சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து கீதா கோபிநாத் விலகல்

கீதா கோபிநாத் கடந்த 2019-ல் சர்வதேச நாணய நிதியத்தில் தலைமை பொருளாதார நிபுணராக சேர்ந்தார்.ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதார பேராசிரியராக மீண்டும் பணியில் சேர உள்ளேன் என்றார்.
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து கீதா கோபிநாத் விலகல்
Published on

வாஷிங்டன்:

சர்வதேச நாணய நிதியத்தில் துணை நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தில் தலைமைப் பொருளாதார நிபுணராக சேர்ந்தார்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பதவியில் இருந்து விலகுவதாக கீதா கோபிநாத் அறிவித்துள்ளார். மேலும், அவர் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதார பேராசிரியராக மீண்டும் பணியில் சேர உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கீதா கோபிநாத் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச நாணய நிதியத்தில் சுமார் 7 அற்புதமான ஆண்டுகளுக்கு பிறகு நான் எனது கல்வி வேர்களுக்கு திரும்ப முடிவு செய்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

கீதா கோபிநாத் இவ்வுலகின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அசாத்திய கல்வியறிவும், அறிவார்ந்த தலைமை பண்பும் கொண்டவர் என ஐ.எம்.எப். நிர்வாக இயக்குநர் கிறிஸ்ட்டின் லகார்டே பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com