என் மலர்
நீங்கள் தேடியது "சிப்ட் கவுர் சம்ரா"
- 3-வது உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா வெண்கலப் பதக்கம் வென்றார்.
முனீச்:
3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் வரும் 14-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்திய அணியில் மொத்தம் 36 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள்.
தமிழகத்தைப் பூர்விகமாக கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
25 மீட்டர் பிஸ்டல் பெண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் மனு பாக்கர் 6வது இடம்பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில், பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். நடப்பு தொடரில் இந்திய அணி 2 பதக்கங்கள் வென்றுள்ளது.






