என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேன் ஈவன்ஸ்"

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் முன்னணி வீரரும், தரவரிசையில் 18வது இடம் பிடித்துள்ள பிரிட்டனின் டேன் ஈவன்ஸ், தென் ஆப்பிரிக்காவின் லாய்டு ஹாரிஸ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லாய்டு ஹாரிஸ் முதல் செட்டை 6-4 என வென்றார். இதற்கு பதிலடியாக டேன் ஈவன்ஸ் 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லாய்டு ஹாரிஸ் 7-5 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான டேன் ஈவன்ஸ் அமெரிக்க ஓபன் தொடரில் இருந்து விலகினார்.

    போதைமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் தடைபெற்று மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ள டேன் ஈவன்ஸ்க்கு வைல்டுகார்டு மறுக்கப்பட்டுள்ளது. #Wimbledon
    இங்கிலாந்து டென்னிஸ் வீரர் டேன் ஈவன்ஸ். 28 வயதாகும் இவர் கடந்த 2017-ம் ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற தொடரின்போது கோகைன் போதை மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் அவருக்கு தடைவிதிக்கப்பட்டது.

    தற்போது தடைக்காலம் முடிந்து மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார். 21 போட்டிகளில் விளையாடி 16-ல் வெற்றி பெற்றுள்ளார். தற்போது தரவரிசையில் 340-வது இடத்தில் இருக்கும் டேன் ஈவன்ஸ், வைல்டுகார்டு சிறப்புரிமை கேட்டிருந்தார். ஆனால், விம்பிள்டன் ஒருங்கிணைப்பார்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.



    இங்கிலாந்தை சேர்ந்த மற்ற வீரர்கள் யாரும் வைல்டுகார்டு கேட்காத நிலையிலும், இவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதிச் சுற்றில் இருந்தே டேன் ஈவன்ஸ் விளையாடி வரவேண்டிய நிலையில் உள்ளார்.
    ×