என் மலர்tooltip icon

    உலகம்

    • நீரில் இருக்கும் ராட்சத முதலை உணவுக்காக வெளியே வருகிறது.
    • வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

    சிங்கம், புலி போன்ற ஆக்ரோஷமான விலங்குகளையும் கூட சில நாடுகளில் அனுமதி பெற்று வீடுகளில் வளர்த்து வருகிறார்கள். என்னதான் செல்லப்பிராணி போல அவற்றை வளர்த்தாலும் திடீரென அவை ஆவேசமாகி விடும். அதுபோல முதலையின் ஆக்ரோஷமும் பயங்கரமாக இருக்கும்.

    நீரிலும், நிலத்திலும் வசிக்கும் தன்மை கொண்ட முதலை திடீரென ஆவேசமாகும் காட்சிகள் இணையத்தில் வைரலாவது உண்டு. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த வாலிபர் ஒருவர் ராட்சத முதலைக்கு தனது வெறும் கைகளால் பயமின்றி உணவு அளிக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், நீரில் இருக்கும் ராட்சத முதலை உணவுக்காக வெளியே வருகிறது. அப்போது பயிற்சி பெற்ற நிபுணர் ஒருவர் தனது வெறும் கைகளால் அந்த ராட்சத முதலைக்கு உணவு அளிக்கிறார். அவரிடம் முதலை அடக்கமாக நடந்து கொள்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

    ஒரு பயனர், முதலைக்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என பதிவிட்டார். அதே நேரம் சில பயனர்கள், நன்கு பயிற்சி பெற்ற காட்டு விலங்குகளின் நடத்தையில் சில நேரங்களில் கணிக்க முடியாது என எச்சரித்தனர். மேலும் சில பயனர்கள், தங்கள் பதிவில் இதுபோன்ற சாகசங்கள் முட்டாள்தனமானது என விமர்சித்தனர்.  

    • இந்தோ-பசிபிக் பகுதியில், நான் குழந்தையாக இருக்கும் போது வசித்தது எனக்கு நன்றாக தெரியும்.
    • டிரம்பின் அமைதி, சுதந்திரம் மற்றும் செழிப்பு உள்ளிட்ட லட்சியங்களை அடைய வலுவான உறவுகள் அவசியம்

    அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அவரது அரசில் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் உள்ளார்.

    இந்நிலையில் அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, நான் இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

    இந்தோ-பசிபிக் பகுதியில், நான் குழந்தையாக இருக்கும் போது வசித்தது எனக்கு நன்றாக தெரியும். நான் ஜப்பான், தாய்லாந்து, இந்தியாவுக்குச் செல்வேன்.

    அதன்பின் அமெரிக்காவுக்கு திரும்பும்போது பிரான்சுக்கு செல்ல உள்ளேன். அதிபர் டிரம்பின் அமைதி, சுதந்திரம் மற்றும் செழிப்பு உள்ளிட்ட லட்சியங்களை அடைய வலுவான உறவுகள் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டபோது அவரை துளசி கப்பார்டை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • தான் மட்டும் இந்த சேவையை நிறுத்தினால் உக்ரைன் நாடு முடங்கும் என எலான் மஸ்க் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கிக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.
    • ரஷியா- உக்ரைன் போர் தொடர்பாக ஜெலன்ஸ்கிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    உலகம் முழுவதும் எக்ஸ் தளம் (ட்விட்டர்) நேற்று (மார்ச் 10) ஒரே நாளில் மூன்று முறை முடங்கியது.

    சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களைக் கண்காணிக்கும் Downdetector.com தரவுகளின் படி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் முதல்முறையாக எக்ஸ் தளம் முடங்கியது. 20 நிமிடங்கள் கழித்து 3.45 மணிக்கு பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் மாலை 7 மணிக்கு எக்ஸ் தளம் முடங்கியது.

    அதன்பின் மீண்டும் சரிசெய்யப்பட்டபோதும் மூன்றாவது முறையாக 8.45 மணிக்கு மீண்டும் தளத்தின் செயல்பாடுகள் முடங்கின. பல மணி நேரம் இந்த முடக்கம் நீடித்தது.

    இந்நிலையில் எக்ஸ் தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் உக்ரைன் உள்ளதாகவும் எக்ஸ் தளத்தின் முதலாளி எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.

     

    ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு மஸ்க் அளித்தப் பேட்டியில், "எக்ஸ் தளத்தின் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளது. அந்தத் தாக்குதல் உக்ரைன் பகுதியில் இருந்து நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கணினியின் ஐபி முகவரி உக்ரைன் நாட்டில் இருந்தே அது நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

    முன்னதாக தனது எக்ஸ் பதிவில் அவர், "எக்ஸ் தளத்தின் மீது அன்றாடம் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால் இது மிகப்பெரிய சைபர் தாக்குதல். இதன் பின்னணியில் மிகப்பெரிய வலை அல்லது ஒரு நாட்டின் தலையீடு இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். தற்போது உக்ரைன் தான் அந்த நாடு என மஸ்க் முடிவுகட்டியுள்ளார்.

    உக்ரைன் நாட்டில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. தான் மட்டும் இந்த சேவையை நிறுத்தினால் உக்ரைன் நாடு முடங்கும் என எலான் மஸ்க் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கிக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.

     

    ரஷியா- உக்ரைன் போர் தொடர்பாக ஜெலன்ஸ்கிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதன் பின்னணியில் எலான் மஸ்க் இந்த மிரட்டலை விடுத்திருந்தார். எனவே எலான் மஸ்க்கின் சவடாலை அடுத்து அவரின் எக்ஸ் தளம் தாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

    • அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார்.
    • இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    மொரிஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தின விழா நாளை (மார்ச் 12ம் தேதி ) நடக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார்.

    அந்நாட்டு தலைநகர் போர்ட் லூயிஸ் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கையில் இந்திய கொடியுடன் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    மொரிஷியஸ் நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இன்று மாலை அந்நாட்டு பிரதமர் நவீன் ராம்கூலத்தை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் அந்நாட்டு தலைவர்களையும் சந்தக்க இருக்கிறார்.

    நாளை நடைபெறும் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். இதில் இந்திய பாதுகாப்பு படையினரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலும் தேசிய தின விழாவில் பங்கேற்கிறது.

    • அமெரிக்க பங்குச்சந்தை தினமும் 200 புள்ளிகள் வரை சரிந்து வருகிறது.
    • அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 4 டிரில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    குறிப்பாக வரி விதிப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ளார். கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அந்த நாடுகள் பதிலடியாக அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதித்துள்ளது. மேலும் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இதற்கிடையே தனது வரி விதிப்பு நடவடிக்கையால் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அமெரிக்கப் பொருளாதாரம் மாற்றக் காலத்தில் இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.

    அவரது இந்த கருத்தை தொடர்ந்து உலகளவில் பங்குச்சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    பொருளாதார மந்தநிலை குறித்து முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்திருந்த பங்குகளை விற்பனை செய்வதை அதிகரித்தனர்.

    இதன்மூலம் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் அமெரிக்க பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 4 டிரில்லியன் டாலருக்கும் மேல் குறைந்தது. அமெரிக்க பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான எஸ்-பி 500, பிப்ரவரி 19-ந்தேதி அடைந்த வரலாற்று உச்சத்தில் இருந்து 8 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    இதனால் அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆசியாவிலும் பங்குச் சந்தைகள் சரிந்தன.

    சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது டிரம்ப் விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பால், ஆண்டுக்கு சுமார் 900 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பாதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    இதுபோன்ற சைபர் குற்றங்களில் ஈடுபட மறுப்பவர்கள் வேலை அளிப்பவர்களால் மின்சாரம் பாய்ச்சியும், பணயக்கைதிகளாகவும் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவ்வாறு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபட இந்தியாவில் இருந்து ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அந்த வரிசையில், வேலை வாங்கி தருவதாக கூறி மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மியான்மர் - தாய்லாந்து எல்லை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கால் சென்டரில் சைபர் குற்றங்களில் ஈடுபட பணியில் அமர்த்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

    தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை என அழைப்புகள் வந்தால் அது தொடர்பாக முழுமையாக விசாரித்துவிட்டு செல்ல வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    • உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகும்.
    • லக்சம்பர்க் இளவரசர் அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வந்தார்.

    லக்சம்பர்க் இளவரசர் ஃபிரெட்ரிக் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு அரிய வகை மரபியல் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார் என்று அவரது தந்தை இளவரசர் ராபர்ட் தெரிவித்தார். ஐரோப்பாவில் உள்ள குட்டி நாடு லக்சம்பர்க். இது உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகும்.

    இது குறித்து இளவரசர் ராபர்ட் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் மகன், POLG அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கிரியேடிவ் இயக்குநர், ஃபிரடெரிக் உயிரிழந்ததை நானும் என் மனைவியும் மிகவும் கனத்த இதயத்துடன் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    22 வயதான இளவரசர் ஃபிரடெரிக் பாரிசில் கடந்த மார்ச் 1-ம் தேதி உயிரிழந்தார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு அரிய வகை நோய்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் POLG அறக்கட்டளையை உருவாக்கினார்.

    அவருக்கு ஏற்பட்ட மரபியல் நோய் காரணமாக மூளை, நரம்புகள், தசைகள் மற்றும் கல்லீரல், கண்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்புக்கு இதுவரை முறையான சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மழைக்காலங்களில் பாதுகாப்பு கருதி அங்கு மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • 3 பேருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்காரா மாகாணத்தில் லோம்போக் தீவு அமைந்துள்ளது. அங்குள்ள ரிஞ்சானி தேசிய பூங்கா பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. அங்குள்ள ரிஞ்சானி மலை சாகச வீரர்களுக்கு உகந்த இடமாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர்.

    ஆனால் மழைக்காலங்களில் பாதுகாப்பு கருதி அங்கு மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 3 வாலிபர்கள் அங்கு சுற்றுலா சென்றிருந்தனர். சாகச வீரர்களான அவர்கள் தடையை மீறி ரிஞ்சானி மலை மீது ஏறினர்.

    இது அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்கள் 3 பேருக்கும் சுமார் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரிஞ்சானி தேசிய பூங்காவுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 13 பேர் கைது.
    • சிறைக்காவல் முடிந்து மல்லாகம் நீதிமன்றத்தில் காரைக்கால் மீனவர்கள் 13 பேர் அஜர் ஆகினர்.

    ரூ.3.25 லட்சம் அபராதம் கட்டினால் காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 13 பேரை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை செய்து செய்தது.

    சிறைக்காவல் முடிந்து மல்லாகம் நீதிமன்றத்தில் காரைக்கால் மீனவர்கள் 13 பேர் அஜர் ஆகினர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்திய இலங்கை நீதிபதி ரூ.3.25 லட்சம் அபராதம் கட்டினால் காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

    • உக்ரைன்- ரஷியா இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
    • ஒருவேளை போர் நிறுத்தம் ஏற்பட்டால் அதன்பின் ரஷியா மீண்டும் படையெடுத்தால் என்ன செய்வது என்ற அச்சம் உள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. தொடக்கத்தில் ரஷியா எல்லையில் உள்ள பகுதிகளை பிடித்தது. பின்னர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன பதிலடி கொடுத்தது. இதனால் பெரும்பாலான பகுதியில் இருந்து ரஷிய ராணுவம் பின்வாங்கியது.

    கடந்த 4 ஆண்டுகளாக இரு நாடுளுக்கும் இடையில் இந்த சண்டை நீடித்து வருகிறது. இரு நாடுகளும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்த நிலையில், மிகப்பெரிய அளவில் பொருட்சேதத்தையும் எதிர்கொண்டுள்ளன. உலகப் பொருளாதாரத்திற்கு ரஷியா-உக்ரைன் சண்டை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பதிவி ஏற்றார். அதன்பின் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறார். விரைவில் உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் எனத் தெரிகிறது.

    இதற்கிடையே வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது டொனால்டு டிரம்ப்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து உக்ரைனுக்கு வழங்கும் உதவியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார்.

    அதேவேளையில் பிரான்ஸ் ராணுவ உதவியை அதிகரிக்க முடிவு செய்தது. தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், பிற்காலத்தில் ரஷியா மீண்டும் படையெடுக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது தொடர்பான அச்சம் உக்ரைன் மற்றும் உலக நாடுகளுக்கு உள்ளது.

    இதனால் ரஷியா போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஒருவேளை படையெடுத்தால், உக்ரைனுக்கு உதவுவதற்காக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

    இது தொடர்பாக நாளை பாரீஸ் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதில் 30 நாட்டிற்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என பிரான்ஸ் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்த கூட்டத்தின் முதற்பகுதியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் திட்டம் குறித்து விவரிக்கப்படும். அதன்பின் மற்ற நாடுகளின் பாதுகாப்புப்டையில் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

    திடீரென ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் ஒரு சில மணி நேரத்திற்குள் அல்லது ஓரிடு நாட்களில் உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை அனுப்புவதுதான் பாதுகாப்புப் படையின் முதன்மையான நோக்கமாகும்.

    இந்தப் படையில் நாடுகள் பங்கேற்குமா? என்பது குறித்த இறுதி முடிவு அரசியல் மட்டத்தில், அரசாங்கத் தலைவர்களால் எடுக்கப்படும்.

    • அவர்களின் பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு வடகொரியா தனது ஏவுகணைகளை ஏவி கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.
    • போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுவீசி 30 பேர் காயமடைந்தனர்,

    வட கொரியா கடலுக்குள் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

    இன்று, தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்கள் வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சியைத் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு நாடுகளின் படைகளும் தங்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் திறன்களை வெளிப்படுத்தும்.

    இந்த இராணுவப் பயிற்சி இந்த இரு படைகளின் வருடாந்திர பயிற்சியின் ஒரு பகுதியாகும். இருப்பினும், இது தாக்குதலுக்கு முந்தைய ராணுவப் பயிற்சி என கூறி, வட கொரியா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

    எனவே அவர்களின் பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு வடகொரியா தனது ஏவுகணைகளை ஏவி கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.

    இந்த ஏவுகணைகள் ஹ்வாகி மாகாணத்திலிருந்து ஏவப்பட்டன. வருடத்தில் ஐந்தாவது முறையாக வடகொரியா இதுபோன்ற ஏவுகணைகளை கடற்பகுதியில் ஏவியுள்ளது என்று தென் கொரியாவின் கூட்டு ராணுவத் தலைவர் தெரிவித்தார்.

    தென் கொரியா - அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சியை எதிர்த்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வெளியே போராட்டம் நடந்து வருகிறது. இந்த பயிற்சி நாட்டில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதால் அதை நிறுத்த போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

     

    கடந்த வாரம் ஒரு பயிற்சியின் போது, வட கொரிய எல்லையில் உள்ள போச்சான் பகுதியில் இரண்டு தென் கொரிய KF-16 போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுவீசின.

     

    இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் கூட்டு ராணுவ பயிற்சியும், கடலில் வடகொரியாவின் ஏவுகணை வீச்சும் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    • X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் பலர் புகாரளித்தனர்.
    • சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளம் Downdetector

    முன்னணி சமூக ஊடகமான எக்ஸ் X தளம் உலகம் முழுவதும் முடங்கியது. இன்று (மார்ச் 10) திங்கட்கிழமை, பிற்பகல் 3:15 மணியளவில், எக்ஸ் தளத்தை அணுகுவதில் பயனர்கள் சிரமங்களைச் சந்தித்தனர்.

    X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் புகாரளித்தனர். சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளமான Downdetector இன் கூற்றுப்படி, பிற்பகல் 3:30 மணியளவில் சுமார் 2,500 பயனர்கள் X இல் சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர்.

    இருப்பினும், செயலிழப்பு குறித்து X நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. பின்னர் பிற்பகல் 3:45 மணியளவில் எக்ஸ் சேவைகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

    அதன்பின் செயலி மற்றும் வலைத்தளத்தில் மீண்டும் உள்நுழைய முடிந்தது. X இதுபோன்ற செயலிழப்புகளை சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, இந்த தளம் பல முறை முடங்கி மீண்டுள்ளது. கடந்த 2022 இல் இந்த ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதற்கு உலக பணக்காரர் எலான் மஸ்க் எக்ஸ் என பெயர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.  

    ×