என் மலர்tooltip icon

    உலகம்

    • ஈரானில் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது
    • அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம்

    அமெரிக்க ராணுவம் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை), ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

    ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து, போரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டோம் என ஏமன் ராணுவம் அறிவித்துள்ளது.

    செங்கடல் பகுதியில் உள்ள கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏமன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யத் அப்பாஸ் அரக்சி, ரஷியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இஸ்தான்புல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர், "நாளை ரஷிய அதிபர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளேன். ரஷியாவுடன் இணைந்து செயல்படுவோம்" என்று தெரிவித்தார். 

    • அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம்.
    • அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம்.

    அமெரிக்க ராணுவம் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை), ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது. தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ஈரானுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது" என தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நேற்று பாகிஸ்தான் பரிந்துரை செய்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

    • ஈரானில் உருவாகி வரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
    • குடிமக்களை பாதுகாக்க மாகாண மற்றும் மத்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

    அமெரிக்க இராணுவம், ஈரானில் உள்ள இஸ்ஃபஹான், ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின.

    இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் டிசி ஆகியவற்றில் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கை நிலையில் உள்ளன.

    இந்த நகரங்களில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளன.

    நியூயார்க் நகர காவல்துறை (NYPD) வெளியிட்டுள்ள அறிவிப்பில், நகரின் மத, கலாச்சார மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானில் உருவாகி வரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள மத்திய படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் NYPD கூறியுள்ளது.

    வாஷிங்டன் டிசியின் பெருநகர காவல்துறை (Metropolitan Police Department) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணித்து வருவதாகவும், குடிமக்களை பாதுகாக்க மாகாண மற்றும் மத்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றாலும், மத தளங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை (LAPD) - யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை அதிகரித்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் தெரிவித்துள்ளார்.

    தற்போது நம்பகமான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றும், ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நிலைமை மேலும் மோசமடைந்தால் பேரழிவுகரமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
    • ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    ஈரான் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இது ஒரு ஆபத்தான திருப்புமுனை என்றும், மத்திய கிழக்கில் இராணுவத் தலையீடுகள் நீண்டகால மோதல்களுக்கும் பிராந்திய ஸ்திரமின்மைக்கும் வழிவகுக்கும் என்றும் சீனா அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்துள்ளது.

    பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்கும் இராஜதந்திர அணுகுமுறையே ஸ்திரத்தன்மைக்கு சிறந்த வழி என்று கூறியுள்ளது.

    ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், அமெரிக்காவின் தாக்குதல் மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்தார். நிலைமை மேலும் மோசமடைந்தால் பேரழிவுகரமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

    பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு இல்லை. ஒரே வழி இராஜதந்திரமே என்று கூறி, பதற்றத்தைத் தணிக்க அனைத்து உறுப்பு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார்.

    அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் அதிபர் டிரம்பின் நடவடிக்கையை அரசியலமைப்புக்கு எதிரானது என்று கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

    அங்கீகரிக்கப்படாத மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கை என்று கூறியதுடன், மத்திய கிழக்கில் ஒரு பேரழிவு தரும் போரில் அமெரிக்கா சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதாக எச்சரித்தனர். எந்தவொரு எதிர்மறையான விளைவுகளுக்கும் டிரம்ப் தனிப்பட்ட முறையில் பொறுப்பு என்று தெரிவித்தனர்.

    சவுதி அரேபியா, அமெரிக்கா ஈரானிய அணுசக்தி வசதிகளைத் தாக்குவதைக் பெரும் கவலையுடன் கவனிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

    இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    ஈரானின் அணுசக்தி திட்டம் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும், அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும், அமெரிக்கா அந்த அச்சுறுத்தலைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். பதற்றத்தைத் தணித்து இராஜதந்திர தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    ஆஸ்திரேலியா,ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், பதற்றத்தைத் தணித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

    • எரிபொருள் செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ மீது அமெரிக்கா "பங்கர்-பஸ்டர்" குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தது.
    • மூன்று அணுசக்தி தளங்களிலும் கதிர்வீச்சு மாசுபாட்டின் அறிகுறிகள் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

    ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

    இதனால் டெல் அவிவ், ஹைஃபா உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தது 11 பேர் காயமடைந்தனர்.

    ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி 30 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஈரானிய அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ மீது அமெரிக்கா "பங்கர்-பஸ்டர்" குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தது.

    மேலும், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் சுமார் 30 டோமஹாக் ஏவுகணைகளை ஏவியுள்ளன.

    தாக்குதல்களுக்குப் பிறகு கதிர்வீச்சு குறித்த அச்சங்கள் எழுந்தாலும், மூன்று அணுசக்தி தளங்களிலும் கதிர்வீச்சு மாசுபாட்டின் அறிகுறிகள் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஈரானின் தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் ராணுவமும் ஈரான் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளது. 

    • அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
    • அணுசக்தி மேம்பாட்டை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

    அமெரிக்க ராணுவம் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை), ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

    இது தொடர்பாக ஈரான் தரப்பில் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை.

    அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை. செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அணுசக்தி மேம்பாட்டை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.

    • ஒரே கடவுச் சொல்லை பல்வேறு இணைய கணக்குகளுக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.
    • கடவுச்சொல்லை நினைவுகூருவதில் சிரமம் இருப்பவா்கள் அதை பிரத்யேகமாக வேறு தளங்களில் சேமித்து வைக்கலாம்.

    உலகம் முழுவதும் கூகுள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களின் 160 கோடி கணக்குகளின் 'கடவுச்சொல்' கசிந்துள்ளதாக கூறப்படும் நிலையில் தங்கள் இணையக் கணக்குளின் கடவுச்சொல்லை பயனாளா்கள் விரைவாக மாற்றுமாறு இணைய நிபுணா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

    மேலும், கசிந்துள்ள முக்கியத் தகவல்களை சைபா் குற்றவாளிகள் பல்வேறு குற்றங்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவா்கள் எச்சரித்துள்ளனா்.

    ஐரோப்பியாவைச் சோ்ந்த 'சைபா்நியூஸ்' ஆய்வாளா்கள் அண்மையில் இணைய தரவுகளின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை சமா்ப்பித்தனா்.

    அதில், '30 தரவுதளங்களில் இருந்து கூகுள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மின்னஞ்சல் முகவரி என உலகளவில் 160 கோடி இணையக் கணக்குகளின் கடவுச்சொல் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் கசிந்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.



    தற்காலத்தில் ஒருவரே பல சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்துவதால் ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் பெருமளவில் கசிந்திருக்க வாய்ப்புள்ளது. இதை சைபா் குற்றவாளிகள் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தக்கூடும் என்பதால் இணையவாசிகள் முதலில் தங்கள் கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தப்படுகிறது.

    குறிப்பாக ஒரே கடவுச் சொல்லை பல்வேறு இணைய கணக்குகளுக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும். ஒவ்வொரு கணக்குக்கும் வெவ்வேறு கடவுச்சொல்லை உருவாக்குவதன் மூலம் தங்களின் இணையக் கணக்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய முடியும்.

    கடவுச்சொல்லை நினைவுகூருவதில் சிரமம் இருப்பவா்கள் அதை பிரத்யேகமாக வேறு தளங்களில் சேமித்து வைக்கலாம். அதேபோல் கைப்பேசி, மின்னஞ்சல் என பன்முக அங்கீகார முறையையும் ஏற்படுத்திக் கொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • நிலத்துக்கு அடியில் உள்ள அணுசக்தி நிலையத்தை குறிவைத்து 6 குண்டுகள் வீசப்பட்டன.
    • இதில் 5,300 பவுண்டுகள் எடையுள்ள வெடிபொருட்கள் பயன்படுத்தப்படும்.

    ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்பட 3 முக்கிய அணு நிலையங்களை அமெரிக்கா எப்படி தாக்கியது, எந்த வகை குண்டுகளை பயன்படுத்தியது என்பது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா வின் பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் நேற்று மாலையே ஈரானுக்கு புறப்பட்டு சென்றன.

    நிலத்தடியில் உள்ள இலக்குகளை அழிக்கும் 15 டன் எடை கொண்ட குண்டு களை சுமந்து சென்றன. இந்த விமானங்கள் ஈரானுக்குள் அதிரடியாக புகுந்து அங்குள்ள அணு நிலையங்கள் மீது குண்டுகளை வீசியது. போர்டேர் பகுதியில் நிலத்துக்கு அடியில் உள்ள அணுசக்தி நிலையத்தை குறிவைத்து 6 குண்டுகள் வீசப்பட்டன.

    மற்ற 2 அணுசக்தி தளங்கள் மீது 30 டோமா ஹாக் ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்த போர் விமானங்களை பயன்படுத்தி பங்கர் பஸ்டர் எனப்படும் ஜி.பி.யு-57 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப் பட்டது.

    அதிக எடை கொண்ட இந்த வகை குண்டுகளை சுமந்து செல்ல பாமர் வகை விமானங்கள் தேவைப்படும். இதையடுத்து அமெரிக்காவின் மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்தில் இருந்து பி-2 ஸ்பிரிட்ரக ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் நேற்று மாலை குவாம் பகுதியில் உள்ள விமானப் படை தளத்துக்கு புறப்பட்டு சென்றது.

    இங்கிருந்து 8-க்கும் மேற்பட்ட குண்டுகள் கொண்ட ஸ்டெல்த் விமானங்கள் புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியானது. அதிக எடை கொண்ட குண்டுகளை ஏற்றி சென்றதால், இந்த விமானங்கள் குறைந்த எரி பொருளுடன் புறப்பட்டது.

    இதனால் நடுவழியில் தான் கூடுதல் எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போதே ஈரான் மீது தாக்குதல் நடத்த போவது உறுதியானது. தாக்குதலுக்கு பயன்படுத் தப்பட்ட பங்கர் பஸ்டர் குண்டுகள் சுரங்கத்தில் உள்ள இலக்குகளை அழிக்கக் கூடியது.

    சுமார் 50 ஆயிரம்அடி உயரத்தில் இருந்து அதிகமான குண்டு வீசப்படுவதால் கடுமையான சேதங்கள் இருக்கும். அதிக உயரம் காரணமாக இந்த குண்டுகள் அதிக இயக்க ஆற்றலைப் பெற்று ஆழமாக ஊடுருவிச் செல்ல உதவுகிறது. இதன் மூலம் 200 முதல் 300 அடிக்கு கீழ் உள்ள இலக்குகளை கூட தாக்க முடியும். இதில் 5,300 பவுண்டுகள் எடையுள்ள வெடிபொருட்கள் பயன்படுத்தப்படும்.

    இதன் மூலம் பூமிக்கு அடியில் உள்ள ஆழத்தில் இருக்கும் அணு உலை அமைப்புகளை, இலக்கு களை தாக்க முடியும். அதன்படி ஈரானின் போர்டோவில் நிலத்தடியில் உள்ள அணு நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. துல்லிய தாக்குதல் பாணியில் ஈரானுக்குள் நுழைந்து, குறிப்பிட்ட தளங்களை மட்டும் தாக்கிவிட்டு அமெரிக்க போர் விமானங்கள் வெற்றிகரமாக வெளியேறின.

    நேற்று டிரம்ப் கூறும் போது, ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையத்தை அமெரிக்கா உதவியின்றி இஸ்ரேலால் தனியாக தாக்க முடியாது என்று கூறி இருந்தார்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை ஈரான் அணு நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் ஆகிய அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதாக அறிவித்திருந்தார்.
    • மாபெரும் ஈரானிய தேசத்திற்கு உறுதியளிக்கிறோம்

    ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

    அமெரிக்க இராணுவம் ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    இத்தாக்குதல் இன்று அதிகாலையில் நடந்தது. இந்நிலையில் இந்த தாக்குதலை ஈரான் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இருப்பினும் சேதத்தின் அளவு குறித்து ஈரான் தெளிவுபடுத்தவில்லை.

    இந்நிலையில் ஈரானிய அணுசக்தி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிரிகளின் தீய சதிகளுக்கு மத்தியிலும், ஆயிரக்கணக்கான புரட்சிகர விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் முயற்சிகளுடன், அணுசக்தி தியாகிகளின் இரத்தத்தின் விளைவாக கிடைத்த இந்த தேசியத் தொழிலின் (அணுசக்தி) வளர்ச்சியை நிறுத்த அனுமதிக்காது என்று மாபெரும் ஈரானிய தேசத்திற்கு உறுதியளிக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் தாக்குதல்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி எச்சரித்துள்ளார்.

    மேலும் "ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா, ஈரானின் அமைதியான அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதன் மூலம் ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் NPT ஆகியவற்றை கடுமையாக மீறியுள்ளது" என்று கூறிய அவர் ஐநா சாசனத்தின் படி தன்னை தர்க்கத்துக் கொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்து, கதிர் வீச்சுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்று ஈரானின் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தியதாக ஈரானிய அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் பொது மக்களுக்கு பாதிப்பு இருக்காது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று, ஈரானுக்கு அதன் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தைக்கு திரும்ப அதிகபட்சம் இரண்டு வாரங்கள் கால அவகாசம் அளித்துள்ளதாக டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    கடந்த ஜூன் 13 அன்று, இஸ்ரேல் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. இதில் பல உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. மேலும் சில ஈரானிய ராணுவத் தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

    • விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்ட சூழலில் காமேனி பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார்.
    • மறைந்த அதிபர் இப்ராஹிம் ரைசி கமேனியின் வாரிசு என்று கூறப்பட்டது.

    ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் சூழலில் அந்நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா காமேனி பாதுகாப்பாக ஒரு ரகசிய நிலத்தடி பதுங்கு குழிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

    அனைத்து வகையான மின்னணு தகவல்தொடர்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நம்பகமான உதவியாளர் மூலம் மட்டுமே இராணுவத் தளபதிகளுக்கு செய்திகள் அனுப்பப்படுவதாகவும் தெரிகிறது.

    காமேனி இன்னும் இந்த உலகில் இருக்க கூடாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார். மேலும் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் சில விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்ட சூழலில் காமேனி பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    இந்த சூழலில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்குப் பின் உயர் தலைவர் பதவிக்கு மூன்று மூத்த மதத் தலைவர்களின் பெயர்களை காமேனி பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மேலும் அந்த பட்டியலில் அவரின் மகன் பெயர் இடம்பெறவில்லை. கடந்த காலத்தில், மறைந்த அதிபர் இப்ராஹிம் ரைசி கமேனியின் வாரிசு என்று கூறப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டர் விபத்தில் அவர் இறந்தது அந்த ஊகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இப்போது, காமெனியின் சொந்த மகன், திரைக்குப் பின்னால் ஒரு முக்கிய நபராகக் கருதப்படும் மோஜ்தபாவும் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அமெரிக்கா உண்மையிலேயே நிகரற்றதாக இருந்துள்ளது. பூமியில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அது செய்துள்ளது
    • அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் தாக்கப்பட்டது.

    ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    "வாழ்த்துக்கள், அதிபர் டிரம்ப். அமெரிக்காவின் வலிமையால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைக்கும் உங்கள் துணிச்சலான முடிவு வரலாற்றை மாற்றும்" என்று தனது உரையில் நேதன்யாகு நெகிழ்ந்தார். 

    டிரம்ப் தலைமை "மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் செழிப்பு மற்றும் அமைதியான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வரலாற்றின் ஒரு மையப்புள்ளியை உருவாக்கியுள்ளது" என்று கூறிய நேதன்யாகு தாக்குதல் முடிந்தவுடன் அதிபர் டிரம்பிடம் இருந்து தனக்கு உடனடியாக அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.

    "ஆபரேஷன் ரைசிங் லயன், இஸ்ரேல் உண்மையிலேயே அற்புதமான காரியங்களைச் செய்துள்ளது. ஆனால் ஈரானின் அணுசக்தி வசதிகளுக்கு எதிரான இன்றைய நடவடிக்கையில், அமெரிக்கா உண்மையிலேயே நிகரற்றதாக இருந்துள்ளது. பூமியில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அது செய்துள்ளது," என்று நேதன்யாகு சிலாகித்தார்.

    இந்திய நேரப்படி இன்று அதிகாலையில், அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் இஸ்ஃபஹான் (Isfahan) ஆகிய மூன்று அணுசக்தி வசதிகள் மீது தாக்குதல் நடத்தியது.

    ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  

    • அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
    • பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் எங்கள் நோக்கமாகும்.

    ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

    அமெரிக்காவின் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்த தாக்குதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம். அமெரிக்க தாக்குதல்களில் ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் முற்றிலும் முழுமையாகவும் அழிக்கப்பட்டன.

    ஈரானை தாக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஒரு குழுவாக செயல்பாட்டோம். ஈரானின் அணு சக்தி செறிவூட்டல் திறனை நிறுத்தவும், அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்தவும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    ஈரான் இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும். எங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    ஈரானுக்கு அமைதி அல்லது சோகம் ஆகிய வற்றில் ஒன்றில் ஒரு தேர்வு மட்டுமே உள்ளது. மத்திய கிழக்கு பகுதியை கொடுமைப்படுத்தும் நபராக ஈரான் உள்ளது. அந்த நாடு அமைதியை ஏற்படுத்தவில்லை என்றால் கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்படும்.

    கடந்த 8 நாட்களில் நாம் கண்டதை விட மிகப்பெரிய அமைதி ஏற்படும் அல்லது ஈரானுக்கு மிகப்பெரிய சோகம் ஏற்படும். இன்னும் பல இலக்குகள் குறி வைக்கப்பட்டு உள்ளன. அமைதி விரைவாக வரவில்லை என்றால் மற்ற இலக்குகளை துல்லியம், வேகம் மற்றும் திறமையுடன் நாங்கள் தாக்குவோம்" என்று கூறினார்.

    ×