என் மலர்tooltip icon

    உலகம்

    ஸ்விங் மாகாணமான ஜார்ஜியாவில் டொனால்டு டிரம்ப் முன்னிலை
    X

    ஸ்விங் மாகாணமான ஜார்ஜியாவில் டொனால்டு டிரம்ப் முன்னிலை

    • டொனால்டு டிரம்ப் 14,16,193 வாக்குகள் (55.3 சதவீதம்) பெற்றுள்ளார்.
    • கமலா ஹாரிஸ் 1,128,043 (44.1 சதவீதம்) வாக்குகள் பெற்றுள்ளனர்.

    அமெரிக்கா அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்த கையோடு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து அதிகமான மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார்.

    அமெரிக்காவில் பல மாகாணங்கள் குடியரசு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கும். இவைகள் ரெட் ஸ்டேட்ஸ் (States) என அழைக்கப்படும். அதேபோல் பல மாகாணங்கள் ஜனநாக கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கும். இவைகள் க்ரீன் ஸ்டேட்ஸ் (States) என அழைக்கப்படும்.

    அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் இந்த ஏழு மாகாணங்கள் மாறிமாறி வாக்களிக்கும். இதனால் ஸ்விங் ஸ்டேட்ஸ் என அழைக்கப்படுகின்றன. இங்கு அதிக வாக்குகள் பெறுவர்கள்தான் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார். 47 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டதில் டொனால்டு டிரம்ப் 14,16,193 வாக்குகள் (55.3 சதவீதம்), கமலா ஹாரிஸ் 1,128,043 (44.1 சதவீதம்) வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    Next Story
    ×