என் மலர்tooltip icon

    சீனா

    • தலாய் லாமாவின் 90வது பிறந்தநாள் அவர் தங்கியிருக்கும் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்றது.
    • தலாய் லாமாவை தேர்தெடுக்கும் அதிகாரம் தங்கள் அறக்கட்டளைக்கே உள்ளது என்று தெரிவித்தார்.

    திபெத்திய பௌத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்ததற்கும், பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட இந்திய பிரமுகர்கள் பங்கேற்றதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    திபெத்திய பிரச்சினைகளில் இந்தியா தனது சிறப்பு நலன்களை மனதில் கொள்ள வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.

    இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். "மதத்தின் பெயரால் திபெத்தின் மீதான சீனாவின் இறையாண்மையை பறிக்க தலாய் லாமாவின் முயற்சிகள் உள்ளன. இந்தியா தனது உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்.

    முன்னதாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள தலாய் லாமாவின் 90வது பிறந்தநாள் அவர் தங்கியிருக்கும் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்றது.

    இதன்முன், அடுத்த தலாய் லாமாவை தேர்தெடுக்கும் அதிகாரம் தங்கள் அறக்கட்டளைக்கே உள்ளது என்றும் வேறு எவரின் தலையீடும் இருக்க கூடாது எனவும் தலாய் லாமா வெளியிட்ட அறிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பிரிக்ஸ் மாநாடு பிரேசிலில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
    • பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க கொள்கைக்கு எதிரான குரூப் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது பிரிக்ஸ் அமைப்பு. கடந்த வருடம் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஆகியவை இணைந்தன. இந்த வருடம் இந்தோனேசியா இணைந்துள்ளது.

    பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு நேற்றும் இன்றும் பிரேசில் நடைபெற்றது. பிரேசில் மாநாடு நடைபெற்று கொண்டிருக்கும்போது, பிரிக்ஸ் அமைப்பை, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என அழைத்த டொனால்டு டிரம்ப், பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்த நாடும், கூடுதல் 10 சதவீதம் வரி விதிப்பை எதிர்கொள்ளும் என மிரட்டல் விடுத்திருந்தார்.

    இந்த நிலையில் பிரிக்ஸ் மோதலுக்கான அமைப்பு அல்ல. வளர்ந்து வரும் சந்தைகள், வளர்ந்து வருடம் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான முக்கியமான தளம். வர்த்தக போர் மற்றம் வரி விதிப்பு போர் வெற்றியார்கள் இல்லை என சீனா தெரிவித்துள்ளது.

    • லாங் என்ற முதியவர், குவாங்டாங் மாகாணத்தில் தனியாக வசித்து வருகிறார்.
    • லாங், தனது துணைக்கு சியான்பா என்ற பூனையை வளர்த்து வருகிறார்.

    சீனாவைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர், தான் இறந்த பிறகு தனது பூனையைப் பராமரிக்க விரும்புவோருக்கு தனது முழு சொத்தையும் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார்.

    லாங் என்ற முதியவர், குவாங்டாங் மாகாணத்தில் தனியாக வசித்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி உயிரிழந்த நிலையில், குழந்தைகள் இல்லாத லாங், தனது துணைக்கு 4 தெரு பூனைகளை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார்.

    இந்த 4 பூனைகளில் சியான்பா என்ற பூனை மட்டுமே இன்னும் அவருடன் உள்ளது. தான் உயிரிழந்த பிறகு இந்த பூனையை யார் பார்த்துக்கொள்வது என்று கவலைப்பட்ட லாங், சியான்பாவை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்ள கூடிய நபரை தேடி வருகிறார்.

    இந்நிலையில், அவரது பூனையை பத்திரமாக பார்த்து கொள்பவருக்கு தனது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சேமிப்புகள் உட்பட தனது முழு எஸ்டேட்டையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

    • இந்தியா-சீனா சிறப்புப் பிரதிநிதிகளின் 23 சுற்றுப் பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகும் தீா்வு எட்டப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
    • இரு நாடுகளும் ஏற்கனவே முழுமையான தகவல்தொடர்புக்கான பல்வேறு மட்டங்களில் வழி முறைகளை நிறுவியுள்ளன.

    பீஜிங்:

    சீனாவில் சமீபத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங், சீன மந்திரி டோங் ஜூனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது எல்லை பிரச்சினையை தீர்க்கவும், இரு நாட்டு உறவை மேம்படுத்தவும் 4 அம்ச திட்டங்களை ராஜ்நாத்சிங் பரிந்துரைத்தார்.

    இந்த நிலையில் இந்தியாவுடன் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

    எல்லை நிா்ணயம் மற்றும் மேலாண்மை தொடா்பாக இந்தியாவுடன் தொடா்ந்து பேச்சுவார்த்தைக்கு சீனா எப்போதும் தயாராக உள்ளது. இதன்மூலம் இரு தரப்பும் சோ்ந்து எல்லையில் அமைதியை உறுதிப்படுத்தவும், எல்லைத் தாண்டிய ஒத்துழைப்புகளை ஊக்குவிக்கவும் முடியும். இந்தியா-சீனா சிறப்புப் பிரதிநிதிகளின் 23 சுற்றுப் பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகும் தீா்வு எட்டப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

    சீனா-இந்தியா இடையேயான எல்லைப் பிரச்சினை சிக்கலானது. அதைத் தீர்க்க நேரம் எடுக்கும். இதில் முன்னேற்றம் என்னவென்றால் இரு நாடுகளும் ஏற்கனவே முழுமையான தகவல்தொடர்புக்கான பல்வேறு மட்டங்களில் வழி முறைகளை நிறுவியுள்ளன.

    எல்லையில் அமைதியைப் பேண இரு நாடுகளும் ஒரே திசையில் செயல்பட்டு, தொடா்ந்து தொடா்பில் இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோ தலைத் தொடா்ந்து இரு தரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷாங்காய் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டுக்காக ராஜ்நாத் சிங் சீனா சென்றார்.
    • பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனர்.

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் பற்றி குறிப்பிடாததால், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டு அறிக்கையில் கையெழுத்திட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார்.

    ஷாங்காய் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டுக்காக ராஜ்நாத் சிங் சீனா சென்றுள்ள நிலையில் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கவலைகள் வெளிப்படையாகக் கவனிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் அவர் கையெழுத்திட மறுத்துள்ளார்.

    ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுத்ததைத் தொடர்ந்து, சீனாவில் நடைபெற்ற S.C.O. பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நேற்றுடன் கூட்டு அறிக்கை இல்லாமல் முடிந்தது.

    மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், "பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிப்பதாகக் கூறினார். பயங்கரவாதிகள், அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் நிதி வழங்குபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்தியா தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு.

    பயங்கரவாதத்தின் மையங்கள் இனி பாதுகாப்பாக இல்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். அவற்றை குறிவைக்க இனி தயங்க மாட்டோம்" என்று கூறினார்.

    பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனர். 

    • சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கொள்கையின் கருவியாகப் பயன்படுத்துகின்றன.
    • பாதுகாப்பு, நம்பிக்கை ஆகியவற்றில் நிலவும் பற்றாக்குறை மிகப்பெரிய சவால்களாக உள்ளன.

    பீஜிங்:

    இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், கிர்கஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு, சீனாவின் கிங்டாவோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்றார். இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து ராஜ்நாத்சிங் பேசினார். அவர் கூறியதாவது:-

    சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கொள்கையின் கருவியாகப் பயன்படுத்துகின்றன. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கின்றன. அத்தகைய நாடுகளை விமர்சிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தயங்கக்கூடாது. பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பினர்கள் பயங்கரவாதத்தை கண்டிக்க வேண்டும்.

    காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் வடிவம் இந்தியாவில் லஷ்கர்-இ-தொய்பாவின் முந்தைய பயங்கரவாதத் தாக்குதல்களுடன் ஒத்துப்போகிறது. மத அடையாளத்தின் அடிப்படையில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றது.

    பயங்கரவாதத்திற்கு எதிராகவும், எல்லை தாண்டிய பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தகர்க்கவும் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தியது. இந்தியா தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், குற்றவாளிகளைத் தண்டிக்கவும் உரிமை உண்டு.

    எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட கண்டிக்கத்தக்க பயங்கரவாதச் செயல்களுக்குக் காரணமானவர்கள், அமைப்பாளர்கள், நிதியளிப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களை பொறுப்பேற்க வைத்து அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    நமது பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நம்பிக்கை ஆகியவற்றில் நிலவும் பற்றாக்குறை மிகப்பெரிய சவால்களாக உள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கான மூல காரணம் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலில் உள்ளது. பயங்கரவாதத்துடனும், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பயங்கரவாதக் குழுக்களின் கைகளில் பேரழிவு ஆயுதங்களின் பெருக்கத்துடனும் அமைதியும் செழிப்பும் இணைந்து வாழ முடியாது. இந்த சவால்களைச் சமாளிப்பதற்கு தீர்க்கமான நடவடிக்கை தேவை ஆகும். நமது கூட்டுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இந்தத் தீமைகளுக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றுபட வேண்டும்.

    இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

    • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு சீனாவில் நடைபெறுகிறது.
    • இதில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சீனா சென்றுள்ளார்.

    பீஜிங்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

    இதற்கிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சீனா சென்றுள்ளார்.

    சீனாவின் சாண்டோங் மாகாணம் குயிங்தவோ நகரத்திற்கு விமானத்தில் சென்ற ராஜ்நாத் சிங்கை சீன அதிகாரிகள், இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.

    சீனா சென்றுள்ள ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

    • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு செயலாளர்கள் மாநாடு சீனாவில் நடந்து வருகிறது.
    • இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றுள்ளார்.

    பீஜிங்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு செயலாளர்கள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், சீனா சென்றுள்ள அஜித் தோவல் இன்று அந்நாட்டு துணை அதிபர் ஹன் யங்கை சந்தித்தார்.

    இந்தச் சந்திப்பின்போது பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்பட்டு பிராந்திய அமைதிக்கு நிலைநாட்டுவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

    • புலியின் உரோமம் தீய சக்திகளை அகற்றும் என சீனாவில் நம்பப்படுகிறது.
    • சுற்றுலா பயணிகளின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    சீனாவின் லியானிங் மாகாணத்தில் உயிரியல் பூங்காவில், ஓய்வெடுத்து கொண்டிருந்த புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலா பயணிகளின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    புலியின் உரோமம் தீய சக்திகளை அகற்றும் என அந்நாட்டில் நம்பப்படுவதால் சுற்றுலா பயணிகள் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதால் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என பூங்கா நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • விபத்து தொடர்பாக சர்வதேச தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • சீன பிரதமர் லி கியாங்கும் பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பி உள்ளார்.

    பீஜிங்:

    அகமதாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் உள்பட சுமார் 265 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்தியா மட்டுமின்றி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த விபத்து தொடர்பாக சர்வதேச தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜி ஜின்பிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சீன அரசு மற்றும் மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    மேலும், சீன பிரதமர் லீ கியாங்கும் பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.

    • அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் வரி விதித்தது.
    • இதனால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வெகுவாக குறைந்தது.

    டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக 2ஆவது முறை பதவி ஏற்றதும், அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உலக நாடுகள் குறைக்க வேண்டும். இல்லையென்றால் பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

    அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை அமல்படுத்தினார். பல்வேறு நாடுகள் கேட்டுக்கொண்டதன் விளைவாக 90 நாட்களுக்கு அந்த முடிவை நிறுத்தி வைத்துள்ளார். அதேளையில் சீனா பதில் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த வருடம் மே மாதம் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 35 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு மே மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சீனா அமெரிக்காவுக்கு ஏற்றமதி செய்திருந்தது. தற்போது கடந்த மாதம் இது 28.8 பில்லியன் அமெரிக்க டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. 10.8 பில்லியன் டாலர் வீழ்ச்சியடைந்துள்ளது.

    அதேவேளையில் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 12 சதவீதமாக இருந்தது. தற்போது 14.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியாவிற்கான ஏற்றுமதி குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகரித்துள்ளது. ஜெர்மனிக்கான ஏற்றுமதி 12 சதவீத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது மொத்த ஏற்றுமதி 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதி 3.4 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் வர்த்தக உபரி 103.2 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

    கடந்த வாரம் டொனால்டு டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பேசினார். அப்போது வர்த்தக பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.

    • ரசாயன தொழிற்சாலையில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் மாயமாகினர்.

    பீஜிங்:

    சீனாவின் ஷாண்டோங் மாகாணம் வெய்பாங் நகரில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் நேற்று மதியம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியது.

    தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.

    இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×