என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • இந்திய-அமெரிக்கர்களில் அதிகளவில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • குடியரசுக் கட்சிக்கான ஆதரவில் ஒரு சிறிய முன்னேற்றம் உள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கமலா ஹாரிசுக்கு இந்திய வம்சாவளியினர் 62 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட் நிறுவனம், யூகோவ் நிறுவனத்துடன் இணைந்து 2024 இந்திய-அமெரிக்க மனப்பாங்குகள் என்ற தலைப்பில் புதிய கருத்துக்கணிப்பை நடத்தியது.

    இந்த கருத்துக்கணிப்பில் பதிவு செய்யப்பட்ட இந்திய-அமெரிக்க வாக்காளர்களில் 62 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர், டிரம்பிற்கு 32 சதவீதம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்திய-அமெரிக்கர்களில் அதிகளவில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவில் ஒரு சிறிய முன்னேற்றம் உள்ளது.

    இந்திய-அமெரிக்க பெண்களிடம் கமலா ஹாரிசுக்கு 67 சதவீதம் பேரும், டிரம்பிற்கு 22 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய-அமெரிக்க ஆண்களில் கமலா ஹாரிசுக்கு 53 சதவீதமும், டிரம்பிற்கு 39 சதவீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர்.

    • போர்ட்லாண்ட் பகுதியில் உள்ள 2 வாக்குப் பெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது
    • இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக நடந்துள்ளன

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும் குடியரசுக் கட்சி சார்பில் டோன்லடு டிரம்ப்பும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சிறப்புரிமை மூலம் தபால் ஓட்டு உள்ளிட்ட, முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன. அதன்படி அதிபர் ஜோ பைடனும் தனது வாக்கினை செலுத்தினார்.

    இந்நிலையில் வாக்குகளுடன் கூடிய வாக்குப் பெட்டிகள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் பகுதியில் உள்ள 2 வாக்குப் பெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தலைநகர் வாஷிங்க்டன் மாகாணத்தில் உள்ள வான்கூவர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

    இரு சம்பவங்களிலும் தீயணைத்துப்புத்துறை துரிதமாக செயல்பட்டு தீயை அனைத்தது. இருப்பினும் உள்ளே இருந்த நூற்றுக்கணக்கான வாக்குச்சீட்டுகள் தீயில் புகைந்து சேதமடைந்தன. இதனால் சொற்ப வாக்குச்சீட்டுகளை மட்டுமே சேதமின்றி மீட்க முடிந்ததது.

    இதனையடுத்து இந்த சம்பவங்கள் குறித்து எப்.பி.ஐ. விசாரித்து வருகிறது. இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக நடந்துள்ளதால் இதை செய்தது ஒரே கும்பலா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. இதற்கிடையே செலுத்தப்பட்ட வாக்குகளை மீண்டும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்தல் நேர வன்முறை கண்டிக்கத்தக்கது என்றும் அரசு சார்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன.
    • சக்கர நாற்காலியிலிருந்த பெண் முன்னாள் செல்ல உதவி செய்தார்.

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சிறப்புரிமை மூலம் தபால் ஓட்டு உள்ளிட்ட, முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன.

    அந்த வகையில்  தற்போதைய அதிபர் ஜோ பைடன் தனது சொந்த ஊரான டெலாவேரின் வில்மிங்டன் பகுதியில் தனது வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார்.

    வாக்களிக்கக் காத்திருந்தவர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்ற ஜோ பைடன் அவர்களுடன் சகஜமாகப் பேசினார். மேலும் அங்கு சக்கர நாற்காலியிலிருந்த பெண் முன்னாள் செல்ல உதவி செய்தார்.

    தொடர்ந்து 40 நிமிட காத்திருப்புக்கு பின்னர் இறுதியில் தனது வாக்கினை செலுத்தினார். 81 வயதாகும் ஜோ பைடன் வயது மூப்பு காரணமாக  அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

    • பூமியில் இருந்து 260 மெயில் தொலைவில் விண்வெளி மையத்தில் இருந்து தீபாவளி கொண்டாடுகிறேன்.
    • எனது தந்தை தீபாவளி உள்ளிட்ட இந்திய பண்டிகைகளைப் பற்றி கூறுவார்

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி வரும் அக்டோபர் 31 ஆம் தேதி [வியாழக்கிழமை] வர உள்ள நிலையில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் கலை கட்டி வருகின்றன. அமெரிக்க அதிபர் மாளிகை உட்பட உலகம் முழுவதிலும் தீபாவளி பண்டிகை மனநிலை அனைவரையும் குதூகலப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் உலகம் மட்டும் அள்ளாது தற்போது விண்வெளியிலிருந்தும் தீபாவளி வாழ்த்து வந்துள்ளது. நாசாவின் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து அனைவர்க்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவர் பேசியுள்ள வாழ்த்து வீடியோவில், வெள்ளை மாளிகையிலும் உலகம் முழுவதிலும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த வருடம் பூமியில் இருந்து 260 மெயில் தொலைவில் விண்வெளி மையத்தில் இருந்து தீபாவளி கொண்டாடும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

    எனது தந்தை தீபாவளி உள்ளிட்ட பிற இந்திய பண்டிகைகளைப் பற்றி எடுத்துரைத்து இந்திய கலாச்சாரத்தோடு என்னை நெருக்கத்தில் வைத்திருந்தார். எனவே விண்வெளியில் இருப்பினும் தீபாவளியின் முக்கியத்துவத்தை உணர்வதாகப் பேசியுள்ளார்.

    நாசா திட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதமே அவர் பூமிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    • வெள்ளை மாளிகை பெருமையுடன் தீபாவளியைக் கொண்டாடியது என்று தெரிவித்தார்.
    • அமெரிக்காவில் உள்ள தெற்கு ஆசிய சமூகம் அமெரிக்காவின் மேம்பாட்டுக்கு அதிக பங்காற்றியுள்ளது.

    இந்து மதத்தின் பிரதான பண்டிகையாக விளங்கும் தீபாவளி வரும் அக்டோபர் 31 [வியாழக்கிழமை] கொண்டாடப்படுகிறது. எனவே நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தியாவைத் தாண்டி சமீப வருடங்களாக உலகம் முழுவதும் தீபாவளி அதிகம் கொண்டாடப்படுகிறது.

    அந்த வகையில் அமெரிக்காவிலும் குறிப்பாக வெள்ளை மாளிகையிலும் நேற்று தீபாவளி கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. இதில் குத்துவிளக்கேற்றிய ஜோ பைடன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மேலும் அதிபர் ஜோ பைடன் தனது தீபாவளி வாழ்த்தில், வெள்ளை மாளிகை பெருமையுடன் தீபாவளியைக் கொண்டாடியது குறித்து குறிப்பிட்டு அனைவருக்கும் தீபாவளி தெரிவித்துள்ளார்.

    மேலும் அமெரிக்காவில் உள்ள தெற்கு ஆசிய சமூகம் அமெரிக்காவின் மேம்பாட்டுக்கு அதிக பங்காற்றியுள்ளது. உலகத்திலேயே மிகவும் வேகமாக வளரும் சமூகமாக இது உள்ளது. பன்முகத்தன்மை வாய்ந்த அமெரிக்கா தற்போதுள்ள நிலைமைக்கு எப்படி வந்தது என்பதை ஒருபோதும் மறக்காது என்று தெரிவித்துள்ளார்.

    • சட்ட விரோத தொழிலாளியாக மாறினார்.
    • சட்டத்தை மீறி உள்ளார் என்று ஜோபைடன் தெரிவித்து உள்ளார்.

    வாஷிங்டன்:

    உலகில் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ்,டெஸ்லா உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.

    அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை ஆதரித்து உள்ளார். சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக இருந்து வரும் எலான் மஸ்க் தற்போது அதே பிரச்சினையில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    தொழில் அதிபர் எலான் மஸ்க் தனது வாழ்க்கையின் தொடக்கத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக பணியாற்றினார் என தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.

    அதில் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த எலான் மஸ்க் 1995-ம் ஆண்டு ஸ்டான் போர்ட் பல்கலைக்கழக படிப்பை நிறுத்தி விட்டு ஜிப்-2 என்ற நிறுவனத்தில் 4 ஆண்டுகள் வேலை செய்தார். இது தான் அவரது முதல் வேலை. இந்த காலகட்டத்தில் அவர் முறையான அங்கீகாரம் இல்லாமல் பணிபுரிந்து உள்ளார்.

    1997-ம் ஆண்டு அமெரிக்காவில் பணி செய்வதற்கான அங்கீகாரத்தை பெற்றார். மாணவர் விசாவில் அவர் அமெரிக்காவில் இருந்தது சட்டவிரோதமாகும் என அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும் போது உலகில் மிகப்பெரிய பணக்காரர் இங்கு ஒரு சட்ட விரோத தொழிலாளியாக மாறினார்.

    அவர் மாணவர் விசாவில் வந்த போது பள்ளியில் தான் இருக்க வேண்டும். ஆனால் அவர் பள்ளியில் இல்லை. அவர் சட்டத்தை மீறி உள்ளார் என்று தெரிவித்து உள்ளார்.

    எலான் மஸ்க் விவகாரம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பேனர் எல்க்சின் தலைசிறந்த தச்சரான ஜெர்ரி ஹிக்ஸ் கடந்த 22-ந்தேதி ஒரு கடைக்கு சென்றார்.
    • வெற்றியாளருக்கு பரிசுத் தொகையைப் பெற இரண்டு விருப்பங்கள் இருந்தன.

    அமெரிக்காவின் வட கரோலினாவை சேர்ந்த ஒருவர் ஒரு கடைக்கு வெளியே தரையில் கிடந்த $20 வைத்து வாங்கிய டிக்கெட்டுக்கு $1 மில்லியன் லாட்டரி அடித்துள்ளது.

    பேனர் எல்க்சின் தலைசிறந்த தச்சரான ஜெர்ரி ஹிக்ஸ் கடந்த 22-ந்தேதி ஒரு கடைக்கு சென்றார். ஸ்பீட்வேக்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் $20 கிடப்பதைக் கண்டார்.

    அவர் அதை எடுத்துக்கொண்டு, பூனில் உள்ள NC 105 இல் ஸ்பீட்வேயில் நடந்து, ஒரு எக்ஸ்ட்ரீம் கேஷ் ஸ்கிராட்ச்-ஆஃப் வாங்கினார்.

    ஜெர்ரி ஹிக்ஸ் தேடிய டிக்கெட் அவர்களிடம் உண்மையில் இல்லை, அதற்கு பதிலாக அவர் இதை வாங்கி உள்ளார். அந்த டிக்கெட்டுக்கு $1 மில்லியன் லாட்டரி மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது.

    வெற்றியாளருக்கு பரிசுத் தொகையைப் பெற இரண்டு விருப்பங்கள் இருந்தன.

    20 ஆண்டுகளில் $50,000 அல்லது மொத்த தொகையாக $600,000 பரிசைப் பெறுங்கள். அவர் பிந்தையதை தேர்ந்தெடுத்தார் மற்றும் தேவையான மாநில மற்றும் வரி பிடித்தம் செய்த பிறகு $429,007 கிடைத்துள்ளது.

    ஹிக்ஸ் குடும்பத்திற்கான திட்டங்களை வைத்துள்ளார். அவர் வெற்றி பெறும் தொகையை தனது குழந்தைகளுக்கு உதவவும், 56 ஆண்டுகள் தச்சராக பணியாற்றி ஓய்வு பெறவும் விரும்புகிறார்.

    • ட்விட்டரை 44 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கினார்.
    • நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால், தலைமை அதிகாரி விஜய காதே உட்பட முக்கிய பிரமுகர்களை நீக்கினார்

    எலான் மஸ்க் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல சமூக ஊடகமான ட்விட்டரை 44 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கினார். அதோடு பணிநீக்கம் செய்வது என அந்நிறுவனத்தில் பல மாற்றங்களை கொண்டுவந்தார். ட்விட்டருக்கு எக்ஸ் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டதும் அதில் அடக்கம்.

    இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் கையில் தண்ணீர் சிங்க் உடன் தான் ட்விட்டர் அலுவலகத்திற்குள் முதன்முறையாக நுழைந்த புகைடபத்தை பதிவிட்டு "Let that sink in!". இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று பொருள்படும்படி தற்போது பதிவிட்டுள்ளார்.

    நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால், தலைமை அதிகாரி விஜய காதே உட்பட முக்கிய பிரமுகர்களை டிவிட்டரில் இருந்து நீக்கம் செய்ததை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று பொருள்படும்படி அவர் அப்போது சிங்க் உடன் வந்தது குறிப்பிடத்தக்கது.  

    • சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பின்படி கமலா சற்று பின்தங்கியுள்ளார்.
    • தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

    உலக வல்லரசான அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்த்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. உக்ரைன் போர், பாலஸ்தீன போர்களுக்கு வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள வாக்குப்பதிவு உலக அரசியலுக்கே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

    ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இரு தரப்புக்கும் பிரபலங்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். டிரம்ப் பக்கம் தொழிலதிபர் எலான் மஸ்க் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கமலா ஹாரிஸுக்கு பாடகி டெய்லர் ஷிப்ட் ஆகியோர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஆனாலும் சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பின்படி கமலா சற்று பின்தங்கியுள்ளார்.

     

    இந்நிலையில் ஆஸ்கார் விருது வென்ற டைட்டானிக் பட நாயகன், ஹாலிவுட் முன்னணி நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ கமலா ஹாரிஸுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அவர், இந்த மாத தொடக்கத்தில் ப்ளோரிடா, ஜார்ஜியா, வட கரோலினா பகுதிகளில் ஹெலன் மற்றும் மில்டன் சூறாவளியால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    அதி சக்தி வாய்ந்த இந்த அட்லாடிக் சூறாவளியால் மக்கள் தங்களின் வீடுகளையும் உறவுகளையும் இழந்துள்ளனர். 100 பில்லியன் டாலர் வரை சேதங்களை ஏற்படுத்திய இந்த அசாதாரணமான சூறாவளி காலநிலை மாற்றத்தின் விளைவே. ஆனால் டிரம்ப் காலநிலை மாற்றை தொடர்ந்து மறுக்கிறார்.

    அறிவியலையே அவர் மறுக்கிறார். பாரிஸ் காலநிலை தீர்மானத்திலிருந்து அமெரிக்காவை அவர் பின்வாங்கச் செய்தார். காலநிலை மாற்றம் நமது பூமியையும் பொருளாதாரத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறது. நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள நாம் செயலாற்றியாக வேண்டும். அதனால்தான் நான் கமலா ஹாரிஸ் -லி வாக்களிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவளிப்பவர்களுக்கு தினமும் ஒரு மில்லியன் டாலர் பரிசு அளிப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
    • லாபமும் ரூ.30.4 கோடியிலிருந்து 90 சதவீதம் குறைந்து ரூ.3.1 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தற்போது அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்டு டிரம்ப்-ஐ வெற்றிபெற வைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இவரின் முயற்சிக்கு பெரும் பலமாக இருப்பது அவர் 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய டுவிட்டர் தான். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவளிப்பவர்களுக்கு தினமும் ஒரு மில்லியன் டாலர் பரிசு அளிப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். அதற்கு அமெரிக்க நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்த நிலையில், எலான் மஸ்க் தனத தொழிலை சட்டவிரோதமாக அமெரிக்காவில் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலாக் மஸ்க் 1999-ல் 300 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்ட Zip2 நிறுவனத்தை கட்டும் போது சட்டபூர்வ அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனிடையே, இந்தியாவில் Twitter Communications Pvt Ltd என்ற பெயரில் இயங்கி வரும் எக்ஸ் 2024ஆம் நிதியாண்டில் கடுமையான வருவாய் சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நிறுவனத்தின் இந்திய டிவிட்டர் பிரிவின் வருவாய் கிட்டத்தட்ட 90% குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.207.7 கோடியிலிருந்து தற்போது ரூ.21.1 கோடியாகக் குறைந்துள்ளது. இதேபோல், அதன் லாபமும் ரூ.30.4 கோடியிலிருந்து 90 சதவீதம் குறைந்து ரூ.3.1 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அந்த பரிசை தான் ஏன் பெற்றோம் என்பதற்கான காரணம் ஒபாமாவுக்கே தெரிந்திருக்காது.
    • சட்டவிரோத குடியேற்றங்களால் அமெரிக்கா உலகின் மிகப்பெரிய குப்பைத் தொட்டியாக மாறியுள்ளது

    அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. களத்தில் ஆளுங்கட்சி [டெமாகிரடிக்] சார்பில் நிற்கும் கமலா ஹாரிஸ் மற்றும் எதிர்க்கட்சி [ரிபப்லிக்] சார்பில் நிற்கும் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கமலா ஹாரிஸை ஆதரித்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில்  ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது குறித்து  டிரம்ப் விமர்சித்துள்ளார். நெவாடா நகரில் நடத்த மாற்றத்திற்காக ஒன்றிணைவோம் என்ற பிரச்சாரக் நிகழ்வில் பேசிய டிரம்ப், அவர்கள் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கியுள்ளனர்.

    அந்த பரிசை தான் ஏன் பெற்றோம் என்பதற்கான காரணம் ஒபாமாவுக்கே தெரிந்திருக்காது. அவர் [தேர்தலில் வென்று] நிர்வாகம் செய்ய தொடங்கிய உடனே அந்த விருதை அவர் பெற்றுள்ளார். நான் அவரை விட மிகப்பெரிய, மிக சிறந்த, யூகிக்கவே முடியாத தேர்தலில் வெற்றி பெற்றேன், ஆனால் அவர்கள் ஒபாமாவுக்கு நோபல் பரிசை வழங்கியுள்ளார்கள் என்று தனது ஆதங்கத்தை டிரம்ப் வெளிப்படுத்தினார்.

     

    பராக் ஒபாமாவுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது ஒபாமாவின் இடத்தில் தான் உட்பட யார் இருந்திருந்தாலும் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கும் என்று டிரம்ப் இந்த கூட்டத்தில் பேசியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே சட்டவிரோத குடியேற்றங்களால் அமெரிக்கா உலகின் மிகப்பெரிய குப்பைத் தொட்டியாக மாறியுள்ளதாக டிரம்ப் தனது பிரச்சாரத்தின்போது பேசினார். அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை தற்போது சுமார் 2.5 கோடி பேர் முன்கூட்டியே தபால் மூலம் வாக்களித்து உள்ளதாக கூறப்படுகிறது.

    • அக்டோபர் 1-ந்தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
    • ஈரானின் நேரடி தாக்குதலுக்கு இன்று காலை இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஈரான் மண்ணில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என ஈரான் தெரிவித்திருந்தது. ஆனால் உடனடியாக தாக்குதல் ஏதும் நடத்தவில்லை. கடந்த 1-ந்தேதி திடீரென சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் அனைத்து ஏவுகணைகளையும் வான்பாதுகாப்பு சிஸ்டத்தால் தடுத்து முறியடித்தது.

    அதில் இருந்து ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சுமார் 25 நாட்கள் கழித்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதனால் ஈரான் எப்போது வேண்டுமென்றாலும் பதிலடி தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் சூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலுடன் பதிலடி தாக்குதல் முடிவுக்கு வரவேண்டும். பழிக்குப்பழி வாங்கப்படும் என ஈரான் தாக்குதல் நடத்தினால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

    இந்த தாக்குதலுடன் இருநாடுகளுக்கு இடையிலான நேரடி தாக்குதல் முடிவடைய வேண்டும் என்பதில் கூட்டணி நாடுகளும் உடன்படுகின்றன என நம்புவதாக தெரிவித்துள்ளது.

    ×