அமெரிக்காவில் 3 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர்

வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மேலும் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றார். தகவலறிந்ததும் போலீசார், தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க நடவடிக்கையில் இறங்கினர்.
அமெரிக்காவில் 3 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர்
Published on

அமெரிக்காவின் வடக்கு பிலடெல்பியா புறநகர் பகுதியான லெவிட்டவுனில் உள்ள ஒரு வீட்டுக்கு முன் துப்பாக்கியுடன் புகுந்த வாலிபர், அங்கிருந்த 55 வயது பெண் மற்றும் 13 வயது சிறுமி ஆகிய 2 பேரை சுட்டுக்கொன்றார்.பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மேலும் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றார்.

இது குறித்து தகவலறிந்ததும் போலீசார், தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க நடவடிக்கையில் இறங்கினர். இதில் நியூ ஜெர்சி நகரில் பதுங்கியிருந்த அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆண்ட்ரே கார்டன் (வயது 26) என்பதும் அவர் தனது வளர்ப்புத்தாய் மற்றும் சகோதரியை சுட்டுக் கொன்றதும் தெரிய வந்தது.

டிராண்டன் பகுதியில் கார் ஒன்றை திருடிய ஆண்ட்ரே கார்டன், அதில் லெவிட்டவுன் பகுதிக்கு சென்று தனது உறவினர்களை சுட்டுக் கொன்றுள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com