என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உளவுப்பிரிவு"

    • ஜூன் மாதம் அமெரிக்க பாதுகாப்பு உளவு அமைப்பின் அறிக்கை கசிந்தது.
    • பணி நீக்கம் தொடர்பாக பாதுகாப்பு துறை விளக்கம் அளிக்கவில்லை.

    அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனின் உளவுப்பிரிவு தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெப்ரி க்ரூஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 மூத்த ராணுவ அதிகாரிகளும் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக்செத் பிறப்பித்து உள்ளார். இந்த பணி நீக்கம் தொடர்பாக பாதுகாப்பு துறை விளக்கம் அளிக்கவில்லை.

    ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என்று கடந்த ஜூன் மாதம் கசிந்த அமெரிக்க பாதுகாப்பு உளவு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மதிப்பீடு முற்றிலும் தவறானது என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான் பென்டகனின் உளவுப்பிரிவு தலைவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    • இன்று காந்தி கிராம பல்கலைக்கழக விழாவில் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்கள்.
    • பூங்கொத்து, மாலை உள்ளிட்ட பொருட்களை கடுமையான சோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை

    திண்டுக்கல்லில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் காந்தி கிராம பல்கலைக்கழக விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இவர்களுக்கு பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு பிரிவின் சூப்பிரண்டு அறிவுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள அறிக்கையில், 'பிரதமர், முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்வில் அச்சுறுத்தல் இருக்க வாய்ப்பு இருப்பதாக உளவுப் பிரிவு மூலம் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    தலைவர்கள் தங்குமிடம், செல்லும் வழிகள், பங்கு பெறும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நாசவேலைக்கு எதிரான சோதனைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். பூங்கொத்து, மாலை உள்ளிட்ட பொருட்களை கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர்கள் 2 பேருக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ×