என் மலர்
அமெரிக்கா
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- போலந்தின் ஸ்வியாடெக் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் போலந்தைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக், கொலம்பியாவின் எமிலியானா அரங்கோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்யாடெக் 6-1 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் தத்ஜனா மரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- சீனா மீது 200 சதவீதம் வரை வரிகளை விதிக்கத் தயங்கமாட்டேன்.
- இந்த ஆண்டு இறுதியில் அல்லது அதற்குப் பிறகு விரைவில் நான் சீனாவுக்குச் செல்வேன்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகள் மீது வரிகளை உயர்த்தி வருகிறார்.
குறிப்பாக அமெரிக்காவின் பிரதான போட்டியாளராக கருதப்படும் சீனா இந்த வரி உயர்வுகளுக்கு கடுமையான எதிர்வினை ஆற்றி வருகிறது.
இந்நிலையில் சீனாவுக்கு சீட்டாட்டத்தின் பாணியில் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகளையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் "அவர்களிடம் சில கார்டுகள் உள்ளன. ஆனால் எங்களிடம் மிகச் சிறந்த கார்டுகள் உள்ளன.
நான் அவற்றை கொண்டு விளையாட விரும்பவில்லை. நான் அந்த கார்டுகளை வைத்து விளையாடினால், சீனா அழிந்துபோதும். அதனால்தான் நான் இப்போது அதைச் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை சீனா எடுத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.
அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் சீனா மீது 200 சதவீதம் வரை வரிகளை விதிக்கத் தயங்கமாட்டேன் என்று அவர் கூறினார்.
அதேநேரம், "இந்த ஆண்டு இறுதியில் அல்லது அதற்குப் பிறகு விரைவில் நான் சீனாவுக்குச் செல்வேன். இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த உறவுகள் இருக்கும்" என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
- ஏற்கனவே உள்ள 25% வரியுடன் சேர்த்து இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.
- ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும்
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டி ஆகஸ்ட் 6 அன்று இந்திய பொருட்கள் மீது அபராதமாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்திருந்தார்.
இந்நிலையில் டிரம்ப் ஏற்கெனவே அறிவித்தபடி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால், ஏற்கனவே உள்ள 25% வரியுடன் சேர்த்து இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை மூலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வரிவிதிப்பு, நாளை(ஆகஸ்ட் 27) அதிகாலை 12:01 மணி முதல் அமலுக்கு வரும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
- அவர்கள் போர் வேண்டாம் என்று கைவிட்டார்கள்.
- 7 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தின.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போர் உட்பட ஏழு போர்களை தான் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்த ஏழு போர்களில் நான்கு போர்களை, வரி விதிப்பு மற்றும் வர்த்தகத்தைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
டிரம்ப் பேசுகையில், "நான் அவர்களிடம்வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் தொடர்ந்து போரிட்டால், உங்களுடன் எந்த வர்த்தகமும் செய்ய மாட்டோம், மேலும் 100% வரி விதிப்போம் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் அனைவரும் போர் வேண்டாம் என்று கைவிட்டார்கள்" என்று கூறினார்.
மேலும், "நான் இந்த எல்லாப் போர்களையும் நிறுத்தியுள்ளேன். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பெரிய போர் ஏற்பட்டிருக்க வேண்டியது!
அது அணு ஆயுதப் போராக மாறியிருக்கக்கூடும். இரு நாடுகளும் 7 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தின. 24 மணி நேரத்திற்குள் சண்டையை நிறுத்தவில்லை என்றால் வர்த்தகம் நிறுத்தப்படும் என்று நான் எச்சரித்ததால்தான் போர் நின்றது" என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் எந்த நாட்டு ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டது என்று அவர் குறிப்பிடவில்லை.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் தொடங்குகிறது.
- பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, சுவிட்சர்லாந்தின் ரெபேகா மசரோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பிரிட்டனின் எம்மா ராடுகானு 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஜப்பானின் இனா ஷிபஹராவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் தொடங்குகிறது.
- இதில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், சக நாட்டவரான எமிலோ நவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஜூன் மாதம் அமெரிக்க பாதுகாப்பு உளவு அமைப்பின் அறிக்கை கசிந்தது.
- பணி நீக்கம் தொடர்பாக பாதுகாப்பு துறை விளக்கம் அளிக்கவில்லை.
அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனின் உளவுப்பிரிவு தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெப்ரி க்ரூஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 மூத்த ராணுவ அதிகாரிகளும் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக்செத் பிறப்பித்து உள்ளார். இந்த பணி நீக்கம் தொடர்பாக பாதுகாப்பு துறை விளக்கம் அளிக்கவில்லை.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என்று கடந்த ஜூன் மாதம் கசிந்த அமெரிக்க பாதுகாப்பு உளவு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த மதிப்பீடு முற்றிலும் தவறானது என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான் பென்டகனின் உளவுப்பிரிவு தலைவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் தொடங்குகிறது.
- இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் இன்று தொடங்குகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், நம்பர் 1 வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் குடியரசு வீரர் விட் கோப்ரிவா உடன் மோதுகிறார். நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்காவுடன் மோதுகிறார்.
இதேபோல், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், அமெரிக்காவின் டெய்லர் ப்ரிட்ஸ், டாம்மி பால், நார்வேவின் கேஸ்பர் ரூட், ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் உள்ளிட்டோரும் முதல் நாளில் களம் இறங்குகின்றனர்.
நான்கு முறை யுஎஸ் ஓபன் உள்பட மொத்தம் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செர்பியாவின் 38 வயதான ஜோகோவிச், முதல் சுற்றில் அமெரிக்காவின் லர்னர் டியெனை எதிர்கொள்கிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான பெலாரசின் அரினா சபலென்கா முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனை ரெபேக்கா மாஸரோவாவுடன் மோதவுள்ளார்.
இதேபோல், போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கோப், ஜெசிகா பெகுலா, மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, ஜப்பானின் நவோமி ஒசாகா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, இங்கிலாந்தின் எம்மா ராடுகானு ஆகியோரும் முதல் நாளில் களம் காண்கின்றனர்.
- ரஷிய அதிகாரிகள் தங்கள் 3 ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப 2.5 கோடியை ரொக்கமாக கொடுத்தனர்.
- அலாஸ்காவை சேர்ந்த மார்க் வாரன் என்ற நபருக்கு ரஷிய அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் ஒன்றை பரிசளித்திருந்ததும் வைரலானது.
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரஷிய அதிபர் புதின் அமெரிக்கா சென்றார்.
அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முக்கிய முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் ரஷிய அதிபர் அமெரிக்காவுக்கு சென்றது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் வங்கிக்கணக்கை பயன்படுத்த முடியாமல், ரஷிய அதிகாரிகள் தங்கள் 3 ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப 2.5 கோடியை ரொக்கமாக கொடுத்தனர்.
அதேபோல் அலாஸ்காவை சேர்ந்த மார்க் வாரன் என்ற நபருக்கு ரஷிய அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் ஒன்றை பரிசளித்திருந்ததும் வைரலானது.
இதற்கிடையே ரஷிய அதிபர் புதின் அமெரிக்கா சென்றபோது அவருடன் சென்ற அதிகாரிகள் அவரின் மலம் அடங்கிய சூட்கேசை உடன் கொண்டு சென்றது வைரலாகி வருகிறது.
வெளிநாட்டு பயணங்களில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிநாடு செல்லும்போது, அவர் உடன் "Poop Suitcase" எனப்படும் சிறப்பு பெட்டி கொண்டு செல்லப்படுகிறது.
இதன் மூலம், 72 வயதான புதினின் மலம் மற்றும் சிறுநீர் கழிவுகளை மற்ற நாடுகள் ஆய்வு செய்து உடல்நிலை, நோய் அல்லது உடல் பலவீனங்களை கண்டுபிடிப்பதைத் தவிர்ப்பதற்காகவே இந்த நடைமுறையை பின்பற்றுகின்றனர் என்று கூறப்படுகிறது.
- வெள்ளை மாளிகையில் அதிபர் பணியாளர் அலுவலத்தின் இயக்குநராக உள்ள செர்ஜியோ கோர் பரிந்துரை.
- அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையில் செர்ஜியோ கோர் முக்கியப் பங்கு வகித்தவர்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அதிபர் டிரம்ப் அரசியல் உதவியாளர் செர்ஜியோ கோரை வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது.
வெள்ளை மாளிகையில் அதிபர் பணியாளர் அலுவலத்தின் இயக்குநராக உள்ள செர்ஜியோ கோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையில் செர்ஜியோ கோர் முக்கியப் பங்கு வகித்தவர்.
- விசா வைத்திருப்பவர்களின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும்.
- புதிய விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கும், ஏற்கனவே விசா உள்ள அனைவருக்கும் பொருந்தும்.
5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை மதிப்பாய்வு செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இந்த மதிப்பாய்வில் யாராவது விசா விதிகளை மீறியது கண்டறியப்பட்டால், அவர்களின் விசா உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் அமெரிக்காவில் இருந்தால், அவர்களை நாட்டிலிருந்து நாடு கடத்தும் செயல்முறை தொடங்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது
அனைத்து விசா வைத்திருப்பவர்களின் பதிவுகளும் உன்னிப்பாக சரிபார்க்கப்படும். விசா வழங்கப்பட்ட பிறகு அவர்களின் நடத்தையில் ஏதேனும் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? அவர்கள் விதிகளுக்கு மாறாக நடந்து கொள்கிறார்களா? விசா காலாவதியான பிறகு நாட்டில் தங்குவது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது, பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது, பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்கேற்பது அல்லது பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பது போன்ற பிரச்சினைகளை அதிகாரிகள் ஆராய்வார்கள்.
இதற்காக, விசா வைத்திருப்பவர்களின் சமூக ஊடக கணக்குகள், அவர்களின் சொந்த நாடுகளில் சட்ட அமலாக்க நிறுவனங்கள் வைத்திருக்கும் பதிவுகள் மற்றும் அமெரிக்காவில் அவர்களின் நடத்தை தொடர்பான அனைத்து விவரங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது புதிய விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஏற்கனவே விசா உள்ள அனைவருக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்குக்கும் அதிகமான விசாக்களை, குறிப்பாக மாணவர் விசாக்களை நான்கு மடங்கு அதிகமாக ரத்து செய்துள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. டிரம்ப் பதவியேற்றதிலிருந்து 6,000க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






