்த 173 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    இந்தச் சம்பவத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

    • காலநிலை மாற்றம் என்பது உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று.
    • இதனால் வெப்ப அலை என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    வாஷிங்டன்:

    காலநிலை மாற்றம் என்பது உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று. இதனால் பனிப்பாறை உருகி கடல் மட்டம் உயர்தல், வெப்ப அலை என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே காலநிலை மாற்றத்தை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுக்க உலக நாடுகளை ஐ.நா.சபை வலியுறுத்துகிறது.

    இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ், மைனே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, வட கரோலினாவில் 113 டிகிரி, வாஷிங்டன் டி.சி.யில் 109 டிகிரி என வெயில் கொளுத்துகிறது. இதனை தாக்குப் பிடிக்க முடியாமல் அங்குள்ள மக்கள் திணறுகின்றனர். இதனால் சுமார் 10 கோடி பேரை கடுமையான வெப்ப அலை தாக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வரும் 29-ம் தேதி வரை இந்த வெயில் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • கஜகஸ்தானின் எலினா ரிபாகினா காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, போலந்தின் மக்டலேனா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • ரஷியாவின் மெத்வதேவ் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் கொரன்டின் மவுடெட் உடன் மோதினார்.

    இதில் 6-1 என முதல் செட்டை மெத்வதேவ் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பிரான்ஸ் வீரர் அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் மெத்வதேவ் இந்தத் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, பிரிட்டனின் நீல் கப்ஸ்கி-ஆஸ்திரேலியாவின் ஜான் பாட்ரிக் ஸ்மித் ஜோடி உடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 6-3 என வென்றது. ஆனால் அடுத்த இரு செட்களை 4-6, 7-10 என்ற செட் கணக்கில் இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்,

    போலந்தின் மக்டலேனா பிரெச் உடன் மோதினார்.

    இதில் ஏழு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் 2-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சுதந்திரத்தைப் பயன்படுத்தும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்ற நாடுகளில் முதலீடு செய்கின்றன
    • சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு புதிய தேசபக்தி தேவை.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொழில்நுட்ப வேலைகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இந்தியர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

    வாஷிங்டனில் நடந்த AI மாநாட்டில் பேசிய அவர், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    "நாம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும். அமெரிக்கர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அமெரிக்கர்கள் தாங்கள் கவனிக்கப்படவில்லை என்று உணர்கிறார்கள்.

    நாட்டில் கிடைக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்ற நாடுகளில் முதலீடு செய்கின்றன. எனது நிர்வாகத்தின் போது இந்தக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன்" என்று தெரிவித்தார்.

    பெரிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன. இந்தியர்களை வேலைகளில் அமர்த்துகின்றன என்றும் அவர் விமர்சித்தார்.

    மேலும், "இங்குள்ள மக்களின் வாய்ப்புகளைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை. நீங்கள்  அமெரிக்கர்களை புறக்கணிக்கிறீர்கள்.  AI பந்தயத்தில் வெற்றி பெற, சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு புதிய தேசபக்தி தேவை. இங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் நாட்டை முதன்மைப்படுத்த வேண்டும்" என்று அவர் அழைப்பு விடுத்தார்.  

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • யூகி பாம்ப்ரி ஜோடி 2வது சுற்றில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, நெதர்லாந்தின் செம் வெர்பீக்-ஸ்வீடனின் கோரன்சன் ஜோடி உடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 7-6 (7-1) என இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட யூகி பாம்ப்ரி ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 10-6 என கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • 90ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஹல்க் ஹோகன்.
    • WWE போட்டியை பிரபலமாக்கியதில் இவருக்கு முக்கிய இடம் உண்டு.

    புளோரிடா:

    பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (71), அமெரிக்காவில் காலமானார். இவர் 90ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

    புகழ்பெற்ற அமெரிக்க மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன். WWE போட்டியை பிரபலமாக்கியதில் இவருக்கு முக்கிய இடம் உண்டு.

    ஹல்க் ஹோகனின் வீரதீர ஆளுமை, தேசபக்தி விளம்பரங்கள் மற்றும் உடல்கட்டு ஆகியவற்றால் அவரது புகழ் உயர்ந்தது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • இத்தாலி வீரர் முசெட்டி முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.

    இதில் முசெட்டி முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட கேமரூன் நூரி அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலியின் முசெட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீத வரிகள் விதிக்கப்படும்.
    • ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும்.

    அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் சில நாடுகளுடன் உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜப்பானுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீத வரிகள் விதிக்கப்படும்.

    இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா 90 சதவீத லாபத்தைப் பெறும்.

    ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும். இந்த ஒப்பந்தம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதுபோன்ற எதுவும் இதற்கு முன்பு இருந்ததில்லை.

    ஜப்பான் அமெரிக்காவிற்கு 15 சதவீத பரஸ்பர வரிகளை செலுத்தும். இது அமெரிக்காவிற்கு மிகவும் உற்சாகமான நேரம். ஜப்பானுடன் நாம் எப்போதும் சிறந்த உறவைக் கொண்டிருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல் பிலிப்பைன்ஸ் நாடுடனும் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ×