என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்று போட்டிகள் இன்று தொடக்கம்
    X

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்று போட்டிகள் இன்று தொடக்கம்

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் தொடங்குகிறது.
    • இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் இன்று தொடங்குகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், நம்பர் 1 வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் குடியரசு வீரர் விட் கோப்ரிவா உடன் மோதுகிறார். நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்காவுடன் மோதுகிறார்.

    இதேபோல், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், அமெரிக்காவின் டெய்லர் ப்ரிட்ஸ், டாம்மி பால், நார்வேவின் கேஸ்பர் ரூட், ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் உள்ளிட்டோரும் முதல் நாளில் களம் இறங்குகின்றனர்.

    நான்கு முறை யுஎஸ் ஓபன் உள்பட மொத்தம் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செர்பியாவின் 38 வயதான ஜோகோவிச், முதல் சுற்றில் அமெரிக்காவின் லர்னர் டியெனை எதிர்கொள்கிறார்.

    மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான பெலாரசின் அரினா சபலென்கா முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனை ரெபேக்கா மாஸரோவாவுடன் மோதவுள்ளார்.

    இதேபோல், போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கோப், ஜெசிகா பெகுலா, மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, ஜப்பானின் நவோமி ஒசாகா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, இங்கிலாந்தின் எம்மா ராடுகானு ஆகியோரும் முதல் நாளில் களம் காண்கின்றனர்.

    Next Story
    ×