என் மலர்
உலகம்

6,000 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அதிரடியாக ரத்து செய்த அமெரிக்கா - காரணம் இதுதான்!
- சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை டிரம்ப் நாடு கடத்தி வருகிறார்.
- போராட்டம் நடத்திய சில மாணவர்களை குறிவைத்தும் ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை அதிபர் டிரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் போராட்டம் உள்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு மாணவர்களின் விசாவும் ரத்து செய்யப்படுகிறது.
இந்நிலையில் பயங்கரவாதத்தை ஆதரித்ததாக கூறி, 6,000+ வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், குற்றச்செயல்கள், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுதல் போன்ற சட்ட விதிமீறலுக்காகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய சில மாணவர்களை குறிவைத்தும் ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Next Story






