என் மலர்
உலகம்

பென்சில்வேனியாவில் கமலா ஹாரிஸை பின்னுக்கு தள்ளி டொனால்டு டிரம்ப் முன்னிலை
- டொனால்டு டிரம்ப் 26,42,585 வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.
- கமலா ஹாரிஸ் 24,42,560 வாக்குகள் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் இன்று காலை 5.30 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் இருந்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார்.
காலை 9 மணி நிலவரப்படி டொனல்டு டிரம்ப் 214 எலக்டோரல் வாக்குகளும், கமலா ஹாரிஸ் 113 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
வெற்றி தீர்மானிக்கக் கூடியதாக ஸிவிங் என அழைக்கப்படும் ஏழு மாகாணங்கள் திகழ்கிறது. இதில் பென்சில்வேனியா மாகாணமும் ஒன்று இந்த மாகாணத்தில் முதலில் கமலா ஹாரிஸ் சுமார் 60 சதவீதம் வாக்குள் பெற்று முன்னிலை பெற்றிருந்தார்.
ஆனால் நேரம் செல்ல செல்ல டொனால்டு டிரம்ப் அவரை முந்தினார். இந்திய நேரப்படி காலை 9.45 மணி நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 26,42,585 (51.3 சதவீதம்) வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 24,42,560 (47.8 சதவீதம்) வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
73 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இருவருக்கும் இடையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த மாகாணத்தில் 19 எலக்டோரல் வாக்குகள் உள்ளன.






