என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் களமிறங்கும் முன்னணி வீரர்கள்
    X

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் களமிறங்கும் முன்னணி வீரர்கள்

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையரில் இத்தாலியின் ஜானிக் சின்னர்-செக் குடியரசின் சினியாகோவாவுடன் களமிறங்குகிறார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்.

    இதில், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர்- செக் குடியரசின் கேதரினா சினியாகோவாவுடன் களமிறங்குகிறார்.

    ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ்- சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உடன் களமிறங்குகிறார்.

    ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ்-பிரிட்டனின் எம்மா ரானுகாடு உடன் களமிறங்குகிறார்.

    போலந்தின் இகா ஸ்வியாடெக்-நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் களமிறங்குகிறார்.

    இதேபோல், கஜகஸ்தான் எலினா ரிபாகினா, ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா உள்பட பல முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்.

    Next Story
    ×