என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • Hawk Tuah என்பது நெட்டிஸின்களுக்கு பரிட்சயமான ஒரு சொல்
    • ஆபாச நடிகை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்

    ஹா தூ[Hawk Tuah] என்பது நெட்டிஸின்களுக்கு பரிட்சயமான சொல்லாக மாறிப் போயுள்ளது. இணையத்தில் பரவிய வைரல் வீடியோ ஒன்றில் பெண் ஒருவரிடம் பாலியல் உறவு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலே ஹா தூ [Hawk Tuah]. இதுதொடர்பான மீம்கள் இணையத்தில் உலா வரும் நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பையும் Hawk Tuah வார்த்தையையும் இணைத்து டீ - சர்ட் அணிந்த நபர் விமானத்தில் இருந்து இறங்கிவிடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸில் ஏறிய இளைஞர் ஒருவர் தான் செக்யூரிட்டியைத் தாண்டி வரும்வரை உள்புறம் வெளியிலும் வெளிப்புறம் உள்ளே இருக்குமாறு தான் அணிதிருத்த டி சர்ட்டை கழற்றி டிரம்ப் மற்றும் Hawk Tuah மீமியை இணைத்து மோசமான வகையில் சித்தரிக்கும் படம் கொண்ட டீ சர்டின் பகுதி வெளியே தெரியுமாறு அணிந்துள்ளார்.

    இதை கவனித்த விமான ஊழியர்கள் அந்த இளைஞரை விமானத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆபாச நடிகை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

     

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீரர் சின்னர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் உடன் மோதினார்.

    இதில் சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 4-வது சுற்று ஆட்டத்தில் சின்னர், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோத உள்ளார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலி வீரர் கபோலியை 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முனனேறினார். நாளை நடைபெறும் 4-வது சுற்றில் மெத்வதேவ் போர்த்துக்கீசிய வீரர் நுனோ போர்ஜசை சந்திக்கிறார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதன் 3-வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை பவுலியுசென்கோவா உடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கைப்பற்றி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 4-வது சுற்று ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் சாம்சனோவா உடன் மோத உள்ளார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, கஜகஸ்தானின் யுலியா புடின்சேவாவை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முனனேறினார். நாளை நடைபெறும் 4-வது சுற்றில் பவுலினி செக் வீராங்கனை கரோலினா முச்சோவாவை சந்திக்கிறார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

    நியூயார்க்:

    நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி,

    ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ்-செக் வீராங்கனை கத்ரினா சினிகோவா ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 0-6, 7-6 (7-5), 10-7 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    • அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருகின்றன.
    • வேற்றுமை எண்ணம் துளியும் இன்றி, அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற எண்ணத்துடன் வாழுங்கள்.

    அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * உழைப்பு, திறமை மற்றும் தன்னம்பிக்கையால் தமிழ் வம்சாவளியினர் உயர்ந்துள்ளனர்.

    * தமிழகத்தில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களை வலியுறுத்த வேண்டும் என உரிமையோடு கேட்கிறேன்.

    * தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு அமெரிக்கா நிறுவனங்களை புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்த வேண்டும்.

    * அமெரிக்காவில் தங்கிப் பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்.

    * இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

    * அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருகின்றன.

    * வேற்றுமை எண்ணம் துளியும் இன்றி, அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற எண்ணத்துடன் வாழுங்கள்.

    * அமெரிக்கா- இந்தியா இடையிலான வர்த்தகம் மும்மடங்கு உயர்ந்துள்ளது.

    * இந்தியா- அமெரிக்கா உறவு இருநாட்டு உறவல்ல, இது இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவாக உள்ளது என்றார்.

    • செங்கல்பட்டில் 400 கோடியில் ஆலை.
    • 500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி இரவு அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றார்.

    அந்த வகையில் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் 400 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    அனைத்து மாவட்டங்களில் இருக்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதிப்படுத்தவும் தமிழக அரசு தொடர்ச்சியாக இத்தகைய பயணங்களை 4-வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு இருக்கிறார்.

    அமெரிக்காவில் மின்பொருள் மற்றும் கனரக தொழிற்சாலைகளுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதன் 3-வது சுற்றில் காஸ்பர் ரூட் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அர்ஜென்டினா வீரர் தாமஸ் எட்சவரி உடன் மோதினார்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஸ்வரேவ் 5-7, 7-5, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், சீனாவின் ஷாங் ஜங்செங்கை 6-7 (1-7), 3-6, 6-0, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜான்ஸ்டவுன் பகுதியில் டிரம்பின் பேரணியில் மர்ம நபர் தடையை மீறி டிரம்பை நெருங்க முயற்சித்த செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சிறிது நேரத்திலேயே கூட்டத்திலிருந்த மற்றொரு நபரையும் கைவிளங்கிட்டு போலீஸ் அழைத்துச்சென்றது.

    நவம்பர் மாதம் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஜூலை 13 ஆம் தீதி பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் டிரம்ப் மீது நடத்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பென்சில்வேனியாவில் உள்ள ஜான்ஸ்டவுன் பகுதியில் டிரம்பின் பேரணியில் மர்ம நபர் தடையை மீறி டிரம்பை நெருங்க முயற்சித்த செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில், தாடி வைத்து கூரோலிங் கிளாஸ் அணிந்த நடுத்தர வயது நபர் ஒருவர், பொதுமக்கள் தடையை மீறி செய்தியாளர்கள் இருந்த பகுதிக்குள் நுழைந்து மேடையில் ஏற முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீஸ் அங்கிருந்து அழைத்துச் சென்றது. சிறிது நேரத்திலேயே கூட்டத்திலிருந்த மற்றொரு நபரையும் கைவிளங்கிட்டு போலீஸ் அழைத்துச்சென்றது. தாடி வைத்த நபருக்கும், இரண்டாவது நபருக்கும் தொடர்பு உள்ளதாக என்று தெரியவரவில்லை. 

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதன் 3-வது சுற்றில் கோகோ காப் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா உடன் மோதினார்.

    இதில் சபலென்கா முதல் செட்டை 2-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட சபலென்கா அடுத்த இரு செட்களை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார்.

    இறுதியில், சபலென்கா 2-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 4-வது சுற்று ஆட்டத்தில் அரினா சபலென்கா, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோத உள்ளார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முனனேறினார். நாளை நடைபெறும் 4வது சுற்றில் கோகோ காப், சக வீராங்கனை எம்மா நவாரோவை சந்திக்கிறார்.

    • ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது இவர்கள் இன்றி வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 6.04 மணிக்குப் பூமியை நோக்கிய பயணத்தைத் தொடங்கும்
    • கடந்த 2003ஆம் ஆண்டு நாசா சார்பில் விண்வெளி ஆராய்ச்சி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் போது விண்கலம் வெடித்து சிதறியதில் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுனிதா மற்றும் புட்ச் ஆகியோர் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு எட்டு நாட்களில் பூமிக்க திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

     

    இதன் காரணமாகக் கடந்த 80 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர். இருவரையும் பூமிக்கு அழைத்த வர இருந்த ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது இவர்கள் இன்றி வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 6.04 மணிக்குப் பூமியை நோக்கிய பயணத்தைத் தொடங்கும் ஸ்டார் லைனர் விண்கலம் என்று சுமார் 6 மணி நேரம் பயணித்து விண்கலம் மறுநாள் 12.03 மணிக்கு பூமியை அடையும் என்று நாசா அறிவித்துள்ளது.

     

    பூமிக்குத் திரும்ப உள்ள ஸ்டார் லைனர் விண்கலத்திலேயே ஏன் இவர்கள் இருவரையும் அழைத்து வர வில்லை என்று நாசா விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது. அதாவது, இதுபோன்ற பயணத்தின்போது விண்கலம் வெடித்து உயிரிழந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவின் மரணமே தற்போது சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பழுதுபட்ட விண்கலத்தில் அழைத்து வர வேண்டாம் என்ற முடிவை நாசா எடுக்க காரணமாக அமைத்துள்ளது.

     

    இதனாலேயே இன்னும் 8 மாதங்கள் கழித்து அடுத்த வருடம் பிப்ரவரியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வரும் முடிவுக்கு நாசாவை தள்ளியுள்ளது. கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்துள்ளோம் என்ற நாசாவைச் சேர்ந்த பில் நெல்சனின் கூற்று இதை உறுதிப்படுத்துகிறது. கடந்த 2003ஆம் ஆண்டு நாசா சார்பில் விண்வெளி ஆராய்ச்சி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் போது விண்கலம் வெடித்து சிதறியதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    நியூயார்க்:

    நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போண்ணா-ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, ஸ்பெயினின் ராபர்ட் கார்பெலஸ்-அர்ஜென்டினாவின் பெடரிகோ கோரியா ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

    இதேபோல் கலப்பு இரட்டைய பிரிவி இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி, நெதர்லாந்தின் டெமி சர்ஸ்-ஜெர்மன் வீரர் டிம் புட்ஸ் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 7-6 (9-7), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

    • கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும்

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார்.

    இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மிச்சிகனில் நடந்த குடியரசுக் கட்சியின் பேரணியில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், "அமெரிக்காவிற்கு அதிக குழந்தைகள் வேண்டும். நான் 2 ஆவது முறையாக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

    மேலும், இந்த திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை அரசு அல்லது மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

    செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும் நிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    ×