என் மலர்tooltip icon

    ஜெர்மனி

    • முதல் பாதியில் ஸ்பெயின் 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    • 69வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

    ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது.

    ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின்- போர்ச்சுகல் அணிகள் மோதின.

    வலுவான ஸ்பெயின் அணி பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.

    ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோலை பதிவு செய்தது. மார்ட்டின் ஜூபி மெண்டி இந்த கோலை அடித்தார். போர்ச்சுகல் வீரர் நுனோ மென்டிஸ் 26-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து சமன் செய்தார். 45-வது நிமிடத்தில் மைக் கேல் ஒயர்சபல் ஸ்பெயின் அணிக்காக 2-வது கோலை அடித்தார். இதன் மூலம் ஸ்பெயின் 2-1 என்ற கணக் கில் முன்னிலை பெற்றது.

    61-வது நிமிடத்தில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ கோல் அடித்து சமன்செய்தார். சர்வதேச அளவில் அவரது 138-வது கோலாகும். இதன் மூலம் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது. கூடுதல் நேரத்திலும் வெற்றிக்கான கோலை இரு அணிகளாலும் அடிக்க முடியவில்லை.

    இதை தொடர்ந்து சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் வகையில் பெனால்டி ஷூட்-அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் 5 வாய்ப்புகளிலும் போர்ச்சுக்கல் கோல் அடித்தது. ஸ்பெயின் அணி 3 கோல்களை பதிவு செய்தது. இதனால் போர்ச்சுக்கல் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி 2-வது முறையாக இந்த பட்டத்தை வென்றது.

    • 3வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் தொடங்குகிறது.
    • இந்திய அணியில் மொத்தம் 36 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள்.

    முனீச்:

    3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் இன்று தொடங்கி 14-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    குறிப்பாக ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்களான சீனாவின் லி யுஹோங், 20 வயதான ஷெங் லிஹாவ், ஸி யு உள்ளிட்ட ஜாம்பவான்கள் களம் காண்கின்றனர்.

    இந்திய அணியில் மொத்தம் 36 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களில் பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கர், வெண்கலம் கைப்பற்றிய சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசாலே ஆகியோரும் அடங்குவர்.

    ஒலிம்பிக்கில் இரண்டு முறை கலந்துகொண்டவரான தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இளவேனில் மற்றும் தேசிய சாம்பியன் அனன்யா நாயுடு (பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள்), ஆதித்யா மால்ரா, நிஷாந்த் ரவாத் (ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல்) ஆகியோர் முதல் முறையாக உலக போட்டியில் அடியெடுத்து வைக்கிறார்கள்.

    பியூனஸ் அயர்சில் நடந்த முதலாவது சீசனில் இந்தியா 4 தங்கம் உள்பட 8 பதக்கமும், லிமாவில் நடந்த 2-வது சீசனில் இந்தியா 7 பதக்கமும் அறுவடை செய்தது.

    ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த மனு பாக்கர் உலக போட்டியிலும் சாதிப்பாரா என ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

    • காசாவுக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர்.
    • அதன் ஒருபகுதியாக, இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதலும் நடத்துகின்றனர்.

    பெர்லின்:

    இஸ்ரேல்-காசா போரில் காசாவுக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர்.

    அதன் ஒருபகுதியாக, இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதலும் நடத்துகின்றனர். எனவே ஏமன், லெபனானுக்கு எதிராகவும் இஸ்ரேல் போரை அறிவித்தது.

    இதற்கிடையே, கடந்த மாதம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் அங்குள்ள வாகன நிறுத்துமிடம் தீப்பிடித்து 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி ஜெர்மனி-டெல் அவிவ் இடையிலான விமான சேவை நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், வரும் 23-ம் தேதி முதல் டெல் அவிவ் நகருக்கு விமான சேவையை தொடங்க உள்ளதாக ஜெர்மனியின் லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    • ஜெர்மனியில் நடுவானில் சென்றபோது விமானம் குலுங்கியது.
    • இதனால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    பெர்லின்:

    ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து ரியானேர் என்ற விமானம் புறப்பட்டது. இத்தாலியின் மிலன் நகருக்குச் சென்ற அந்த விமானத்தில் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் இருந்தனர்.

    நடுவானில் சென்றபோது பலத்த புயல் காற்று வீசியது. அப்போது விமானம் பயங்கரமாக குலுங்கியதால் பயணிகள் இருக்கை மீது மோதினர்

    இதனால் பீதியடைந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். இதனையடுத்து, விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது விமானத்தை உடனடியாக தரையிறக்க விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி பவேரியாவின் மெம்மிங்கன் விமான நிலையம் அருகே விமானம் வட்டமிட்டது. பின்னர் விமானியின் சாமர்த்தியத்தால் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் 185 பேரும் உயிர் தப்பினர்.

    இந்தச் சம்பவத்தில் பணியாளர் உள்பட 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    இதனையடுத்து பவேரியா விமான நிலையத்தில் இருந்து விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டது. எனவே பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • அமெரிக்காவிற்குப் பிறகு உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக ஜெர்மனி உள்ளது.
    • மூன்று வாரங்களுக்கு முன்பு ஜெர்மனியின் தலைவராக மெர்ஸ் பொறுப்பேற்றார்.

    ரஷியவாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவைத் தேடும் வகையில் ஜெலென்ஸ்கி ஜெர்மனிக்கு சென்றுள்ளார்.

    போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தலைமையில் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனாலும் ரஷியாவின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் உக்ரைனுக்கு மேலும் இராணுவ ஆதரவை பெறும் வகையில் இன்று ஜெலன்ஸ்கி ஜெர்மனி சென்றார். அங்கு தலைநகர் பெர்லினில் புதிய ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸை சந்திக்கிறார்.

    அமெரிக்காவிற்குப் பிறகு உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக ஜெர்மனி உள்ளது. உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்களுக்கு ஜெர்மனியும் பிற முக்கிய நட்பு நாடுகளும் இனி எந்த வரம்பு கட்டுப்பாடுகளையும் விதிக்கபோவதில்லை என்று மெர்ஸ் திங்களன்று கூறினார்.

    மூன்று வாரங்களுக்கு முன்பு ஜெர்மனியின் தலைவராக மெர்ஸ் பொறுப்பேற்றதில் இருந்து மெர்ஸ், போர்நிறுத்தத்தைப் கொண்டுவரவும், உக்ரைனுக்கு மேற்கத்திய ஆதரவை அதிகரிக்கவும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    • ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடந்தது.
    • ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் இறுதிப்போட்டியில் தோற்றார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

    இதன் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலியின் பிளாவியோ கோபோலி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய கோபோலி ஸ்வரேவை 6-2, 6-4 என எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    • அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது.
    • இது தொடர்பாக யாருக்கும் எந்தவிதமான தவறான எண்ணங்களும் இருக்கக்கூடாது.

    இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருப்பதாகக் தெரிவித்துள்ளார்.

    ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புவிசார் அரசியல், புவி பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப (டிஜிஏபி) மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பேசிய ஜெய்சங்கர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

    பஹல்காம் தாக்குதலின் முக்கிய நோக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதும், காஷ்மீரில் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையை சேதப்படுத்துவதும், நாட்டில் வகுப்புவாத மோதல்களைத் தூண்டுவதும் ஆகும் என்று தெரிவித்தார்.

    மேலும், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது, அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது. பயங்கரவாதத்தை அரசு ஆதரவு கொள்கையாகப் பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்று கூறினார்.

    தொடர்ந்து பாகிஸ்தானுடனான விவகாரங்களில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு இடமில்லை என்றும் இது தொடர்பாக யாருக்கும் எந்தவிதமான தவறான எண்ணங்களும் இருக்கக்கூடாது என்றும் போர் நிறுத்தத்தில் அதிபர் டிரம்ப் தலையீட்டை மறுத்தார்.

    • ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது.
    • காயம் அடைந்தவர்களின் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    முனீச்:

    ஜெர்மனியின் ஹம்பர்க் ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. ரெயிலுக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் கத்தியால் தாக்கியுள்ளார்.

    இந்தத் தாக்குதலில் 17 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கத்தியால் தாக்கியவரை அங்கிருந்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    தாக்குதல் நடத்தியதன் நோக்கம், அவரது பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது.
    • இதில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது.

    இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-1, 6-4 என எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதியில் இத்தாலியின் பிலேவியோ கோபாலி உடன் ரூப்லெவ் மோதுகிறார்.

    • ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி ஜோஹன் வெல்பலை ஜெய்சங்கர் சந்தித்தார்.
    • இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது.

    பெர்லின்:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசுமுறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். அதன்படி, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளுக்கு சென்ற ஜெய்சங்கர் ஜெர்மனிக்குச் சென்றார்.

    அவர் ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி ஜோஹன் வெல்பலை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, பஹல்காம் தாக்குதல், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி ஜோஹன் கூறுகையில், ஏப்ரல் 22-ம் தேதி இந்தியாவில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலால் நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். இரு நாடுகள் இடையேயான ராணுவ தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்ள இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளது. அதை நாங்கள் ஆதரிக்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையே தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

    • ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது.
    • இதில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் காலிறுதியில் வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது.

    இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலியின் லூசியானோ டர்டேரி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-1, 3-6, 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் ரூப்லெவ் மோதுகிறார்.

    • ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியின் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டிகள் நேற்று நடந்தது. இதில் பெலாரஸ் வீராங்கனையான அரினா சபலென்கா, இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-5, 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோ 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    ×