என் மலர்
அமெரிக்கா
- டிரம்ப் நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களின் மதிப்பை உயர்த்தி காட்டி வங்கிக் கடன்கள் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தங்களைப் பெற்றது.
- துணிச்சலுடன் செயல்பட்டதற்காக நீதிமன்றத்தை மதிப்பதாக டிரம்ப் மனமுவந்துள்ளார்.
டிரம்ப் நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களின் மதிப்பை உயர்த்தி காட்டி வங்கிக் கடன்கள் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தங்களைப் பெற்றதாக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் 2022 இல் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 2024 இல் அவருக்கு 500 மில்லியன் டாலர் அபராதம்விதிக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த வருட இறுதியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் அமெரிக்க அதிபரானார்.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் 500 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு அதிகாரசபை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முந்தைய உத்தரவில் அபராதம் அதிகமாக விதிக்கப்பட்டது என்றும், அமெரிக்க அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தை மீறியது என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் தனது வணிகத்தை முற்றிலுமாக பாதித்த உத்தரவை ரத்து செய்ய துணிச்சலுடன் செயல்பட்டதற்காக நீதிமன்றத்தை மதிப்பதாக டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் மனமுவந்துள்ளார்.
- இந்தியா உடனான டிரம்ப் நிர்வாகத்தின் உறவு மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறது.
- சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் தயவும், உறவும் மிகவும் அவசியம்.
வாஷிங்டன்:
இந்தியா மீது 25 சதவீதம் இறக்குமதி வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவைத் தாண்டி சர்வதேச அளவில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐநாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதரான நிக்கி ஹாலே கூறியுள்ளதாவது:
இந்தியா உடனான டிரம்ப் நிர்வாகத்தின் உறவு மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் தயவும், உறவும் மிகவும் அவசியம்.
இந்தியா டிரம்பின் கருத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒரு தீர்வு காண அமெரிக்கா உடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்தியா, சீனாவைப் போல ஒரு எதிரி அல்ல. டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை இலக்குகளை அடைய, அமெரிக்கா- இந்தியா உறவுகளை மீட்டெடுப்பது மிகவும் முக்கியமானவை.
ஜவுளி, மலிவான தொலைபேசிகள் மற்றும் சோலார் பேனல்கள் போன்ற உற்பத்தி செய்ய முடியாத தயாரிப்புகளை சீனா போன்ற அளவில் உற்பத்தி செய்யும் திறனில் இந்தியா சிறந்து விளங்குகிறது.
எளிமையாகச் சொன்னால், இந்தியாவின் சக்தி வளரும்போது சீனாவின் வளர்ச்சி குறைந்து விடும் என தெரிவித்தார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடந்த இறுதிப்போட்டியில் இகா ஸ்வியாடெக், காஸ்பர் ரூட் ஜோடி தோல்வி அடைந்தது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக்-நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடி, இத்தாலியின் சாரா எர்ரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி முதல் செட்டை 6-3 என வென்றது. 2வது செட்டை இகா ஸ்வியாடெக் ஜோடி 7-5 என வென்றது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 10-6 என வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.
- இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பித் தர 'அமெரிக்கக் கட்சி' உருவாக்கப்பட்டது
- குடியரசு கட்சியின் எதிர்கால வாரிசாகக் கருதப்படுகிறார்.
கடந்த ஜூலை மாதம் டிரம்ப் நிர்வாகத்தால் கொடுவரப்பட்ட வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவை கடுமையாக எதிர்த்த உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க், அதிபர் டிரம்ப் உடனான நட்பை முறித்துக்கொண்டார்.
அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடனேயே, புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார்.
"இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பித் தர 'அமெரிக்கக் கட்சி' உருவாக்கப்பட்டது என்று அறிவித்தார். ஊழல் மற்றும் ஊதாரித்தனத்தால் நாடு திவாலாகிறது. நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம், ஜனநாயகத்தில் அல்ல" என்று கடுமையான கூறியிருந்தார்.
2026 இடைக்காலத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்பதையும் மஸ்க் அப்போது தெரிவித்திருந்தார்.
ஆனால் சமீபத்திய காலங்களாக சைலண்ட் மோடில் இருக்கும் மஸ்க் பிஸ்னஸில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் குடியரசு கட்சியின் எதிர்கால வாரிசாகக் கருதப்படும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுடன் மஸ்க் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
2028 ஆம் ஆண்டு ஜனாதிபதி வெப்பாளராக ஜே.டி. வான்ஸை ஆதரிக்க மஸ்க் ஆர்வமாக உள்ளார் என அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2024 தேர்தலில் டொனால்டு டிரம்ப் மற்றும் பிற குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மஸ்க் 300 மில்லியன் டாலர்களை செலவிட்டது குறிப்பிடதக்கது.
- இந்தச் சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமல் முடிந்தது.
- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்காதது ஏன்?
ஆகஸ்ட் 15 அன்று அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்தார். இந்தச் சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமல் முடிந்தது.
இந்நிலையில் புதின், தனது மூன்று ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப சுமார் 2.2 கோடி ரூபாயை ரொக்கமாக செலுத்த வேண்டியிருந்தது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் பேசிய அவர், ரஷியா மீது அமலில் இருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக அமெரிக்க வங்கிகளைப் பயன்படுத்த முடியாத காரணத்தினால், எரிபொருள் நிரப்புவதற்காக ரொக்கமாகப் பணம் செலுத்த வேண்டியிருந்தது என தெரிவித்தார்.
மேலும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த ரூபியோ, ரஷியா ஏற்கனவே கடுமையான தடைகளின் கீழ் உள்ளது என்றும், புதிய தடைகள் உடனடியாகப் பலன் தராது என்றும் கூறினார்.
இதற்கிடையே, அதிபர் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் அதன் நிலப்பகுதியை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஜெலென்ஸ்கி உறுதியாக நிராகரித்துள்ளார்.
3 ஆண்டுகளை கடந்து நடந்து வரும் உக்ரைன் போரினால் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடந்த காலிறுதியில் இகா ஸ்வியாடெக், காஸ்பர் ரூட் ஜோடி வெற்றி பெற்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக்-நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடி, அமெரிக்காவின் கேட்டி மெக்னல்லி-இத்தாலியின் லாரன்சோ முசெட்டி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இகா ஸ்வியாடெக்-காஸ்பர் ரூட் ஜோடி 4-1, 4-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த ஜோடி நாளை நடைபெறும் அரையிறுதியில் ஜாக் டிராபர்-ஜெசிகா பெகுலா ஜோடியை எதிர்கொள்கிறது.
- ஐ.நா.சபையின் முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.
- இந்தியாவில் பாலியல் வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:
போர் உள்ளிட்ட மோதல் தொடர்பான பாலியல் வன்முறை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது. இதில் இந்திய பிரதிநிதி எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 1971-ம் ஆண்டு வங்காளதேச விடுதலை போரின்போது லட்சக்கணக்கான பெண்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் செய்த மொத்த பாலியல் வன்முறையின் கொடூரமான குற்றங்கள் முற்றிலும் வெட்கக்கேடான பதிவு ஆகும். 1971-ம் ஆண்டு அட்டூழியங்கள் முதல் மோதல் சூழ்நிலைகளில் பாலியல் வன்முறையின் நீண்ட மற்றும் தொடர்ச்சியான வரலாற்றை பாகிஸ்தான் ராணுவம் கொண்டுள்ளது.
இந்த வருந்தத்தக்க முறை இன்று வரை குறையில்லாமல் தொடர்கிறது. பாகிஸ்தானில் சிறுபான்மைப் பெண்கள் கடத்தல், கட்டாய மதமாற்றங்கள், இளம் வயது திருமணங்கள் மற்றும் பிற துஷ்பிரயோகங்கள் போன்ற துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பாகிஸ்தானின் நீதித்துறை பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்களை அங்கீகரித்துள்ளது.
மோதல் தொடர்பான கொடூரமான பாலியல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மோதல் மண்டலங்களில் பாலியல் வன்முறை தனிப்பட்ட வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்லாமல் தலை முறை தலைமுறையாக சமூகங்களில் நீடித்த வடுக்களை விட்டுச்செல்கிறது.
பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐ.நா. பொதுச்செயலாளரின் அறக்கட்டளை நிதிக்கு பங்களித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐ.நா.சபையின் இந்த முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவில் பாலியல் வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு உள்ளன என தெரிவித்தார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடந்த காலிறுதியில் மெத்வதேவ், ஆன்ட்ரிவா ஜோடி தோல்வி அடைந்தது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ்-மிர்ரா ஆண்ட்ரிவா ஜோடி, பிரிட்டனின் ஜாக் டிராபர்-அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய ஜாக் டிராபர்-ஜெசிகா பெகுலா ஜோடி 4-1, 4-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இதனால் மெத்வதேவ்-மிர்ரா ஆண்ட்ரிவா ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையரில் இத்தாலியின் ஜானிக் சின்னர்-செக் குடியரசின் சினியாகோவாவுடன் களமிறங்குகிறார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்.
இதில், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர்- செக் குடியரசின் கேதரினா சினியாகோவாவுடன் களமிறங்குகிறார்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ்- சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உடன் களமிறங்குகிறார்.
ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ்-பிரிட்டனின் எம்மா ரானுகாடு உடன் களமிறங்குகிறார்.
போலந்தின் இகா ஸ்வியாடெக்-நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் களமிறங்குகிறார்.
இதேபோல், கஜகஸ்தான் எலினா ரிபாகினா, ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா உள்பட பல முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் முன்னணி வீரரும், தரவரிசையில் 18வது இடம் பிடித்துள்ள பிரிட்டனின் டேன் ஈவன்ஸ், தென் ஆப்பிரிக்காவின் லாய்டு ஹாரிஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லாய்டு ஹாரிஸ் முதல் செட்டை 6-4 என வென்றார். இதற்கு பதிலடியாக டேன் ஈவன்ஸ் 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லாய்டு ஹாரிஸ் 7-5 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான டேன் ஈவன்ஸ் அமெரிக்க ஓபன் தொடரில் இருந்து விலகினார்.
- சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை டிரம்ப் நாடு கடத்தி வருகிறார்.
- போராட்டம் நடத்திய சில மாணவர்களை குறிவைத்தும் ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை அதிபர் டிரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் போராட்டம் உள்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு மாணவர்களின் விசாவும் ரத்து செய்யப்படுகிறது.
இந்நிலையில் பயங்கரவாதத்தை ஆதரித்ததாக கூறி, 6,000+ வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், குற்றச்செயல்கள், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுதல் போன்ற சட்ட விதிமீறலுக்காகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய சில மாணவர்களை குறிவைத்தும் ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
- சின்சினாட்டி ஓபன் அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.
- இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நம்பர் 1 வீரரான சின்னரை எதிர்கொண்டார்.
இறுதிப்போட்டியின் முதல் செட்டில் அல்காரஸ் 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சின்னர் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து அல்காரஸ் சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.






