என் மலர்
நீங்கள் தேடியது "ரஷிய-உக்ரைன் போர்"
- இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளேன்.
- வெறும் போர் நிறுத்தம் எங்கள் நோக்கமல்ல.
உக்ரைன் ரஷியா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றி போர் நடந்து வருகிறது. இந்நிலையில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெருமுயற்சி எடுத்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 15 இல் அலாஸ்காவுக்கு ரஷிய அதிபர் புதினை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முக்கிய முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் இன்று, வெள்ளை மாளிகை வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வாஷிங்டனுக்கு வரவழைத்து பேசுவார்த்தை நடத்தியுள்ளார் டிரம்ப். முதலில் ஜெலன்ஸ்கியுடன் தனியாக தனது ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பேசினார். தொடர்ந்து அமெரிக்கா வருகை தந்த 7 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ஜெலன்ஸ்கி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வர ஜெலன்ஸ்கியும் விரும்புகிறார், புதினும் விரும்புகிறார். இந்த போரால் உலக நாடுகள் தளந்துவிட்டன. விரைவில் உக்ரைனில் அமைதி திரும்பும். வெறும் போர் நிறுத்தம் எங்கள் நோக்கமல்ல.

நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடுய அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்வோம். இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளேன். இந்த போர் சற்று கடினமானது. இந்த போருக்கு ஜோ பைடன் தான் காரணம்.
பேச்சுவார்த்தையின்போது புதினுடன் போனில் பேசினேன். இதன் பின்னரும் பேச உள்ளேன். ஜெலன்ஸ்கி, புதின் இருவருடனும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை தொடங்கி உள்ளேன்.
புதின் ஒத்துழைப்பு வழங்குவார் என நம்புகிறேன்.பேச்சுவார்த்தை கடினம், ஆனால் சாத்தியம். உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், இன்னும் 2 வாரங்களில் முடிவு தெரிந்துவிடும்" என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் உக்ரைனுக்கு மேலும் உதவுகளை டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களிடம் ஜெலன்ஸ்கி கோரினார்.
முன்னதாக இந்த சந்திப்பின் முன், கிரீமியாவையும் நேட்டோ உறுப்பினராகும் ஆசையையும் உக்ரைன் கைவிட்டால் போர் நிற்கும் என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- நேட்டோ அமைப்பிடம் உதவி கோரி வருகிறது உக்ரைன்
- நிதி பங்களிப்பை செலுத்துங்கள் என கூறியதாக டிரம்ப் தெரிவித்தார்
2022 பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.
சில மாதங்களாக ராணுவ தளவாட கையிருப்பு குறைந்துள்ளதாக கூறி மேற்கத்திய நாடுகளிடமும், நேட்டோ (NATO) அமைப்பிடமும் உக்ரைன் உதவி கோரி வருகிறது.
ரஷியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உக்ரைனுடன் நிற்காமல் மேலும் பல நாடுகளுக்கு பரவலாம் என அரசியல் விமர்சகர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது பிரசாரத்தில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது குறித்து பேசினார்.
அதில் டிரம்ப், தனது பதவிக்காலத்தில் நேட்டோ அமைப்பில் இருந்த ஒரு உறுப்பினர் நாட்டின் தலைவருடன் (பெயர் குறிப்பிடாமல்) அவர் நிகழ்த்திய கலந்துரையாடலை தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஒரு பெரிய நாட்டின் அதிபர் என்னிடம், நாங்கள் நேட்டோ அமைப்பிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காத நிலையில், ரஷியா எங்களை தாக்கினால் நீங்கள் எங்களை காப்பீர்களா? என கேட்டார்.
நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது. இன்னும் சொல்ல போனால், இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என ரஷியாவிடம் கூறி விடுவேன்.
நிதி பங்களிப்பில் உங்கள் பங்கை நீங்கள் செலுத்தியாக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தேன்.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.
ரஷிய-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை $110 பில்லியன் மதிப்பிற்கு அமெரிக்கா உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.






