என் மலர்
உலகம்
- அமெரிக்கா- தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி 11 நாட்கள் நடைபெற்றது.
- இந்த ராணுவ பயிற்சியை தங்களது நாட்டிற்கு எதிரான போர் ஒத்திகை என வடகொரியா பார்க்கிறது.
தென்கொரியா- அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன. இதை தங்களது நாட்டிற்கு எதிராக போர் தொடுப்பதற்கான ஒத்திகை என வடகொரியா கருதுகிறது.
இதனால் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது.
இன்று காலை 7.44 மணிக்கு இரண்டு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்திய நிலையில், 37 நிமிடங்கள் கழித்து மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பானை ஒட்டியுள்ள கடற்கரையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருவது அந்த நாட்டிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனையின்போது ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்திற்கும், ஜப்பான் கடல் பகுதிக்கும் இடையில் விழுகின்றன. இது அனைத்தும் ஜப்பான் பொருளாதார மண்டத்திற்கு வெளியில்தான் நடக்கிறது. இதனால் ஜப்பானுக்கு காயமோ, சேதமோ இல்லை என பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்திருந்தார்.
ஆனால், வடகொரியாவின் தொடர் சோதனை நாட்டின அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிரட்டல் என அவர் கூறவில்லை. அதேவேளையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறுவதாக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஏராளமான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்ததை கண்டறிந்துள்ளோம் என தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கு மிரட்டல் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உதவியுடன் எந்தவொரு ஆத்திரமூட்டும் செயலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 50 கி.மீட்டர் வேகத்தில் சென்று 300 முதல் 350 கி.மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
11 நாட்கள் கொண்ட அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி கடந்த வியாழக்கிழமை முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
- ரஷியாவை அதிக வருடங்கள் ஆண்ட அதிபர் என்ற பெருமையை பெறுகிறார்.
- சோவியத் ரஷியா உடைந்த பிறகு அதிக வாக்குகள் பெற்ற அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
ரஷியாவில் அதிபருக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. நேற்றுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும் வெற்றி பெற்றார்.
அவர் 87.8 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷியாவின் அதிபராக நீடிப்பார்.
இதன்மூலம் ரஷியா வரலாற்றில் அதிக வருடம் அதிபராக இருந்தவர் என்ற பெருமையை பெறுகிறார். இதற்கு முன்னதாக ஜோசப் ஸ்டாலின் ரஷியாவை அதிக வருடங்கள் ஆண்ட அதிபர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
மேலும், சோவியத் ரஷியா உடைந்த பிறகு அதிக வாக்குகள் பெற்ற அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக இரண்டு வருடங்கள் சண்டை நடைபெற்று வருவது, எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்தது உள்ளிட்ட சம்பவங்கள் புதினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் தாண்டிய புதின் வெற்றி பெற்றுள்ளார்.
ரஷியாவில் நடைபெற்ற தேர்தல் சுதந்திரமாக மற்றும் நியாயமாக நடைபெறவில்லை என அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது.
தேர்தல் நடைபெற்றபோது உக்ரைன் ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என புதின் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்களை போட்டியிடாமல் தடுத்தல், அடக்குமுறை என புதின் மேல் குற்றச்சாட்டு எழுந்த நிலையிலும் ரஷியா மக்கள் திரளாக திரண்டு அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தலைவர்களின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
- மூன்று ஆண்டுகளில் மானியங்கள் மற்றும் கடன்கள் இரண்டும் இந்த தொகுப்பில் அடங்கும்.
பொருளாதார அழுத்தம் மற்றும் மோதல்கள் மற்றும் அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் ஆகியவை ஐரோப்பியக் கரைகளுக்கு அதிக குடியேற்றங்களைத் தள்ளக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில் பணப் பற்றாக்குறை உள்ள எகிப்துக்கு 8 பில்லியன் டாலர் உதவிப் பொதியை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெனெ் மற்றும் பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரியா, சைப்ரஸ் மற்றும் கிரீஸ் தலைவர்களின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கெய்ரோவில் உள்ள ஐரோப்பிய யூனியன் மிஷன் படி, "அரபு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கான அடுத்த மூன்று ஆண்டுகளில் மானியங்கள் மற்றும் கடன்கள் இரண்டும் இந்த தொகுப்பில் அடங்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- பி.டி.ஐ. மற்றும் அரசு சாராத சில நிறுவனங்கள் தெரிவித்தன.
- அரசியலமைப்பின் 6-வது பிரிவின் கீழ் தேசத்துரோகத்திற்கு சமம்.
பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் நிறுவனரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கு விசாரணைக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், மக்கள் ஆணையை திருடிய அதிகாரிகள் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "முதலில் எங்களது கட்சி சின்னத்தை சதி செய்து முடக்கினர். தேர்தலுக்கு பிறகு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் பங்கு பறிக்கப்பட்டன. மக்களின் ஆணை திருடப்பட்டு இருப்பது அரசியலமைப்பின் 6-வது பிரிவின் கீழ் தேசத்துரோகத்திற்கு சமமானது."
"நடைபெற்று முடிந்த தேர்தலில் எனது கட்சியினர் மட்டும் மூன்று கோடி வாக்குகளை பெற்றனர். இதே வாக்குகளை தேர்தலை சந்தித்த மற்ற 17 கட்சிகளும் கூட்டாக பெற்றன. தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை பி.டி.ஐ. மற்றும் அரசு சாராத சில நிறுவனங்கள் தெரிவித்தன."
"தேசிய சபை மற்றும் மாகாண சபைகளுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து பெஷாவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். பி.டி.ஐ. கட்சி இடங்களை தேர்தல் ஆணையம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்க முடியாது," என்று தெரிவித்தார்.
- குழந்தையின் பின்புறம் வால் இருக்கும் வீடியோவை மருத்துவர் லி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்
- குழந்தையின் பின்புறம் இருக்கும் வாலை அகற்றுமாறு குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தனர்
சீனாவில் பிறந்த ஆண் குழந்தைக்கு 10 செ.மீ அளவில் வால் இருந்ததால் மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
Tethered Spinal Cord என சொல்லப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் எனவும், இதில் எவ்வித அசைவும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் பின்புறம் வால் இருக்கும் வீடியோவை மருத்துவர் லி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
குழந்தையின் பின்புறம் இருக்கும் வாலை அகற்றுமாறு குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த வால் நரம்பு மண்டலத்துடன் இணைந்து உள்ளதால், அறுவை சிகிக்சை செய்து வாலை அகற்றினால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும், எனவே வாலை நீக்க முடியாது என மருத்துவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, கயானா நாட்டில், கடந்த வருடம் ஜூன் மாதம் பிறந்த ஒரு குழந்தைக்கு வால் இருந்துள்ளது. பிறந்து 10 நாட்களே ஆன அந்த குழந்தையின் வாலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
- ஓஹியோ மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே, அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்ட் டிரம்ப் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நவம்பர் 5-ம் தேதியை (அதிபர் தேர்தல்) நினைவில் வைத்து கொள்ளுங்கள். அது நமது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். என்னை மீண்டும் அதிபராக தேர்வு செய்யவில்லை என்றால் ரத்தக்களறி ஏற்படும் என தெரிவித்தார்.
மெக்சிகோவில் கார்களை தயாரித்து அமெரிக்கர்களுக்கு விற்கும் சீனத் திட்டத்தை விமர்சித்தபோது அவர் இவ்வாறு கூறினார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தக் கார்களை அவர்களால் விற்க முடியாது. நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அது ஒட்டுமொத்த ரத்தக்களறியாக இருக்கும் என்றார்.
இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் கூறுகையில், அவர் மற்றொரு ஜனவரி 6-ம் தேதியை விரும்புகிறார். அமெரிக்க மக்கள் இந்த நவம்பரில் அவருக்கு மற்றொரு தேர்தல் தோல்வியைக் கொடுக்கப் போகிறார்கள். ஏனெனில் மக்கள் அவரது பயங்கரவாதம், வன்முறை மீதான அவரது பாசம் மற்றும் பழிவாங்கும் தாகம் ஆகியவற்றை நிராகரித்து வருகின்றனர் என தெரிவித்தார்.
- வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மேலும் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றார்.
- தகவலறிந்ததும் போலீசார், தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க நடவடிக்கையில் இறங்கினர்.
அமெரிக்காவின் வடக்கு பிலடெல்பியா புறநகர் பகுதியான லெவிட்டவுனில் உள்ள ஒரு வீட்டுக்கு முன் துப்பாக்கியுடன் புகுந்த வாலிபர், அங்கிருந்த 55 வயது பெண் மற்றும் 13 வயது சிறுமி ஆகிய 2 பேரை சுட்டுக்கொன்றார்.பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மேலும் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றார்.
இது குறித்து தகவலறிந்ததும் போலீசார், தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க நடவடிக்கையில் இறங்கினர். இதில் நியூ ஜெர்சி நகரில் பதுங்கியிருந்த அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆண்ட்ரே கார்டன் (வயது 26) என்பதும் அவர் தனது வளர்ப்புத்தாய் மற்றும் சகோதரியை சுட்டுக் கொன்றதும் தெரிய வந்தது.
டிராண்டன் பகுதியில் கார் ஒன்றை திருடிய ஆண்ட்ரே கார்டன், அதில் லெவிட்டவுன் பகுதிக்கு சென்று தனது உறவினர்களை சுட்டுக் கொன்றுள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- சிறப்பு ஆராய்ச்சி கப்பல் என்ற பெயரில் அந்த கப்பலை உருவாக்க பாகிஸ்தானுக்கு சீனா அதிகளவில் உதவியுள்ளது.
- சீனா தனது உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்தியது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் கடற்படையில் முதல் உளவு கப்பல் சேர்க்கப்படுகிறது. இதற்காக பாகிஸ்தானுக்கு சீனா உதவிகளை வழங்கியுள்ளது.
பி.என்.எஸ். ரிஸ்வான் என்ற 87 மீ நீளமுள்ள இந்த கப்பல், ஏவுகணைகள் ஏவுவதை கண்காணிப்பது, உளவுத் துறையின் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ளும் திறனை கொண்டதாகும்.
சிறப்பு ஆராய்ச்சி கப்பல் என்ற பெயரில் அந்த கப்பலை உருவாக்க பாகிஸ்தானுக்கு சீனா அதிகளவில் உதவியுள்ளது.

நவீன வசதிகள் கொண்ட இதுபோன்ற, கப்பல்களை அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய ஒரு சில நாடுகள் மட்டுமே வைத்துள்ளன. தற்போது பாகிஸ்தானுக்கு அந்த கப்பலை சீனா வழங்கி உள்ளது.
ஏற்கனவே சீனா தனது உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்தியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சமீபத்தில் மாலத்தீவுக்கு சீனாவின் உளவுக்கப்பல் வந்து சென்றுள்ளது. மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல் சுற்றி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு கப்பலை வழங்கி சீனா உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரஷியா, உக்ரைன் நாடுகள் இடையிலான போர் மூன்றாவது ஆண்டாக நடந்து வருகிறது.
- பேரழிவை சந்தித்தாலும் உக்ரைன் பதில் தாக்குதலால் ரஷியாவுக்கு அழிவை கொடுத்து வருகிறது.
மாஸ்கோ:
ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் பேரழிவை சந்தித்த போதிலும் பதில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு ரஷியாவுக்கு அழிவுகளைக் கொடுத்து வருகிறது.
இதற்கிடையே, உக்ரைன் ராணுவம் கடந்த சில மாதங்களாக ரஷியாவின் போர்க்கப்பல்களை டிரோன்கள் மூலம் தாக்கி வருகிறது.
போர் தொடங்கியதில் இருந்து 3 போர்க்கப்பலை உக்ரைன் மூழ்கடித்திருந்தது.
இந்நிலையில், உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலியாகினர் என்றும், பெல்கோரோடில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெல்கோரோட் கவர்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் ராணுவம் ரஷியாவின் பெல்கோரோடில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் தொடர்ந்து நடப்பதால் வணிக வளாகங்கள் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும். பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
- பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை போஸ்ட் மீது மோதினர்.
- நடவடிக்கையின் போது, ஆறு பயங்கரவாதிகளையும் சுட்டு கொன்றனர்.
ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இன்று 6 பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தியதில் இரண்டு அதிகாரிகள் உட்பட குறைந்தது ஏழு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஒரு கேப்டன் உள்பட ஐந்து வீரர்களுடன் கொல்லப்பட்டனர். மிர் அலி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் தாக்குதல் நடத்திய 6 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஐஎஸ்பிஆர் அறிக்கையின்படி," பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை போஸ்ட் மீது மோதியதாகவும், அதைத் தொடர்ந்து பல தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடந்தன.
அதைத் தொடர்ந்து நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையின்போது ஆறு பயங்கரவாதிகளையும் சுட்டு கொல்லப்பட்டனர்".
பயங்கரவாத தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் சையத் காஷிப் அலி மற்றும் கேப்டன் முகமது அகமது பதார் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
- உயிரிழந்த ராஜீவ் வாரிகோ, கனடாவில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டாவா:
கனடாவில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜீவ் வாரிகோ (வயது51). இவரது மனைவி ஷில்பா கோதா (47), மகள் மகேக் வாரிகோ (16).
இவர்கள் கனடாவின் பிராம்ப்டனில் உள்ள பிக்ஸ்கைவே அன்ட் வான்கிரிக் டிரைவ் பகுதியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர்.
அப்போது அங்கு ராஜீவ் வாரிகோ, ஷில்பா கோதா, மகேக் ஆகிய 3 பேரும் தீயில் கருகி பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. இது தொடர்பாக போலீசார், சந்தேகத்திற்கிடமான சம்பவம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி றார்கள்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி டாரின்யங் கூறும்போது, வீட்டில் தீப்பிடித்தது தற்செயலாக ஏற்படவில்லை என்று உயர் அதிகாரிகள் கருதியதால் சந்தேகத்திற்குரியதாக விசாரித்து வருகிறோம்.
தீ விபத்துக்கான சாத்தியமான காரணம் அதிகம் இல்லை. இவ்வழக்கு எங்கள் கொலைப்பணியகத்துடன் விசாரித்து வருகிறோம் என்றார். உயிரிழந்த ராஜீவ் வாரிகோ, கனடாவில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குஜராத்தை சேர்ந்த ஹெமில் என்ற வாலிபர், ரஷிய ராணுவத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
- ரஷியாவில் பணிபுரியும் மற்றொரு இந்தியரான இம்ரான் என்பவர் தெரிவித்தார்.
ரஷியாவில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக அழைத்து செல்லப்பட்டு இந்திய வாலிபர்கள் சிலரை அந்நாட்டு ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. உதவியாளர்களாக பணியில் சேர்க்கப்பட்ட அவர்கள் உக்ரைனுக்கு எதிராக போரில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையத்து இந்தியர்கள் சிலர் தங்களை மீட்கும்படி வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இதற்கிடையே சமீபத்தில் ரஷிய ராணுவத்தில் பணிபுரிந்த ஐதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்பான் (30) போரில் பலியானார்.

இந்த நிலையில் ரஷிய ராணுவத்தில் பணிபுரிந்த மேலும் ஒரு இந்திய வாலிபர் உயிரிழந்துள்ளார். குஜராத்தை சேர்ந்த ஹெமில் என்ற வாலிபர், ரஷிய ராணுவத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அவர் ரஷிய படைகள் கைப்பற்றிய கிழக்கு உக்ரைன் பிராந்தியமான டொனெட்ஸ்கில் உள்ள ராணுவ முகாமில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் போரில் ஏவுகணை தாக்குதலில் ஹெமில் பலியாகி விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை ரஷியாவில் பணிபுரியும் மற்றொரு இந்தியரான இம்ரான் என்பவர் தெரிவித்தார். போரில் இறந்த ஹெமில் உடலை மீட்டு கொண்டு வர வேண்டும் என்று அவரது தந்தை அஸ்வின் இந்திய தூதரகத்துக்கு பல முறை இ.மெயில் அனுப்பியதாக தெரிவித்தார்.






