என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • டெல்லியில் இரு நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்தன.
    • 190 பில்லியன் டாலர்களிலிருந்து 500 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பதே நோக்கமாகும்.

    இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சமீபத்தில் சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானதை நினைவு கூர்ந்து, அடுத்த பெரிய ஒப்பந்தம் இந்தியாவுடன் இருக்கலாம் என்று கூறினார்.

    "எல்லோரும் எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். நேற்று சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். நாங்கள் சில சிறந்த ஒப்பந்தங்களைச் செய்கிறோம்.

    விரைவில் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் வரப்போகிறது. அது மிகப் பெரியது. நாங்கள் இந்திய சந்தைகளைத் திறக்கிறோம்" என்று டிரம்ப் கூறினார்.

    சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் இரு நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்தன.

    இதில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அதிகாரிகளும், வர்த்தக அமைச்சகத்தின் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

    2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை தற்போதைய 190 பில்லியன் டாலர்களிலிருந்து 500 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பதே இந்த பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது.  

    • ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
    • ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

    ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ந்தேதி கடும் தாக்குதல் நடத்தியது.

    குறிப்பாக ஈரானின் அணு நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. மேலும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறி, மாறி தாக்குதல்களை தொடுத்தன. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

    ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணு நிலையம் மீது சக்தி வாய்ந்த குண்டுகளை போர் விமானங்கள் மூலம் வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. மேலும் 2 அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    இதில் ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதற்கிடையே இஸ்ரேல்-ஈரான் இடையே நேற்று போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய அணு நிலையங்களில் சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் முற்றிலும் அழிக்கப்படவில்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    அமெரிக்க தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டம் சில மாதங்கள் மட்டுமே பின்னடைவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்று வெளியான தகவல் தவறானது. இந்த அறிக்கைகள் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவத் தாக்குதல்களில் ஒன்றை குறைப்பதற்கான ஒரு முயற்சியாகும். ஏனென்றால் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டது என்றார்.

    மேலும் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறும்போது, ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை. அனைத்தும் முடிந்த வரை விரைவாக அமைதியாவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். குழப்பங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என்றார்.

    இதற்கிடையே வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறும்போது, ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்ற அறிக்கைகள் முற்றிலும் தவறானது. இது துணிச் லான போர் விமானிகளை இழிவுபடுத்துவதற்கும்" டிரம்பின் தலைமையை குறைத்து மதிப்பிடுவதும் நோக்கமாகக் கொண்டவை.

    நீங்கள் அதிசக்தி வாய்ந்த குண்டுகளை அவர்களின் இலக்குகளில் சரியாகப் போடும்போது என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு முழுமையான அழிவு ஏற்பட்டது என்றார்.

    • டொனால்டு டிரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறிவித்தார்.
    • அறிவித்த பிறகு ஈரான் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

    இஸ்ரேல்- ஈரான் இடையில் கடந்த 12 நாட்களாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

    ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என அமெரிக்க தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் ஈரானில் உள்ள அணுஆயுத திட்டங்களை செயல்படுத்தும் இடங்களில் பயங்கர தாக்குதல் நடத்தியது.

    பின்னர் ஈரான் இஸ்ரேல் மீதும், கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில்தான் நேற்றிரவு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேல்- ஈரான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவித்தார்.

    டிரம்பின் போர் நிறுத்தம் அறிவிப்புக்கு முன், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம் எனக்கூறி, இன்று காலை இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலுக்குப்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதாக ஈரான் தெரிவித்தது. அதேவேளையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவித்த பின் ஈரான், சுமார் இரண்டரை மணி நேரம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    ஒருவேளை இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தும். இதனால் போர் நிறுத்தம் ஒப்பந்தம் எடுபடாமல் போகிவிடும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போர் நிறுத்தத்திற்கு முயற்சி மேற்கொண்டு வரும்போது இஸ்ரேலால் அதற்கு குந்தகம் ஏற்படும் என நினைக்கிறார்.

    இந்த நிலையில், விமானிகளை உடனடியாக சொந்த நாட்டிற்கு திரும்ப அழைக்கும்படி இஸ்ரேலுக்கு டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • அதை "12 நாள் போர்" என்று அழைக்க வேண்டும்.
    • முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக்கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை.

    கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று (திங்கள்கிழமை) இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.

    அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 

    தனது ட்ரூத் சோஷியல் பதிவில் டிரம்ப் கூறியதாவது, "அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழுமையான போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

    சுமார் 6 மணி நேரத்தில், இஸ்ரேலும் ஈரானும் தங்கள் இறுதிப் பணிகளை முடித்த பிறகு 12 மணிநேர போர் நிறுத்தம் தொடங்கும். அப்போது போர் முடிந்ததாக கருதப்படும்.  அந்த 12 மணிநேர போர் நிறுத்தத்தின் பின், ஈரான், இஸ்ரேல் தங்கள் போர் நிறுத்த்தை நீட்டிக்கும், 24வது மணி நேரத்தில், 12வது நாள் போரின் அதிகாரப்பூர்வ முடிவை உலகமே வரவேற்கும்.

    ஒவ்வொரு போர் நிறுத்தத்தின் போதும், மறுபக்கம் அமைதியாகவும் மரியாதையுடனும் இருக்கும். இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் முடிவுக்கு வருவதற்கான சகிப்புத்தன்மை, தைரியம் பெற்றதற்கு நான் வாழ்த்த விரும்புகிறேன். அதை "12 நாள் போர்" என்று அழைக்க வேண்டும்.

    இது பல வருடங்களாக நீடித்து, முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக்கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை, மத்திய கிழக்கு ஒருபோதும் அழியாது!. கடவுள் இஸ்ரேலை ஆசீர்வதிப்பாராக, கடவுள் ஈரானை ஆசீர்வதிப்பாராக, கடவுள் மத்திய கிழக்கை ஆசீர்வதிப்பாராக, கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக, கடவுள் உலகை ஆசீர்வதிப்பாராக!" என்று பதிவிட்டுள்ளார். 

    • அமெரிக்க கமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வெளியுறவு துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
    • அமெரிக்காவில் உள்ள நகரங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு உள்ளன.

    இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவும் தற்போது ஈரானுக்கு எதிரான நேரடி ராணுவ நடவடிக்கையை முதன் முறையாக தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் என்று பெயரிடப் பட்ட 7 பி-2 நவீன ரக குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் போர் விமானங்கள ஈரான் மீது அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.

    இந்த விமானங்கள் ஈரானில் உள்ள போர்டோவ், நடான்ஸ், இஸ்பஹான், ஆகிய 3 அணுசக்தி தளங்கள் மீது சரமாரியாக குண்டுகளை வீசியது. இந்த நவீன ரக விமானங்கள் 30 ஆயிரம் பவுண்டு ( 13,500 கிலோ ) எடை கொண்ட பங்கர் பஸ்டர் எனப்படும் பதுங்கு குழிகள் அழிப்பு குண்டுகளை வீசியது.

    ஈரானின் போர்டோ அணுசக்தி தளத்தில் மேலே உள்ள மலையில் மோதிய இந்த பங்கர் பஸ்டர் குண்டுகள் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

    அமெரிக்க படைகள் தாக்கியதில் அணு சக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமையுடன் கூறினார்.

    இடைவிடாமல் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஈரானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க போர் விமானங்கள் பத்திரமாக மீண்டும் மிசோரியில் உள்ள வைட்மேன் விமான படை தளத்திற்கு திரும்பி உள்ளது.

    தங்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதால் ஈரான் பதிலடி கொடுக்கும் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அமெரிக்காவில் உள்ள நகரங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு உள்ளன. இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத் தப்பட்டு உள்ளனர்.

    உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவு துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் லெபனானில் உள்ள அமெரிக்க துணை தூதரக ஊழியர்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக் கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஈரான் மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    • இஸ்ரேல் - ஈரான் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
    • ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இதனையாடடுத்து, 2 நாடுகளும் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி தளங்களும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    டிரம்ப் தனது சமூக வலைத்தள, "செயற்கைக்கோள் படங்கள் காட்டியுள்ளபடி, ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி நிலையங்களுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய சேதம் தரை மட்டத்திற்கு கீழே நடந்தது" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஈரான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது .
    • ஈரான் அணு ஆயுதங்கள் உருவாக்குவதை தடுப்பதே நமது தாக்குதலின் முக்கிய நோக்கம்

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இதனையடுத்து, 2 நாடுகளும் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

    டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், "தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், அங்கு ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது? ஈரான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது. அந்த நாடு அணு ஆயுதங்கள் உருவாக்குவதை தடுப்பதே நமது தாக்குதலின் முக்கிய நோக்கம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளது.
    • இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது

    ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், விலைகளும் உயர் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஹார்முஸ் நீரிணையை மூடும் ஈரானின் முடிவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, "ஹார்முஸ் நீரிணையை மூடும் ஈரானின் முடிவு பொருளாதார தற்கொலைக்கு சமம். இது மற்ற நாடுகளின் பொருளாதாரங்களையும் பாதிக்கும். சீன அரசாங்கம் இது குறித்து ஈரானிடம் பேசவேண்டும். ஏனென்றால் அவர்கள் தங்கள் எண்ணெய் தேவைக்காக ஹார்முஸ் நீரிணையை பெரிதும் நம்பியுள்ளனர்" என்று தெரிவித்தார். 

    • இந்தியாவில் பாலியல் குற்றம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
    • இந்தியா வரும் அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

    வாஷிங்டன்:

    தொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்தியா வரும் அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இந்தியாவில் பாலியல் குற்றம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

    சுற்றுலாத் தலங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதால், மிகவும் கவனமாக அமெரிக்கர்கள் இருக்கவேண்டும் என அமெரிக்க அரசு கூறியுள்ளது.

    நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் மகாராஷ்டிர மாநிலத்தின் கிழக்கு, தெலுங்கானாவின் வடக்கு மற்றும் மேற்கு வங்காளத்தின் மேற்கு பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பயங்கரவாத தாக்குதல் அபாயம் இருப்பதால் மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளுக்கும், காஷ்மீருக்கும், மணிப்பூருக்கும் செல்வதை அமெரிக்கர்கள் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • ஈரானில் உருவாகி வரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
    • குடிமக்களை பாதுகாக்க மாகாண மற்றும் மத்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

    அமெரிக்க இராணுவம், ஈரானில் உள்ள இஸ்ஃபஹான், ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின.

    இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் டிசி ஆகியவற்றில் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கை நிலையில் உள்ளன.

    இந்த நகரங்களில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளன.

    நியூயார்க் நகர காவல்துறை (NYPD) வெளியிட்டுள்ள அறிவிப்பில், நகரின் மத, கலாச்சார மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானில் உருவாகி வரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள மத்திய படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் NYPD கூறியுள்ளது.

    வாஷிங்டன் டிசியின் பெருநகர காவல்துறை (Metropolitan Police Department) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணித்து வருவதாகவும், குடிமக்களை பாதுகாக்க மாகாண மற்றும் மத்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றாலும், மத தளங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை (LAPD) - யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை அதிகரித்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் தெரிவித்துள்ளார்.

    தற்போது நம்பகமான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றும், ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
    • பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் எங்கள் நோக்கமாகும்.

    ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

    அமெரிக்காவின் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்த தாக்குதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம். அமெரிக்க தாக்குதல்களில் ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் முற்றிலும் முழுமையாகவும் அழிக்கப்பட்டன.

    ஈரானை தாக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஒரு குழுவாக செயல்பாட்டோம். ஈரானின் அணு சக்தி செறிவூட்டல் திறனை நிறுத்தவும், அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்தவும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    ஈரான் இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும். எங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    ஈரானுக்கு அமைதி அல்லது சோகம் ஆகிய வற்றில் ஒன்றில் ஒரு தேர்வு மட்டுமே உள்ளது. மத்திய கிழக்கு பகுதியை கொடுமைப்படுத்தும் நபராக ஈரான் உள்ளது. அந்த நாடு அமைதியை ஏற்படுத்தவில்லை என்றால் கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்படும்.

    கடந்த 8 நாட்களில் நாம் கண்டதை விட மிகப்பெரிய அமைதி ஏற்படும் அல்லது ஈரானுக்கு மிகப்பெரிய சோகம் ஏற்படும். இன்னும் பல இலக்குகள் குறி வைக்கப்பட்டு உள்ளன. அமைதி விரைவாக வரவில்லை என்றால் மற்ற இலக்குகளை துல்லியம், வேகம் மற்றும் திறமையுடன் நாங்கள் தாக்குவோம்" என்று கூறினார்.

    • அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது.
    • இந்த எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. மிகவும் செயல்படும் எரிமலையான இது சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுகிறது.

    இந்நிலையில், கிலாவியா எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அப்போது எரிமலையில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறின. அதில் இருந்து வெளியேறிய சாம்பல் அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்கா வழியாக பாய்ந்தது.

    எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தேசிய பூங்கா மூடப்பட்டது. மேலும் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    ×