என் மலர்
உலகம்

வெள்ளை மாளிகையில் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை
- முதலில் ஜெலன்ஸ்கியுடன் தனியாக தனது ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பேசினார்.
- அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அங்கு உக்ரைனில் கார்க்கிவ் நகர் மீது ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் ரஷியா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றி போர் நடந்து வருகிறது. இந்நிலையில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெருமுயற்சி எடுத்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 15 இல் அலாஸ்காவுக்கு ரஷிய அதிபர் புதினை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முக்கிய முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் இன்று, வெள்ளை மாளிகை வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வாஷிங்டனுக்கு வரவழைத்து பேசுவார்த்தை நடத்தியுள்ளார் டிரம்ப். முதலில் ஜெலன்ஸ்கியுடன் தனியாக தனது ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பேசினார்.
தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் வருகை தந்துள்ள நிலையில் அவர்களை சந்தித்த டிரம்ப் கூட்டாக ஜெலென்ஸ்கியை போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு சம்மதிக்க வைக்க அழுத்தம் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
எல்லாம் சரியாக நடந்தால் ஜெலன்ஸ்கி, புதின் இருவருடனும் சேர்நது ஒரு மீட்டிங் போடுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த வெள்ளை மாளிகை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அங்கு உக்ரைனில் கார்க்கிவ் நகர் மீது ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.






