என் மலர்
சீனா
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தைவானின் சூ டின்-சென் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 21-18 என இந்திய வீரர் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட தைவான் வீரர் அடுத்த இரு செட்களை 21-15, 21-8 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.
- இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி,
இந்தோனேசியாவின் பகஸ் மவுலானா-கர்னாண்டோ ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-19, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் உன்னதி ஹூடா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மோர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-11, 21-16 என எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் உன்னதி ஹூடா, பி.வி.சிந்துவை எதிர்கொள்கிறார்.
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
- இதில் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் ஹிரோகி ஒகமுரா-கென்யா மிட்சுஹாஷி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-13, 21-9 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
- இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் டொமோகா மியாசகி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 21-15 என பி.வி.சிந்து கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ஆடிய ஜப்பான் வீராங்கனை 21-8 என 2வது செட்டை வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 21-17 என பி.வி.சிந்து வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
- இதில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
இந்திய வீரர்களில் எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென், வீராங்கனைகளில் பி.வி.சிந்து, அனுபமா உபாத்யாயா, உன்னதி ஹூடா ஆகியோர் ஒற்றையர் பிரிவுகளில் களம் கான்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, தைவானின் லீ சியாங் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 23-21 என அனுபமா உபாத்யாயா கைப்பற்றினார். இதில் சுதாரித்து ஆடிய தைவான் வீராங்கனை அடுத்த இரு செட்களை 21-11, 21-10 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதனால் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறினார்.
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
- இதில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் கான்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பானின் கோகி வடனாபே உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 21-8 என ஜப்பான் வீரர் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய எச்.எஸ்.பிரனாய் அடுத்த இரு செட்களை 21-16, 23-21 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு நட்சத்திர வீரரான இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
இந்திய வீரர்களில் எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென், வீராங்கனைகளில் பி.வி.சிந்து, அனுபமா உபாத்யயா, உன்னதி ஹூடா ஆகியோர் ஒற்றையர் பிரிவுகளில் களம் கான்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின்லீ ஷீபெங் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 21-14 என லக்ஷயா சென் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய சீன வீரர் அடுத்த இரு செட்களை 24-22, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதனால் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஏராளமான பொட்டலங்கள் பிரித்து பார்க்கப்படாமலே உள்ளது.
- பிரிக்கப்படாத பொருட்களை வைப்பதற்காக மற்றொரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து, வாங்கிய பொருட்களை குவித்து வைத்திருக்கிறார்.
இன்றைய இளையதலைமுறையினர், கடைக்கு சென்று பொருட்களை வாங்குவதைவிட ஆன்லைனில் விதவிதமான பொருட்களை வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இளம்பெண்கள், சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை காட்டியிருக்கிறது ஒரு சீன பாட்டியின் ஆன்லைன் ஷாப்பிங் பட்டியல். அவர் ஒரே ஆண்டில் ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கிக் குவித்து உள்ளது அனைவரையும் வியக்க வைத்து உள்ளது.
சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த வாங் என்ற 66 வயது பாட்டி தனியாக வசித்து வருகிறார். அவர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்து தனது பொழுதை கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். வீட்டில் எங்கு பார்த்தாலும் ஆன்லைனில் வாங்கப்பட்ட பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. ஏராளமான பொட்டலங்கள் பிரித்து பார்க்கப்படாமலே உள்ளது.
அப்படி பிரிக்கப்படாத பொருட்களை வைப்பதற்காக மற்றொரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து, வாங்கிய பொருட்களை குவித்து வைத்திருக்கிறார். பொட்டலங்கள் அடைத்து வைத்திருப்பதால் தங்கள் வீடுகளில் பூச்சித் தொல்லைகள் அதிகரித்து இருப்பதாகவும், சில பொருட்களில் இருந்து கெட்ட வாசனை வீசுவதாகவும் புகார்கள் தெரிவித்து வருகிறார்கள் அண்டை வீட்டார். இருந்தபோதிலும் பாட்டி பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்தவில்லை. பாட்டி குறித்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
- சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
- கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு சீன அதிபரை ஜெய்சங்கர் முதல் முறையாக சந்தித்தார்.
பீஜிங்:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார்.
இதற்கிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு சீன அதிபரை ஜெய்சங்கர் முதல் முறையாக சந்தித்துள்ளார்.
எஸ்சிஓ வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில், எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகளான சீனா, ரஷியா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள வெளியுறவு மந்திரிகள் கூட்டாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பின் ஜெய்சங்கர் சீனா செல்வது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா - சீனா வீரர்களிடம் மோதல் ஏற்பட்டது
- இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி மோதல் ஏற்பட்டது. சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் தடுத்த போது இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தனது தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். 2இதனையடுத்து நாடுகளின் எல்லைகளிலும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு முதல்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்-உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி சார்பாக நலம் விசாரித்து, இரு நாட்டு உறவை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- இப்படி பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம்.
- சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன காரணத்திற்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம் வெளிநாட்டினரை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கி வருகிறது.
இந்நிலையில், நமது அண்டை நாடான சீனாவும் புதிதாக 74 நாடுகள் விசா இன்றி அந்நாட்டிற்குள் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை.
இப்படி பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம். சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் வரும் 30-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் 2 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் சீனாவிற்கு வந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.






