என் மலர்
நீங்கள் தேடியது "Password"
- ஒரே கடவுச் சொல்லை பல்வேறு இணைய கணக்குகளுக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.
- கடவுச்சொல்லை நினைவுகூருவதில் சிரமம் இருப்பவா்கள் அதை பிரத்யேகமாக வேறு தளங்களில் சேமித்து வைக்கலாம்.
உலகம் முழுவதும் கூகுள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களின் 160 கோடி கணக்குகளின் 'கடவுச்சொல்' கசிந்துள்ளதாக கூறப்படும் நிலையில் தங்கள் இணையக் கணக்குளின் கடவுச்சொல்லை பயனாளா்கள் விரைவாக மாற்றுமாறு இணைய நிபுணா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
மேலும், கசிந்துள்ள முக்கியத் தகவல்களை சைபா் குற்றவாளிகள் பல்வேறு குற்றங்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவா்கள் எச்சரித்துள்ளனா்.
ஐரோப்பியாவைச் சோ்ந்த 'சைபா்நியூஸ்' ஆய்வாளா்கள் அண்மையில் இணைய தரவுகளின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை சமா்ப்பித்தனா்.
அதில், '30 தரவுதளங்களில் இருந்து கூகுள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மின்னஞ்சல் முகவரி என உலகளவில் 160 கோடி இணையக் கணக்குகளின் கடவுச்சொல் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் கசிந்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.

தற்காலத்தில் ஒருவரே பல சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்துவதால் ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் பெருமளவில் கசிந்திருக்க வாய்ப்புள்ளது. இதை சைபா் குற்றவாளிகள் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தக்கூடும் என்பதால் இணையவாசிகள் முதலில் தங்கள் கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக ஒரே கடவுச் சொல்லை பல்வேறு இணைய கணக்குகளுக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும். ஒவ்வொரு கணக்குக்கும் வெவ்வேறு கடவுச்சொல்லை உருவாக்குவதன் மூலம் தங்களின் இணையக் கணக்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய முடியும்.
கடவுச்சொல்லை நினைவுகூருவதில் சிரமம் இருப்பவா்கள் அதை பிரத்யேகமாக வேறு தளங்களில் சேமித்து வைக்கலாம். அதேபோல் கைப்பேசி, மின்னஞ்சல் என பன்முக அங்கீகார முறையையும் ஏற்படுத்திக் கொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- இந்திய அளவில் ‘123456’ கடவுச்சொல் முதலிடத்தில் உள்ளது.
- ஒரு கணக்கில் ஊடுருவல் நடந்தால், மற்ற கணக்குகளுக்கும் ஆபத்து உண்டாகும்.
புதுடெல்லி:
வங்கிகளின் இணையதள சேவை மற்றும் பல்வேறு துறைகளின் சேவைகளை பெற நமது பெயரில் தனிக்கணக்கை உருவாக்கி, அதற்கென கடவுச்சொல் உருவாக்குகிறோம்.
இணைய குற்றவாளிகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக, எளிதில் யூகிக்க முடியாதபடி கடவுச்சொல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், பயனாளிகள் கடவுச்சொற்களை உருவாக்க உதவும் 'நார்டுபாஸ்' என்ற சாப்ட்வேர் நிறுவனம், கடவுச்சொல் குறித்த ஆய்வை நடத்தியது. 35 நாடுகளின் பயனாளிகள் கணக்குகளில் திருட்டு வைரஸ்களை பயன்படுத்தி கடவுச்சொற்களை திருடி எடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும், பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை என்று 'நார்டுபாஸ்' நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இணைய பாதுகாப்பு நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், உலகிலேயே மிகவும் பொதுவான கடவுச்சொல் '123456' என்று தெரிய வந்துள்ளது. சுமார் 45 லட்சம் கணக்குகளில், இதை கடவுச்சொல்லாக பயன்படுத்தி வருகின்றனர். இதை பயன்படுத்தி, இணைய குற்றவாளிகள் ஒரு வினாடிக்குள் அந்த கணக்குகளுக்குள் ஊடுருவி விடுவார்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக, 'அட்மின்' என்ற கடவுச்சொல் 40 லட்சம் கணக்குகளிலும், '12345678' என்ற கடவுச்சொல் 13 லட்சத்து 70 ஆயிரம் கணக்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
அதுபோல், இந்திய அளவிலும் '123456' கடவுச்சொல் முதலிடத்தில் உள்ளது. 3 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. 'அட்மின்' கடவுச்சொல், 1 லட்சத்து 20 ஆயிரம் கணக்குகளில் பயன்படுத்தப்படுகிறது.
உலகிலேயே மிகவும் மோசமான கடவுச்சொல், '123456' தான் என்று 'நார்டுபாஸ்' இணையதளம் வர்ணித்துள்ளது.
அது மேலும் கூறியிருப்பதாவது:-
பாஸ்வேர்டுகளை எவ்வளவு வலிமையானதாக அமைத்தாலும், திருட்டு வைரஸ்களின் தாக்குதல், கணக்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.
ஆகவே, பயனாளிகள், குறைந்தபட்சம் 20 எழுத்துகளில் சிக்கலான கடவுச்சொற்களை உருவாக்க வேண்டும். அவற்றில், பெரிய எழுத்து, சிறிய எழுத்து, எண்கள், சிறப்பு குறியீடுகள் ஆகியவை கலந்திருக்க வேண்டும். ஒரே கடவுச்சொல்லை ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளுக்கு பயன்படுத்த வேண்டாம்.
ஏனென்றால், ஒரு கணக்கில் ஊடுருவல் நடந்தால், மற்ற கணக்குகளுக்கும் ஆபத்து உண்டாகும். அடிக்கடி கடவுச்சொற்களை மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த இணையதளம் கூறியுள்ளது.







