என் மலர்
அமெரிக்கா
- நியூயார்க்கில் உள்ள எக்கனாமிக் கிளப்பில் இதுகுறித்து பேசிய டிரம்ப் உரையாற்றினார்
- இது நிச்சயம் அவசியமான ஒன்று என்று எலான் மஸ்க்கும் எக்சில் ஆமோதித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வேட்பளராக களம் காண்கிறார். அமரிக்கா மாகாணங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் டிரம்ப் தொழிலதிபர் எலான் மஸ்கின் அறிவுத்திறன் குறித்து புகழ்ந்து பேசினார். மேலும் மஸ்க் விருப்பப்பட்டால், தான் அதிபர் தேர்தலில் வென்றதும் அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எலான் மஸ்க்கிற்கு அளிக்க உள்ள பதிவை குறித்து டிரம்ப் பேசியிருக்கிறார். நியூயார்க்கில் உள்ள எக்கனாமிக் கிளப்பில் இதுகுறித்து பேசிய டிரம்ப், தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானதும், புதிதாக கமிஷன் ஒன்றை அமைத்து பெடரல் அரசாங்கத்தைச் சேர்ந்த அனைவரின் நிதி பரிவர்த்தனைகளை ஆராய்ந்து 6 ஏ மாதங்களில் அவற்றில் நடந்துள்ள மோசடிகள் கண்டறியப்படும். 2022-ம் ஆண்டு நடந்த பல மோசடி மற்றும் முறையற்ற பரிவர்த்தனைகளால் நேர்மையாக வரி கட்டுபவர்கள் பல நூறு பில்லியன் டாலர்கள் வரியாக செலுத்த நேர்ந்தது.
எனவே நான் பதிவிற்கு வந்ததும் புதிய கமிஷன் அமைத்து அதற்கு எலான் மஸ்க்கை தலைவராக நியமிப்பேன். தலைவர் பதவியை ஏற்க அவரும் [எலான் மஸ்க்கும்] ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார். இது நிச்சயம் அவசியமான ஒன்று என்று எலான் மஸ்க்கும் எக்சில் ஆமோதித்துள்ளார்.
முன்னதாக 2008 and 2012 காலகட்டம்வரை பராக் ஒபாமாவுக்கு, 2016 இல் ஹிலாரி கிளிண்டனுக்கும், 2020 இல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024 இல் டிரம்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் சாரா எர்ரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, அமெரிக்காவின் டொனால்ட் யங்-டெய்லர் டவுன்செண்ட் ஜோடியுடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி ஜோடி 7-6 (7-0), 7-5 என்ற செட் கணக்கில் வென்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.
- வழக்கறிஞர்கள் மற்றும் அதிபர் பைடனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
- ஹண்டர் பைடனுக்கு அதிகபட்சம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டார். ஹண்டர் பைடனின் இந்த செயல், அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மற்றும் அதிபர் பைடனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
54 வயதான ஹண்டர் பைடன் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1.4 மில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். குற்றத்தை ஒப்புக் கொண்டால் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கும் சூழல் உருவாகலாம் என்று ஹண்டர் பைடன் இவ்வாறு செய்ததாக தெரிகிறது.
அமெரிக்க மாவட்ட நீதிபதி மார்க் ஸ்கார்சி வழக்கில் டிசம்பர் 16 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் ஹண்டர் பைடனுக்கு அதிகபட்சம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்படலாம்.
- ரஷியா சென்ற நிலையில் பிரதமர் மோடி உக்ரைன் சென்று ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
- உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்ப்பு.
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் செய்து வருகின்றன. அமெரிக்காவும் உதவி வருகிறது. இதனால் ரஷியாவிடம் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இந்த நாடுகளால் பேச முடியவில்லை.
சீனா ரஷியாவுடன் இணக்கமாக உள்ளது. இருந்தபோதிலும் பேச்சுவார்த்தை என வரும்போது விலகி நிற்கிறது. இந்தியா உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் நட்பு நாடாக விளங்குகிறது. சமீபத்தில் ரஷியாவிற்கு சென்ற பிரதமர் மோடி, உக்ரைனுக்கும் சென்றார்.
இதனால் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும் என உலக நாடுகள் நம்புகின்றன.
இந்த நிலையில் பிரதமர் மோடி ரஷியா, உக்ரைன், போலந்து சுற்றுப் பயணத்தை முடிக்கு கொண்டு இந்தியா திரும்பிய நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியிடம் டெலிபோனில் பேசினார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு தகவல் தொடர்பு ஆலோசகர் ஜான் கெர்பியிடம், இந்தியாவால் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என ஜோ பைடன் நினைத்து போன் செய்தாரா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஜான் கெர்பி "ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சிறப்புரிமைகள், உக்ரைன் மக்களின் சிறப்புரிமைகள், நியாயமான அமைதிக்கான அவரது (ஜெலன்ஸ்கி) திட்டத்திற்கு இணங்க, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவுவதற்கு எந்த நாடும் தயாராக இருந்தால், அத்தகைய பங்கை நாங்கள் நிச்சயமாக வரவேற்போம். இந்திய முக்கிய பங்கு வகிக்கும் என நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.
- உயிரிழந்தவர்களில் 2 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
- படுகாயம் அடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் 2 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் என அடையாளம் காணப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். போலீசார் விசாரணையில் 4 பேரை சுட்டுக்கொன்றவர் 14 வயது மாணவர் என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இப்போது நடந்துள்ள சம்பவத்தில் சிறுவனே கொலைகாரனாக மாறி இருப்பது பெரும் வேதனை அளிப்பதாக, அந்நாட்டு கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதன் காலிறுதி சுற்றில் சபலென்கா வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் குய்ன்வென் ஷெங் உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை மறுநாள் நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா இங்கிலாந்து வீரர் எம்மா நவாரோவை எதிர்கொள்கிறார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
நியூயார்க்:
நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி, அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட்-டொனால்ட் யங் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
- இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- கருத்துக்கணிப்புகளில் டிரம்பைவிட கமலா ஹாரிஸ் முன்னிலை
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
ஜனநா யக கட்சி சார்பில் தற்போ தைய துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் டிரம்பைவிட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்திய கருத்துக்கணிப்பில் இரு வரும் இடையே சிறிய அளவில்தான் வித்தியாசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறும்போது, கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் சில விகிதங்களில் முன்னேறி வந்தாலும் தொடக்கம் முதலே டிரம்ப் சராசரியாக 47 சதவீத ஆதரவுடன் உறுதியான இடத்தில் இருந்து வருகிறார்.
கிராமப்புறங்கள் அதிகம் உள்ள, மத உணா்வு அதிகம் கொண்ட, நிற சகிப்புத் தன்மை இல்லாத, வெள்ளை இன உழைக்கும் மக்கள் அதிகம் நிறைந்த மாகாணங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சிதான் வெற்றி பெறும்.
நகா்ப்புறமான, பன்முகத்தன்மையை போற்றுவோா், கல்லூரி பட்டதாரிகளை அதிகம் கொண்ட மாகாணங்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக உள்ளன.
ஆனால் நகரங்கள், கிராமங்கள் இரண்டும் நிறைந்த, இரு வகை மக்களும் வாழும் பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின், ஜாா்ஜியா, வடக்கு கரோலினா, அரிசோனா, நவாடா போன்ற மாகாணங்கள் எந்த தோ்தலில் எந்த கட்சிக்கு வாக்களிக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. இந்த மாகாணங்கள்தான் அமெரிக்க அதிபரை முடிவு செய்பவை களாக உள்ளன.
ப்ளூம்பா்க்-மாா்னிங் கன்சல்ட் கணிப்புகளில், கமலா ஹாரிஸ் ஒரே ஒரு மாகாணத்தில் அதிக முன்னிலையும் நான்கு மாகாணங்களில் 49-லிருந்து 51 சதவீதம் வரையிலான முன்னிலையும் வகிக்கிறாா். இரு மாகாணங்களில் டிரம்ப்புடன் சமன் செய்கிறாா்.
வால் ஸ்ட்ரீட் ஜா்னல், கினிபியாக், சபோல்க்-யு.எஸ்.ஏ. டுடே போன்றவற்றின் கருத்துக்கணிப்புகளிலும் 48 முதல் 49 சதவீத ஆதரவுடன் கமலா ஹாரிஸ் முன்னிலை வகிக்கிறாா். 43 முதல் 48 சதவீத ஆதரவுடன் டிரம்ப் சற்று பின்தங்கி உள்ளாா்.
அமெரிக்க தோ்தலில் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அதிபா்கள் தோ்ந்தெடுக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மாகாண மக்கள்தொகையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள தோ்வுக் குழுக்கள் தான் அதிபரைத் தோ்ந்தெடுக்கும். மொத்தமுள்ள 538 தோ்வுக் குழுக்களில் 270 குழுக்களின் ஆதரவைப் பெறுபவா்தான் வெற்றி பெறுவாா்.
அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் சிறிய மாற்றம் ஏற்பட்டால்கூட அது தோ்தல் முடிவுகளைப் பெரிதும் பாதிக்கும். தற்போதைய கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்தாலும், போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.
இவ்வாறு அவா்கள் தெரிவித்தனர்.
- டெக்சாஸ் மாகாணத்திலிருந்து அர்கான்சாசில் [Arkansas] உள்ள பெண்டான்வில்லி நோக்கி SUV காரில் பயணித்தபோது இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.
- நால்வரின் உடல்களும் தீயில் கருகின. எனவே உயிரிழந்தவர்களின் அடையாளங்களைக் கண்டறிய முடியாமல் இருந்தது
அமெரிக்காவில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் ஒரு பெண் உட்பட 4 இளம் இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்ஷினி வாசுதேவன், ஐதராபாத்தைச் சேர்ந்த ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி, பரூக் ஷேக், லோகேஷ் பலசார்லா ஆகியோர் டெக்சாஸ் மாகாணத்திலிருந்து அர்கான்சாசில் [Arkansas] உள்ள பெண்டான்வில்லி நோக்கி SUV காரில் பயணித்தபோது இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணம் காலின்ஸ் கவுன்டி பகுதியில் அன்னா நகரில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த காரின் பின்புறம் லாரி ஒன்று மோதியது. இதில் கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
அந்த கார் மீது பின்னால் வந்த 4 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் இருந்த 4 பேரால் வெளியே வரமுடிய வில்லை. அவர்கள் காருக் குள்ளே கருகி பலியானார்கள். உடல்கள் தீயில் கருகியதால் உயிரிழந்தவர்களின் அடையாளங்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நால்வருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாத நிலையில்இவர்கள் 4 பேரும் கார்பூ லிங் செல்போன் செயலி மூலம் காரை வாடகைக்கு எடுத்து சென்றபோது விபத் தில் சிக்கினர்.
carpooling நிறுவன தரவுகளின் மூலமும் அவர்களின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தர்ஷினி வாசுதேவன், ஆர்லிங்டனிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவர் பென்டன்வில்லில் உள்ள தனது உறவினரை பார்க்க சென்று கொண்டிருந்தார். ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி டல்லாஸில் உள்ள தனது உறவினரைப் பார்த்துவிட்டு நண்பர் ஷேக்குடன் திரும்பிக் கொண்டிருந்தார்.
லோகேஷ் பலச்சார்லா தனது மனைவியைச் சந்திப் பதற்காக பென்டன்வில் லுக்குச் சென்று கொண்டி ருந்தார். அப்போது கோர விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் முழுவதும் கருகி சாம்பலாகி உள்ளதால் மரபணு சோதனை மூலம் உடலை அடையாளம் காணும் பணி களை போலீசார் நடத்த உள்ளனர். அவர்களது உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் உதவியை பெற்றோர் நாடியுள்ளனர்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
நியூயார்க்:
நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி, செக் நாட்டின் பார்பரா பிரெஜ்சிகோவா-ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-4), 2-6, 10-7 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
- ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணித்தார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க சுற்றுப்பயணத்தில் ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியாரின் 'இனிவரும் உலகம்' புத்தகத்தில் உள்ள கருத்தோடு தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், "இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை" என்று பதிவிட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
- உழைப்பாலும் - அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக்கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்.
சென்னை:
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தமிழர்களை சந்தித்தது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,
அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள்!
தங்களது உழைப்பாலும் - அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்! என்று தெரிவித்துள்ளார்.






